அரசியல் புதிய ஆசிரியன்

மாற்று அரசியலுக்கான தேவைகளின் காலம்

ஒரு தற்கொலையை முன்வைத்து 

எஸ்.வி. வேணுகோபாலன்
கஜேந்திர சிங் இப்படி செய்வார் என்று யாருக்குத் தெரியும்? ஆம் ஆத்மி கட்சி நடத்திக் கொண்டிருந்த புது தில்லி விவசாயிகள் பேரணியில் பங்கேற்க ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து வந்த அவர் எடுத்த கோரமான முடிவு அங்கே, அந்த இடத்தில் வைத்து எடுக்கப்பட்டது என்று யார் சொல்லக் கூடும்! தேச அளவில் அனைத்துக் கண்களும் தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கையில் சட்டென்று சுருக்கிட்டுக் கொண்டு சாவைத் தழுவிக் கொண்டார் அந்த மனிதர். தான் வாழ்ந்த காலம் அனைத்துக்கும் சேர்த்து இனி காலாகாலத்திற்குமான பேசுபொருள் ஆகிவிட்டார். விவசாயிகள் தற்கொலையை வெறும் செய்தியாக மட்டுமே வாசித்துக் கொண்டிருந்த தேசத்தின்முன் அதன் வேதனை துடிதுடிப்பை உணர வைக்கும்படி ஒருவர் செயலில் செய்துகாட்டத் துணிந்தது எத்தனை சாபமிக்க காலம்!
ஆனால், கஜேந்திராவின் மரணத்தை விடவும் வேதனை பெருக்குவது, இந்த விஷயத்தை காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதாவும் அணுகும் விதம்! ஒரு விவசாயியின் தற்கொலையை முன் வைத்து ஆர்ப்பாட்டமோ, மறியலோ மேற்கொள்ள இவர்களுக்கு என்ன தார்மீக உரிமை இருக்க முடியும்?
இன்னொரு பக்கம், எந்தப் பொறுப்பும், கடமை உணர்ச்சியும் இன்றி பேரணியைக் கையாண்ட ஆம் ஆத்மி கட்சி பற்றி என்ன சொல்வது? அவர்களது தத்துவார்த்த பலவீனமும், கட்சி அமைப்பின் விவேக பற்றாக்குறையும், வலிமையற்ற தன்மையும் எத்தனை துயரம் தரக் கூடியவை! தானே வரவழைத்துக் கொண்ட சங்கடத்தில் நெளியும் அர்விந்த் கேஜ்ரிவால், எதற்கு என்று தன்னை இப்போது நொந்து கொள்ள முடியும்? கேள்விகளாகக் கேட்டுக் கொண்டிருந்த அவரைச் சுற்றிலும் இப்போது அவர் எளிதில் பதில் சொல்ல முடியாத கேள்வி கள்….
கஜேந்திராவின் மரணம் மிகப் பெரிய குறியீடு. நமது சம கால அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் களத்தின் காட்சிகள் குறித்த மிக நெருங்கிய பார்வையை நமக்கு அதிர்ச்சி தரும் வண்ணம் வழங்கி இருக்கும் குறியீடு அது. யாரும் எதற்கும் பொறுப்பு ஏற்க வேண்டாம், ஆனால் யாரும் எதையும் சொந்தம் கொண்டாடிவிட முடியும். எந்தக் கேள்வியையும்யார் வேண்டுமானாலும் எழுப்ப முடியும். ஆனால் எந்தப் பதிலைச் சொல்லு மாறும் யாரிடத்தும் எதிர்பார்க்க முடி யாது. ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று லட்சம் தற்கொலைகள் அய்யா, மூன்று லட்சம்! நமது ஆட்சியாளர்கள் கடைப்பிடித்து வரும் கொள்கை களுக்கு அப்பாவி விவசாயிகளால் கொடுக்க முடிந்த பதில் இதுதான்! கஜேந்திரா சிங் முதலாவது பலி அல்ல! அதைக் கடைசி தற்கொலை என்றுகூட சொல்வதற்கில்லை. அன்றே அடுத்த சில நிமிடங்களில் அதே ராஜஸ்தான் மாநிலத்தைச் சார்ந்த மற்றொரு விவசாயி ஆள்வார் எனுமிடத்தில்ரயிலுக்கு முன் பாய்ந்து உயிரை விட்டார். பிரச்சனை யின் வேர்கள் எங்கே இருக்கின்றன?
