அரசியல்

மஞ்சள் பிசாசின் மனிதவேட்டை

எல்லாம் என்னுடையது என்றது தங்கம்.
எல்லாம் என்னுடையது என்றது வாள்.
எல்லாவற்றையும் என்னால் வாங்க முடியும் என்றது தங்கம்.
எல்லாவற்றையும் என்னால் வாங்க முடியும் என்றது வாள்.

எல்லாவற்றையும் வாங்குவதற்காக வாள் பலத்தைக்கொண்டு தங்கத்தை பறித்துக்கொள் என்பதே இந்த உரையாடல் சொல்லும் செய்தி. இந்த கவிதையை எழுதியவர் ரஷ்யக்கவிஞர் புஷ்கின்.

  1. அமெரிக்காவின் பிற்பகுதிகளில் இருந்து மக்கள் கூட்டம்கூட்டமாக வெளியேறுகின்றார்கள். எதற்கு? தங்கவேட்டைக்காக! ஜேக்கப் டோனர் என்பவருடன் வந்தவர்கள் டோனர் பார்ட்டி என்று அழைக்கப்பட்டார்கள். 91பேரும் 1846-47இல் சியேறா நெவேடா என்னும் பனிப்பிரதேசத்தில் உணவும் பிற ஆட்களும் இன்றி. மேலும் பயணத்தை தொடர முடியாமல் மாட்டிக்கொண்டனர். வாழ்வதா சாவதா என்ற போராட்டம். நாகரிகம் அடைந்த மனிதகுல வரலாற்றில் மரணமுற்ற மனிதனின் பிணத்தை அல்லது ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு பிணத்தை சாப்பிட்ட கொடுமை இங்குதான் நடந்தது.

கலிபோர்னியாவிலும் ஆஸ்திரேலியாவிலும் அலாஸ்காவிலும் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதும் அங்கெல்லாம் குடியேறிய மக்கள் அங்கு பூர்வகுடிகளாய் இருந்த மக்களை கொடூரமாக அழித்தார்கள்.   500 ஆண்டுகளுக்கு முன் கொலம்பஸ் நிகழ்த்திய படுகொலைகளை மீண்டும் நடத்தினார்கள். சில நூறாயிரம் மக்கள்தொகை கொண்ட கலிபோர்னியாவில்1849-54 காலகட்டத்தில் மட்டும் தங்கத்தின் பொருட்டு 4200 கொலைகள் நடந்ததாக பதிவுகள் உள்ளன.
……
இதே போன்றதொரு தங்கவேட்டை 1898இல் வடக்கு கனடாவிலும் அலாஸ்காவின் குளோண்டிக் பகுதியிலும் நடந்தது. குளோண்டிக் நதிப்பிரதேசத்துக்கு தங்க வேட்டை க்கு வந்த ஒரு லட்சம் பேரில் 30000 முதல் 40000 பேர் மட்டுமே உயிருடன் அங்கே போய் சேர்ந்தார்கள். பனி படர்ந்த அலாஸ்காவின் கடும் குளிரின் முன்னே மனிதனின் பேராசை தோற்றுப்போன து. செத்து மடிந்தது. மிக நீண்டதும் கடினமானதும் ஆபத்து மிகுந்ததும் ஆன சில்கூட் கணவாய் பாதையில் தங்கத்தை தேடி நூற்றுக்கணக்கானவர்கள் மலை ஏறிக்கொண்டிருக்கும் முதல் காட்சியுடன் தனது கோல்டு ரஷ் (1925) படத்தை தொடங்குகின்றார் சார்லி சாப்ளின். அவரும் தங்கம் தேடித்தான் போகின்றார். வழக்கம் போலவே இப்படத்திலும் பாத்திரத்துக்கு பெயரில்லை. அவரைத் தொடர்ந்து ஒரு கரடியும் வந்து கொண்டு இருப்பதை அவர் அறிய மாட்டார்!

