மக்களின் மத உணர்வுகளை ஒரு‍ பிரிவினர் தவறாகவும், சாதுரியமாகவும் பயன்படுத்திக் கொள்வதில் நம் சமூகத்தில் ஏற்பட்டு‍ வரும் நிலைமைகளைப் பற்றி இந்த நாட்டில் வாழும் எவரும் இப்போது‍ கவலைப்படாமல் இருந்துவிட முடியாது. இத்தகைய செயல் மூலம் பல்வேறு‍ கலாச்சார நீரோட்டங்களின் சங்கமத்தின் அடிப்படையில் உருவான நமது‍ வளமான வரலாற்று‍ பாரம்பரியம் நிராகரிக்கப்படும் வகையில் நமது‍ கடந்த காலமும் மரபுகளும் திரிக்கப்படுகின்றன. பொய்யாக பிரச்சாரம் செய்யப்படுகின்றன. எனவே, தற்போதைய நிலைமைப் பற்றி கவலைப்படும் போது‍ அதன் வரலாற்று‍ பரிமாணத்தை கணக்கில் எடுத்துக் கொள்வது‍ அவசியம்..

கே.என்.பணிக்கர்

மதவாதத்தின் சாதுர்யம்

மதத்தை மட்டுமல்ல, மொழி, இன, கலாச்சாரம் ஆகிய அனைத்தையும் சுரண்டல் கூட்டம் சொத்து‍ சேர்க்க, அரசியல் ஆதிக்கம் புரிய, சுயநலனுக்காக பயன்படுத்த முயல்வதை நாம் கண் முன்னே காண்கிறோம். சமூக ஏற்றத் தாழ்வை உருவாக்கி உழைக்கும் மக்களை வறுமையில் தள்ளிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.

ஒரு‍ கட்சி சர்வாதிகாரம் கண்ட காங்கிரசிற்கு‍ மாற்று‍ ஒருநபர் சர்வாதிகாரமே என்பது‍ பிஜேபியின் நிலை…….. பிஜேபி கட்சி ஒரு‍ வலது‍ சாரி கட்சி மட்டுமல்ல, சர்வாதிகார விச வித்து‍…… அது‍ வரலாறு‍ நெடுகிலும் வீசிய விச வித்துக்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்…

ஒரு‍ நாளும் ஈஸ்வரன் உங்கள் பக்கம் வரமாட்டான்

நீ ராமர் கோவில் கட்ட மசூதியை இடித்தும்,

மதக்கலவரத்தை தூண்டியும் செய்த அக்கிரமத்தால்

திக்கற்றுப் போனவர்கள் போடும் சாபமிது.

காசி, அயோத்தி, பம்பாய், குஜராத், உபியில் வீடிழந்து,

தறிகெட்டு‍ நிற்கும் துலுக்கனின் கண்ணீரைத்

துடைப்பவன் பின்னால் அவன் போய்விட்டான்.

கலவரத்தால் அனாதையாக்கப்பட்ட குழந்தைகளை

அரவணைக்க ஓடும் மனிதனுக்கு‍

ராமன்  செருப்பாக ஆனாலும் ஆவான்,

நீ கட்டுகிற கோயிலில் சிலையாக நிற்கமாட்டான்….

மத உணர்வை எப்படி‍ பார்க்க வேண்டும்…

மனிதர்கள் தான் மதங்களை பெற்றெடுத்தார்களே தவிர, மதம் மனிதனை உருவாக்கவில்லை. இதையேதான் ரிக்வேதம் வேறு மாதிரி கூறுகிறது.

“முதலில் அது‍ தானாக தோன்றி பின்னர் தெய்வங்கள் வந்தன”

( ஆதாரம்- ரிக்வேதம் 10 ஆவது‍ பாகம் 129 ஆவது‍ பாசுரம் )

ஆத்திகர்களைப் பொறுத்த வரை அவர்களது‍ மனசாட்சி, ஞானம். தன்மானம், பொது‍ அறிவு, தர்க்க முறை, தருமம் உய்யும் வழி எல்லாம் மதம் தான்.

