அரசியல்

மோடி பேச்சு: யோக்கியன் வருகிறான் சொம்ப எடுத்து உள்ள வை !!??

செய்தியும் சில கேள்விகளும் – 3

மும்பையில் ‘மகா கர்ஜனா’  (இப்ப எல்லாமே அவர்களுக்கு மகா திட்டமிடல்தான்) என்ற பெயரில் பாஜக பொதுக்கூட்டம்  நடத்தியது. இது குறித்து இன்றைய செய்தி தாள்களில் வந்த செய்தி முதலில்….

அக்கூட்டதில்  பங்கேற்றுப் பேசிய நரேந்திர மோடி,

“காங்கிரஸின் மிகப் பெரிய தலைவர் (ராகுல் காந்தி) பேச்சை சனிக்கிழமை கேட்டேன். அவர் ஊழலுக்கு எதிராகப் பேசினார். அவரது கட்சியினர்தான் ஊழலில் திளைக்கிறார்கள். உண்மை நிலை அப்படியிருக்க, அவரது பேச்சை மக்கள் புரிந்துகொள்வார்கள்.

ஆதர்ஷ் குழுவின் அறிக்கை, அமைச்சர்களைச் சுட்டிக்காட்டுகிறது. ஆனால், காங்கிரஸ் அரசோ தனது ஊழல் கறை படிந்த தலைவர்களை காக்கும் வேலையில் ஈடுபடுகிறது. காங்கிரஸ் சொல்வது ஒன்று; செய்வது ஒன்று என்பது தெளிவாகிறது” என்றார்.

காங்கிரஸ் கட்சி பிரித்தாளும் கொள்கையுடன் நாட்டை ஆள்வதாக குற்றம்சாட்டிய மோடி, அக்கட்சி தொடர்ந்து வாக்கு வங்கி அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும், காங்கிரஸ் இல்லாத ஆட்சியை வரவேற்க நாட்டு மக்கள் தயாரக உள்ளதாகவும் கூறினார்.

மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால், மூன்றே ஆண்டுகளில் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணம் இந்தியாவுக்கு கொண்டு வரப்படும். வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கறுப்புப் பணத்தை மீட்பதில் காங்கிரஸ் அரசுக்கு அக்கறை இல்லை.

மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி அமைந்தால், மூன்றே ஆண்டுகளில் கறுப்புப் பணத்தை இந்தியாவுக்கு மீட்டு வரும். அவ்வாறு வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்டு வந்தால், இந்தியாவில் வறுமை இல்லாத நிலையை ஏற்படுத்த முடியும்” என்றார்.

மேலும், காங்கிரஸ் அரசு நாட்டில் பிரிவினையை ஏற்படுத்த முயற்சி செய்து வருவதாகவும், அப்பிரிவினையை ஆங்கிலேயர்களிடம் காங்கிரஸ் இருந்து கற்றுக்கொண்டதாகவும் கூறினார். காங்கிரஸ் ஆட்சியில் சாமானிய மக்கள் கடுமையான பாதிப்பு அடைந்துள்ளனர் என்றும், நாட்டில் நிலவும் முக்கிய பிரச்சினைக்கு காங்கிரஸ் அரசே காரணம் என்றும் மோடி குற்றம்சாட்டினார்.

உலகமகா உத்தமர் மோடியில் பேச்சு இதுதான்… சரி கேள்விகளுக்கு வருவோம்!

  • ஊழலில் சிகரம் தொட்ட காங்கிரஸ்  ஊழல் குறித்து பேச பா.ஜ.கட்சிக்கு தார்மீக உரிமை உண்டா? கார்கில் போராட்டத்தில் உயிர் இழந்த  இவர்கள் ராணுவ வீரர்கள் குடும்பங்களுக்கு கட்டிய ஆதர்ஷ் குடியிருப்பில் காங்கிரஸ் ஊழல் எனில் அதில் மாண்டுபோன வீரர்களின் சவப்பெட்டி வாங்கியதில் முறைகேடு செய்த அயோக்கிய சிகாமணிகள் அல்லவா இவர்கள்!?
  • நாட்டை பிரித்தாள்வதில் காங்கிரஸ்  கட்சிக்கு  பா.ஜ.கட்சி அளவுக்கு அனுபவம் போதாது. ஏனெனில் பா.ஜ.கட்சி அடிப்படையிலேயே இந்த தேசத்தை மதத்தின் பெயரால் துண்டாட உருவாக்க ஆர்.எஸ்.எஸ் என்ற அமைப்பால் உருவாக்கப்பட்ட அரசியல் பிரிவு என்தை யாரும் மறுக்க முடியாது அல்லவா?
  • நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மூன்றே ஆண்டுகளில் கருப்பு பணத்தை வெளியே கொண்டு வருவோம் என்பதை,  தனது சிரிப்பை கட்டுபடுத்திக்கொண்டேதான் மோடி பேசி இருக்க வேண்டும். ஏனெனில் ஏற்கனவே பா.ஜ.கட்சி ஆட்சி செய்த 6 ஆண்டுகளில் செய்யாதது ஏன் என்று யாராவது கேட்பார்கள் என அவருக்கு தெரியும்.  அதுபோக இவரது கட்சி தலைவர்கள் கொள்ளையடித்த பணமும் இங்கேதானே இருக்கிறது. எனவே வடிவேலு சொல்வது போல இந்த பேச்சு ”சும்ம்ம்ம்மா”
கருப்பு பண முதலைகளை நம்பித்தானே இந்த தேர்தலில் இவர் கட்சி களம்காணுகிறது?
  • காங்கிரஸ் வெள்ளைக்காரர்களிடம் கற்றுக்கொண்ட பிரித்தாலும் சூழ்ச்சி அவர்களுக்கு கொள்ளையடிக்க மட்டுமே பயன்பட்டது, ஆனால் நாஜி ஹிட்லரிடம் பா.ஜ.கட்சி கற்றுக்கொண்ட நாஜிசம் அதன் வெளிப்பாடான பாசிச படுகொலைகள் இந்த தேசத்தின் ஆன்மாவை ஊனப்படுத்துவது இல்லையா? மத அடிப்படைவாதம் எந்த ஒரு ஊழல்வாதியையும் , நெறிமுறைகளற்ற மனிதனையும்   தேச பக்த பெயரால் காப்பாற்றுவது மிகவும் ஆபத்தான செயலல்லவா?
  • பா.ஜ. கட்சி – காங்கிரஸ் இரண்டுமே வீழ்த்தப்பட வேண்டிய சக்திகள் என்பதை இரு கட்சி தலைவர்களும் மாறிமாறி நிருபித்து வருவது தேசத்திற்கு நல்லதுதானே!

Related Posts