பிற

மாமேதைக்காக மாமேதையின் உறை

1991 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் லண்டன் செய்தி நிறுவனம் பி.பி.சி “கடந்த ஆயிரம் ஆண்டுகளின் தலைசிறந்த சிந்தனையாளர் யார்?” என உலகம் முழுவதும் நடத்திய கருத்திக் கணிப்பில், அதிக பெரும்பான்மையானோர் அளித்த பதிலின் அடிப்படையில் “கார்ல் மார்க்ஸ்” என தனது முடிவை வெளியிட்டது.

மனித குல வரலாற்றில் தத்துவம், அரசியல், பொருளாதாரம், சமூகம், அறிவியல், பெண்ணியம், கலை, இலக்கியம், பண்பாடு என அனைத்து தளங்களிலும் மாபெரும் மாற்றத்தை நிகழ்த்தி உழைக்கும் வர்க்கத்தை சுரண்டிக் கொளுக்கும் முதலாளித்துவத்தை வீழ்த்துவதற்க்கான தத்துவ ஆயுதங்களை நம் கரங்களில் தந்து “உலகத் தொழிலாளர்களே ஒன்றுசேருங்கள்!” என அறைகூவல் விடுத்த மாமேதை கார்ல் மார்க்ஸ் மறைந்த நாள் மார்சு 14, 1883.

மார்க்ஸின் மிக நெருங்கிய நண்பரும், அவருடன் இணைந்து கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, ஜெர்மானிய சித்தாந்த மற்றும் மார்கஸ் எழுதிய மூலதனம் பாகம் 2 மற்றும் 3 ஆகியவற்றை தொகுத்தவரான் பிரெடெரிக் ஏங்கல்ஸ் அவர்கள்,  மார்சு 17 ஆம் தேதி லண்டன் ஹைகேட் கல்லறையில் மார்க்ஸின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட போது “அரசுகள் அவை எதேச்சதிகார அரசுகளாயினும் சரி, குடியரசுகளாயினும் சரி, அவர்களுடைய பிரதேசங்களிலிருந்து அவரை வெளியேற்றி நாடு கடத்தினார்கள். பூர்ஷுவாக்கள் அவர்கள் பழமைவாதிகள் ஆயினும் சரி அதிதீவிர ஜனநாயகவாதிகள் ஆயினும் சரி அவர் மீது அவதூறுக் குப்பைகளை எறிவதில் ஒருவருக்கொருவரை மிஞ்சுவதில் போட்டி போட்டனர்.  இவற்றையெல்லாம் அவர் நூலாம்படையைத் தள்ளிவிடுவதைப் போல் துடைத்துத் தள்ளினார். அவைகள் எதையும் பொருட்படுத்தவில்லை. மிகவும் நிர்ப்பந்தமான கட்டாயத் தேவை ஏற்பட்ட போதுதான் அவைகளுக்குப் பதிலளிப்பார். கோடிக்கணக்கான சக தொழிலாளர்கள் தொலைதூர சைபீரியாவின் சுரங்கங்களிலிருந்து கலிபோர்னியா வரை ஐரோப்பா அமெரிக்கா ஆகியவற்றின் சகல பகுதிகளில் இருந்தும் அன்பும் அபிமானமும் பொங்க, மதிப்பும் பாராட்டும் பெருக இருந்த அந்த கோடிக்கணக்கான தோழர்களின் துயரம் பெருக, கண்ணீர் குளமாக இந்த மாமனிதர் மறைந்துவிட்டார். நான் உச்சி மீதிருந்து உறுதியாக ஒன்று கூறமுடியும். அவருக்கு எத்தனையோ மாற்றுக் கருத்துக் கொண்டிருந்தவர்கள் இருந்திருந்தாலும் தனிப்பட்ட விரோதி ஒருவர் கூட இருந்ததில்லை. யுக யுகாந்திரத்திற்கு அவர் பெயர் நிலைத்து நின்று நீடித்திருக்கும். அதேபோல் அவருடைய மாபெரும் பணியும் என்றும் நிலைத்திருக்கும்.” இவ்வாறு ஏங்கல்ஸ் உரையாற்றினார்.

Related Posts