நாத்திகர்களை பொருத்த வரை மதம் என்பது‍ அறியாமையின் உச்சம். மூடநம்பிக்கைகளின் தொகுப்பு. குறுகிய மனப்பான்மைக்கு‍ வித்து.

மதம் என்பது‍ தானாக எழும் உணர்வு. மதம் யதார்த்த வாழ்வின் விநோத பிரதிபலிப்பே – கார்ல் மார்க்ஸ்

அதாவது, யதார்த்த வாழ்விலே சமாளிக்க முடியாத சங்கடங்களும், சரிகட்ட முடியாத அவலங்களும் சஞ்சலங்களும் உருவாக்கும் பிரமைகளே மத உணர்வு. மார்க்ஸ் வார்த்தைகளிலேயே சொன்வதென்றால் தத்தளிக்கும் ஜீவன்களின் ஏக்கப் பெருமூச்சு.

அதனால், வாழ்வை துன்பமாக்கும் எதார்த்தமான சக்திகளை அப்புறப்படுத்த வேண்டுமே தவிர மதத்தை வெறும் பிரமையாக பார்க்கப்படுவது‍ தவறு..

சமூக அவலங்களால் எழும் மத உணர்வை சுரண்டும் கூட்டம் எவ்வாறு‍ பயன்படுத்த முயல்கிறது‍ என்பதை வரலாற்று‍ ரீதியாக பார்த்தால் தான் மார்க்ஸ் கூறியது‍ புலப்படும்..

மத விளக்கங்களுக்கும், தத்துவங்களுக்கும் உள்ள முரண்பாட்டை முதலில் சுட்டிக் காட்டியவர் ஹெகல். தத்துவங்களோ உண்மை என்பது‍ தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய ஒன்று‍ என்கின்றன. ஆனால், மதங்களோ உண்மைகள் ஏற்கனவே கொடுக்கப்பட்டுவிட்டன. அவை எங்கிருந்து‍ வந்தன என்பது‍ தெரியாவிட்டாலும், மனிதன் அவற்றை பவ்யமாக ஏற்று‍ நடக்க வேண்டுமென்கின்றன என்று‍ அவர் மதம் வேறு‍ தத்துவம் வேறு‍ என்பதை சுட்டிக் காட்டினார்.

இந்துத்துவம் ஓர் புரட்டு‍

விஞ்ஞான அறிவைப் பெற புராணங்களை புரட்டினால் போதும் என்று கூறும் அறிவாளிகள் பிஜேபி கூட்டத்தில் தான் உள்ளனர். ஜாதகக் கணக்கை பார்த்தாலே போதுமென்று‍ விஞ்ஞானிகள் கூட்டத்திலே பேசியவர்கள் இதே வகையறாக்கள். இவர்கள் இந்துத்வம் பற்றி கொடுக்கிற விளக்கத்தை கொஞ்சம் பாருங்கள் இவர்களின் ஏமாற்றும் புரட்டும் புரியும்..

நமது‍ பெருமைமிகு‍ முன்னோர்கள் அவர்களது‍ முன்னோர்களுக்கும் முன்னோர்களும் சொல்லிவிட்டார்களாம். அதாவது‍ வேதங்களிலும் உபநிசத்துகளிலும் மனுஸ்மிருதியிலும் எல்லாம் கூறப்பட்டுவிட்டனவாம். ஞானம் ஏற்கனவே முன்னோர்களால் கொடுக்கப்பட்டு‍ விட்டது‍ என்கின்றனர். இந்தக் கும்பலின் இந்துத்துவம் என்பது‍ ஒரு‍ தத்துவமே அல்ல.. அது‍ ஞானத்தை மறுக்கிற மூடநம்பிக்கைகளின் தொகுப்பே….