பத்து ஆண்டுகளுக்குமுன் பாரத ஸ்டேட் வங்கியின் உயரதிகாரி ஒரு வர் ஊழியர்களது சிறப்புப் பயிற்சி வகுப்பில் உரையாற்றுகையில் இப் படி பேசி இருந்தாராம்: “அழகான வண்ணத்துப் பூச்சியைப் பார்க்கி றோம்…மகிழ்கிறோம். கொண்டாடு கிறோம். ஆனால் அது இந்த நிலை யை எட்டுமுன் என்னவாக இருந்தது? வெறும் புழு. கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சி அடைந்து கூட்டுப்புழு ஆகி பலநாள் சிரமங்களைச் சந்தித்து, பிறகு அந்தக் கூட்டை உடைத்துக் கொண்டு சிறகடித்துப் பறந்து வந்தது அல்லவா… அப்படித்தான் உங்கள் நிலைமையும்….சிறிது காலம் கடுமை யாக சிரமங்களை எதிர்கொள்வீர் கள்… சவாலான காலத்தை சந்திப்பீர் கள். தாங்க முடியாத பிரச்சனை களைக் கடக்க வேண்டி இருக்கும்.. ஆனால் நீங்கள் ஒரு வண்ணத்துப் பூச்சியாக சிறகடிக்கவும் செய்வீர் கள்… அதற்காக இந்தப் பிரச்சனை களை, சங்கடங்களை முணுமுணுப்பு இன்றி ஏற்றுக் கொள்ளுங்கள்”
1991 முதல் இப்படித்தான் சொல்லப்படுகிறது…எத்தனை ஏமாற்றுக் கதை இது! வேளாண் கொள்கையின் பிரதிபலிப்புதான் லட்சம் லட்சமாய் விவசாயிகள் ஊரைக் காலி செய்து கொண்டிருப் பது. வேறு கதியின்றி நம்பி விவசாயத் தைத் தொடர்பவர்கள், அன்றாடம் செத்துப் பிழைக்கின்றனர். அவர் களிலும் தாள மாட்டாத துயரத்தில் தத்தளிக்கும் சிலர் தற்கொலை உணர்வுக்கு ஆட்படுவதை ஒரு தனி மனித முடிவு என்று எப்படி சொல்வது?
வேளாண் துறை மட்டிலுமா… நகைத் தொழில் தொடங்கி, பங்குச் சந்தை, வர்த்தகம் வரை எந்தத் துறையானாலும் சொந்தக் கரம் நம்பி உழைத்துக் கொண்டிருக்கும் மனிதர் களை நம்பிக்கையின் விளிம்புக்குத் துரத்தும் ஆட்ட விதிகள், தனி நபர் வாழ்க்கையின் விதியாகி விடுமா? ஊதியத்தை அல்லது கூலியை விலைவாசி அன்றாடம் பரிகாசச் சிரிப் போடு பார்த்துக் கொண்டிருப்பது அவரவர் விதிப்பலனா அல்லது வாழ்க்கையின் தவப் பலனா? கல்வி யும் மருத்துவமும் அதிர்ஷ்டச் சீட்டு இருந்தாலே கதவு திறக்கும் என்றாக மாறிவிட்டது காலத்தின் சாபமா அல்லது சாபத்தின் காலமா ?
நுட்பமாக உருமாறிக் கொண்டி ருக்கும் இந்த விசித்திர விளையாட்டு, அடுத்தவரை உற்று நோக்கவோ, அடுத்தவர்பால் இரக்கம் காட்டவோ, அடுத்தவரை உடன் சேர்க்கவோ விடாது ஜனத்திரளை ஒற்றை ஒற்றை தனி மனிதர்களாகப் பிரித்துப் போட்டுக் கொண்டிருக்கிறது. தத் தமது வாழ்க்கை தனி மனிதர்களது லாட்டரிச் சீட்டு என்பதாகப் பார்க்கப் பழக்குகிறது. தன்னைச் சுற்றியே சிந்திக்க வைக்கும் இந்த உலகமய காலம் எல்லாத் திறவுகோல்களை யும் தொலைத்துவிட்டு வாழ்க்கை யின் இருளுக்குள் மூச்சுத் திணற தேடவும் விடுகிறது. ஜனநாயகசன்னல்களைத் திறந்து சுதந்திரக் காற்றை சுவாசிக்க வைக்க வழி செய்யத் தயாரில்லாத அரசியல் கட்சியினர், மேலும் குறுக லான பிரிவினைகளுக்குள் சிக்கி மூச்சுத் திணறவே வழிகாட்டிக் கொண்டிருக்கின்றனர். அவர்களது உரத்த சண்டைகளும், கூச்சல் விவா தங்களும் அமைதியான தேடலை அனுமதிக்காது திசைகளைச் சிதறடிக்கின்றன. அன்பை, அரவணைப்பை, பகிர்ந் துண்ணும் பரவசத்தை, கூட்டாகச் சிந்திக்கும் நல்லுணர்வை, விடியலுக் கான வெளிச்சமிக்க நம்பிக்கையை