ஞானம் என்பது‍ வேதகாலத்திலிருந்து‍ குருட்டு‍ நம்பிக்கைகளை எதிர்த்துப் போராடியே வந்திருக்கிறது‍ என்பது‍ வரலாற்று‍ உண்மை.

அபாயம் என்னவெனில் எல்லாம் வேதத்தில் உள்ளது‍ என்பதோடு‍ மட்டுமல்ல, நாங்கள் வெறுக்கிறவர்களை (அதாவது‍ அவர்கள் யாரெல்லாம் வேண்டாதவர்களாக நினைக்கிறார்களோ அவர்களை) யஜூ்ர் வேதம் வழிகாட்டியபடி‍ அழிப்போம் என்கின்றனர். இதை அவர்கள் தினசரி ஜபிப்பதோடு‍ செயல்படவும் செய்கின்றனர். அதனால் ரத்தக்களறி ஏற்படுகிறது.

ஸுமித்ரிய, ந,ஆப, அவ்ஷதய

ஸந்து‍ துர்மித்ய, ஸதஸ்மை

ஸந்து‍ யோஸ்மான் த்வேஷ்டியம் சவயம்

திவிஷ்ம. (யஜூ்ர் வேதம்)

இதன் பொருள்

நீர், தானியம், பிராண வாயு எங்களுக்கு‍ மருந்தாகட்டும், நாங்கள் வெறுக்கிறவர்களுக்கும் வேதஸ்மிருதிக்கு‍ இணங்கி நடக்காதவர்களுக்கும் இவ்வுலகம் விசமாக போகட்டும் என்பதாகும்.

வேடிக்கையான இன்னொன்று,

பல கடவுகள்களை துதிக்கும் இந்து‍ மதத்தில், இந்த மடாதிபதிகள் பல கடவுள்களை துதிப்பதை ஏற்கவில்லை. இதற்கு‍ விவேகானந்தரே சாட்சி

இருநூறு‍ மில்லியன் கடவுள்கள், ஒரு‍வன் மீது, ஆதிக்கம் செலுத்துகின்றன என்று‍ குருட்டுத்தனமாக நம்புவதை விட மனிதகுலம் நாத்திகத்தை தழுவுவது‍ மேல்

(விவேகானந்தர் தொகுப்பு நூல் தொகுதி 2)

இந்து‍ மதத்தின் அபூர்வ (கேவலமான) குணம்

இந்து‍ மதக் கூட்டில் சடங்குகள், ஆச்சாரங்கள் கொடுமையானதாகவும் மோதல்களை உருவாக்குபவையாகவும் இருக்கிறது.

பிராமணர்களைத் தவிர மற்றவர்கள் வேதம் ஓதக் கூடாது‍ (இது‍ தமிழகத்திலே இன்று‍ இல்லை)

சிலரை தொடக் கூடாது‍, உழைப்பவர்களை எப்பொழுதுமே தொடக் கூடாது‍

குடுமி, கொண்டை அமைப்புகள், நெற்றிக் குறியிடுவதிலும், சேலை வேட்டி‍ கட்டுகிற முறையிலும், உணவுப் பழக்க வழக்கங்களிலும் (சைவம், அசைவம்) அவரவர் ஆச்சாரப்படி‍ நடக்க வேண்டும். இந்த ஆச்சாரங்கள் அன்றும் இன்றும் மோதல்களை உருவாக்கி வருகின்றன.

நவீன இந்துத்வவாதிகளான பிஜேபியினர் இன்றும் பசுவதை தடைச் சட்டம் கொண்டு‍ வரவேண்டுமென்று‍ பெரிய அளவில் வன்முறைகளை நடத்து்கின்றனர். இப்பொழுதும் இவர்கள் ஆட்சிக்கு‍ வந்தால் இந்த சட்டத்தை அமல்படுத்தவே முயற்சிப்பார்கள்.

இந்த பசுவதை சட்டம் முஸ்லீம் மக்களை மட்டுமல்ல, இந்து‍ மதத்தினால் காலம் காலமாக சமூகத்தின் அடித்தட்டில் அடிமைகளாக ஒடுக்கப்பட்டு‍ வரும் இந்து‍ மதத்தைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட பிரிவினரின் பிழைப்பிலே மண்ணைப் போடுவதாகும். இந்த தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதான உணவே மாட்டுக்கறி தான். மாட்டுத் தோலை பதப்படுத்துவதுதான் அவர்களது‍ பிரதான தொழில் (மேலை நாடுகளில் மாட்டுக்கறி உயர்ந்த ரகமாக கருத்தப்படுகிறது)

கோவிலுக்குள் யார் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும், யார் நுழையக் கூடாது என்பனவெல்லாம் இன்றும் நம் கண் முன் நிறைய சாட்சிகள் உள்ளன…

எல்லோருக்கும் சுடுகாடு‍ சமரசம் உலாவுமிடம். ஆனால் இந்து‍ மதத்தைப் பொறுத்த வரை அங்கும் சமரசம் இல்லை. பேதங்கள் உண்டு. இன்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு‍ சுடுகாடும் சுடுகாட்டிற்குச் செல்லும் பாதையும் விவகாரத்திற்குரியாதாகவே உள்ளது. ஒரு‍ சாதி மக்கள் இருக்கும் தெருவில் மற்றொரு‍ சாதி பிணம் போனால் பல பிணங்கள் விழுந்ததை நாம் வரலாறு‍ நெடுகிலும் பார்த்திருக்கிறோம்.. ஆனால் இன்று‍ அவைகள் குறைந்துள்ளது.. அதை மீண்டும் தூக்கி நிறுத்த ஆர்எஸ்எஸ் தலைமை விரும்புகிறது. எனவே மோடியை முன்னிறுத்துகிறது..

இசுலாத்தின் காலத்திற்கேற்ற கோலம்

பிஜேபியும் அதன் சகாக்களும் அடிக்கடி‍ கூறுவதென்ன? முசுலீமிற்கென்று‍ ஒரு‍ நாடு‍ இருந்தால் இந்துவிற்கு‍ என்று‍ ஒரு‍ நாடு‍ கூடாதா? யூதர்களுக்கென்று‍ ஒரு‍ நாடு‍ இருந்தால் இந்துவிற்கென்று‍ ஒரு‍ நாடு‍ கூடாதா? என்பதுதான்.

இஸ்லாமிய நாடுகள் என்று‍ பத்திரிக்கைகளும் ஏனையோரும் கூறிக் கொள்கின்றனர். அதில் மறைந்திருப்பது‍ என்னவென்றால், இஸ்லாமிய நாடுகளும் இஸ்லாம் மதமும் ஒன்றுபோல் இல்லை என்பதுதான். இஸ்லாம் அடிப்படைவாதத்தால் இன்று‍ மத அடிப்படையில் இஸ்லாமியர்களை ஒன்றுபடுத்த முடியவில்லை.

ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் 48 நாடுகள் முஸ்லீம் மதத்தை பின்பற்றுபவர்களை பெரும்பான்மையாகக் கொண்டிருக்கின்றன. இன்னும் 30 நாடுகளில் முஸ்லீம் மதத்தை பின்பற்றும் மக்கள் கணிசமாக உள்ளனர். அதில் ஒன்று‍ இந்தியா.

அரசாங்க அமைப்பிலும் ஒற்றுமை இல்லை. மத அடிப்படையிலும் ஒற்றுமை இல்லை. இந்நிலையில் இஸ்லாமிய உலகம் என்பது‍ சர்வதேச அரசியலில் வல்லாதிக்கத்துக்கு‍ பயன்படும் வகையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றே.