இடது பக்கத்திலிருந்து வீசும் இத மான காற்று அறைகூவிக் காட்டு கிறது. வேற்றுமையில் ஒற்றுமையைச் சாத்தியமாக்கி இருக்கும் நமது தேசத்தில் எந்த வேற்றுமையும் நமது ஒற்றுமையைச் சிதைக்கக் கூடா தென்று இடதுசாரித் தத்துவம் எச் சரிக்கை மணி ஒலிக்கிறது. நோய் நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் எப்படி என்பதைக் கற்பிக்கிறது. கஜேந்திர சிங் உடல்மீது அரசி யல் நடத்தும் பா ஜ க, காங்கிரஸ் போலவோ, பதில் சொல்லத் திணறிக் கொண்டிருக்கும் ஆம் ஆத்மி போல வோ அல்லாது மாற்று அரசியலை முன்வைக்கும் இடதுசாரி இயக்கம், மக்களுக்கான மாற்றுப் பொருளா தாரத் திட்டத்தையும் முன்வைத்துப் போராடிக் கொண்டிருக்கிறது. லாப வெறியின் பலி பீடத்தில் சாதாரண மக்களைத் தலை வைக்கச் சொல் லும் மோசமான இப்போதைய பொரு ளாதார கொள்கைதான் கஜேந்திர சிங்கையும், அதற்குமுன் தங்களை மாய்த்துக் கொண்ட லட்சக் கணக் கான அப்பாவிகளையும் பலி கொண் டது என்பதை உணரவைக்கிறது. இல்லானை இல்லாளும் வேண் டாள் மற்று ஈன்றெடுத்த தாய் வேண் டாள் என்று செல்லாக் காசாக மாற்றப் படும் தனிநபர் வாழ்க்கையின் சூத் திரக் கயிறு உள்ளபடியே பொதுவான பொரு ளாதார மோசடிக் கொள்கையின் முனையிலி ருந்தே ஆட்டுவிக் கப்படுகிறது. கட்சி களோ, தனி நபர் களோ மாறுவதால் மட்டும் இந்த நிலைமை மாறி விடாது, மாற்றம் என்பது கொள்கைகளில் தொடங்கப் படவேண்டும் என்பதையே வெடித்து நொறுங்கிக் கொண்டிருக்கும் உள் ளங்கள் எதிரொலித்துக் கொண் டிருக்கின்றன. உழவுக்கும்,தொழிலுக்கும் வந்தனை செய்யும் ஆரோக்கியமான மாற்றுக் கொள்கையை இடதுசாரிக் கட்சிகளே எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. உள்நாட்டு மூலதனமோ, அந்நிய மூலதனமோ உள்நாட்டு உழைப்பைச் சுரண்டவோ, பொழுதெல்லாம் நம் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ அனுமதிக்கக் கூடாது என்பதை வலி யுறுத்துகின்றன. கல்வியை இலவச மாக வழங்குவது அரசின் கடமை, வேலை வாய்ப்பைப் பெருக்காது வாங்கும் சக்தி பெருகாது, சந்தை யில் சுழற்சி இல்லாது உற்பத்தி தொடராது, இந்த இயங்கு விசை இல்லாமல் உண்மையான வளர்ச்சி சாத்தியமாகாது என்பதைத் தெளி வாக்குகின்றன. பசியும், பட்டினி யுமற்ற பாரதத்தை, ஊட்டச் சத்தின்றிப் பிறக்கும் குழந்தைகளும், பிரசவத் தில் மடியும் கர்ப்பிணிகளும் அற்ற ஓர் ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்கு என்ற இதயத் துடிப்பு வலு வாக அவர்களிடமிருந்து வெளிப்படு கிறது. மாற்றுக்கான முழக்கம் அது.
முன் எப்போதையும் விட முக்கி யத்துவமும், தேவையும் மிகுந்த குரலாக அது கேட்டுக் கொண்டிருக் கிறது. நமது காதுகள் மட்டுமின்றி உணர்வுகளும் விழிப்புற வேண்டிய தருணத்தை தேசம் இப்போது கடந்து கொண்டிருக்கிறது. கஜேந்திர சிங்கைக் காப்பாற்றத் தவறியது ஒற்றை இழப்பு அல்ல, தொடர் இழப்புகளுக்கான புள்ளி என்பதை மறைத்து எழுப்பப்படும் கள்ளத் தனமான கூச்சல்களை அடக்கி மாற்றுக்கான முழக்கத்தை எழுப்புங் கள் என்பதைத்தான் காலம் நம்மிடம் கை கூப்பிக் கோரி நிற்கிறது.
(sv.venu@gmail.com 94452 59691)

Related Posts