ஆடம்பர வாழ்க்கை என்பது‍ குரான் கருத்துக்கு‍ விரோதமானது. ஆனால் அதை செய்து‍ கொண்டிருக்கிறார்கள்.  அனைவரும் சமம் என்று‍ குரான் கூறுகிறது. ஆனால் பணக்காரனும் எளியவனும் உல்லாச வாழ்வு வாழ்பவனும் ஓட்டாண்டியும் பொருட்களை சம பங்கு‍ செய்வதல்ல என்று‍ அடிப்படைவாதிகள் வாதிடுகின்றனர்.

இந்துத்வமு‍ம், இஸ்லாமும் பிற்போக்குவாதிகளின் கூடாரமாய் ஆக்கப்படுகின்றன. இரண்டிலும் மத சீர்‌திருத்தவாதிகள் அன்பு, எளிமையை போதிக்க முயன்று‍ இருக்கின்றனர். ஆனால் இன்று‍ அவைகள் காற்றில் பறக்கவிடப்பட்ட பட்டங்களாக அலைந்து‍ கொண்டிருக்கிறது. மதம் என்கிற போர்வையில் மத அடிப்படைவாதிகள் மதத்தை தங்களுக்கு‍ சாதகமாக பிரச்சாரம் செய்து‍ கொண்டுள்ளனர்.

முடிவாக

கறுப்பர்-வெள்ளையர், ஆரியன்-அல்லாதவன், இந்து‍-முஸ்லீம், யூதர்-முஸ்லீம் என்ற பாகுபாடு‍ அனைத்தும் 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர் நாடு‍கள் பிடிக்க, ஆதிக்கம் செலுத்த உருவாக்கப்பட்ட தந்திரம். இதே பாணியை பின்பற்றி பிஜேபியினர் இந்துத்துவம் என்ற கண்டுபிடிப்பை வரலாற்று‍ முலாம் பூசி, புதிய மணம் கொடுக்க முயல்கிறார்கள்.

வரலாறு‍ நமக்கு‍ படிப்பினைகளையும் அனுபவங்களையும் அறிவையும் கொடுத்துள்ளது. இந்துக்களின் மொத்த உருவம் நான் தான், நான் பதிவிக்கு‍ வந்தால் அனைத்து‍ இந்துக்களையும் காப்பாற்றிவிடுவேன் என்று‍ மோடி‍ தலைமையும் தமிழகத்தில் சில தாஸ்களும் பிற்படுத்தப்பட்ட மக்களின் மொத்த உருவம் நான் தான். நான் அனைத்து‍ மலைகளையும் உங்களுக்காக பிடுங்கி எறிவேன் என்ற சினிமா வசனங்களை ஒத்த வார்த்தைகளைக் கூறி குறிப்பிட்ட மக்கள் பகுதியினரை ஏமாற்றி அரசியல் அரியணையில் ஏற முயற்சி செய்கிறார்கள்.

இது‍ வரை நிகழ்ந்த வரலாறுகள் அனைத்தும் மக்களாலேயே எழுதப்பட்டுள்ளது. அது‍ மீண்டும் நிரூபனமாகும்.. மக்கள் சக்திதான் வரலாற்றில் இத்தகைய விசவித்துக்களை வளரவிடாமல் தடுத்து‍ வந்து‍ள்ளது. பிஜேபியின் வார்த்தைகளுக்குப் பின்னால் ஒளிந்து‍ இருக்கும் கருத்துக்கள், அந்த கருத்துக்களுக்குள் புதைந்து‍ கிடக்கும் பேராசைகள், அவற்றை வெளிப்படுத்தும் அவர்களது‍ நடவடிக்கைகள் ஆகியவற்றை மக்களின் கவனத்திற்கு‍ கொண்டு‍ வருவது‍ நமது‍ கடமை. பிஜேபியின் மொழியில் சொன்னால்-நிலவை விழுங்க வரும் பாம்பை விரட்ட வருகிறோம்…..

மேற்கோள்கள்..

  1. புராணங்களும் பிஜேபியின் புரட்டும் – விஎம்எஸ்
  2. 1993 இல் மதவேடம் தரித்து‍ மான்களுடன் விளையாட வரி வேங்கை வருகிறது‍

Related Posts