படத்தை இரண்டு பகுதிகளாக பிரித்தால் முதல் பகுதியில் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத கொடும் பனிச்சூறாவளி வீசும் அலாஸ்காவில் தங்கம் என்ற அற்ப உலோகத்துக்காக மனிதன் போராடுவதையும் இரண்டாம் பகுதியில் தன் உயிருக்காக அலாஸ்காவின் கிராமம் ஒன்றில் போராடுவதையும் பார்க்கலாம்.

தங்க வேட்டையில் ஓரளவிற்கு தங்கத்தை சம்பாதித்த ஜிம் மெக்கெ என்பவனது கூடாரம் பனிப்புயலில் அடித்து  செல்லப்படுகிறது. கொலை வழக்கில் தேடப் லபடும் பிளாக் லார்சன் என்பவனது கூடாரத்துக்கு அவன் இல்லாத போது வந்து சேர்கின்றான் நம் நாயகன். திரும்பி வந்த லார்சன் நாயகனை வெளியே துர்த்தவிடுகின் றான். இப்போது ஜிம் அங்கே வருகின்றான். லார்சனுடன் நடந்த மோத லில் லாரசன் அடக்கப்படுகின் றான். மூவரும் ஒரு உடன்படிக்கை க்கு வருகின்றனர். சீட்டுக்கட்டை கலைத்துப்போடுவது, அதன் மூலம் உணவு தேடி வெளியே போவது யார் என முடிவு செய்வ்து. இதில் லார்சனே வெளியே போவதாக ஆகின்றது. வெளியே சென்ற லார்சன் தன்னை தேடி வந்த இரண்டு போலீஸ்காரர்களை கொலை செய்கின்றான்.

நாயகனும் ஜிம்முவும் நன்றி தெரிவிக்கும் விருந்து நடத்த முடிவு செய்கின்றனர். ஆனால் விருந்துக்கான உணவுதான் இல்லை! இருக்கின்ற ஒரே பொருள் நாயகனின் காலணி மட்டுமே, அதை வேக வைத்து சாப்பிட லாம் என முடிவு செயகின் றார்கள்! காலணியின் மேல் பகுதியை நாயகனும் கீழ் பகுதியை ஜிம்மும் சாப்பிடுகின்றனர்.  ஒன்றும் இல்லாத சூழலில் காலனியை ரசித்தும் ருசித்தும் சாப்பிடும் இந்த காட்சியை மிக அற்புதமாக சித்தரித்து இருப்பார் சாப்ளின். காட்சியின் தெரியாத பக்கமோ பசியால் நொந்து போனவனின் நிலையை சொல்கின்றது.

ஜிம்மின் கற்பனை யோ வேறு மாதிரி போகிறது. தன் எதிரே உட்கார்ந்து இருக்கும் நாயகனை ஐந்தடி உயரமுள்ள கொழுத்த கோட் சூட் அணிந்த கோழி யாக பார்க்கும் அவன் அவனை சுட்டு ரோஸ்ட் செய்து சாப்பிட முடிவு செயகின் றான். ஒரு கையில் துப்பாக்கியும் மறுகையில் கோடரியும் ஏந்தி நாயகனை அவன் துரத்த ஒன்றும் புரியாத நாயகன் தப்பித்து ஓட உணவுக்கும் உயிருக்கு மான போராட்டம் அங்கே நடக்கின்றது. உணவு தேடி வந்த ஒரு கரடி இந்த சண்டை யில் எதிர்பாராத விதமாக உள்ளே வர திடீர் என துப்பாக்கி வெடிக்க கரடி சாக… இருவருக்கும் ஆன உணவுப்பிரச்னை இப்படி தீர்க்கப் படுகின்றது.

இக்காட்சியில் கோழியின் உடல் அசை வுகளை சாப்ளின் நுட்பமாக வெளிப்படுத்தும் அழகு, மிக அழகு!

ஜிம்முக்கும் லார்சனுக்கும் இடையே தங்கத்துக்காக நடக்கும் சண்டையில் ஜிம் தலையில் அடிபட்டு சுய நினைவை இழக்கின்றான், ஆனால் தங்கம் குறித்த நினைவு அப்படியே இருக்கிறது! தங்கம் படுத்தும் பாடு!

மீண்டும் சந்தித்த இருவரும் பழைய கூடாரத்தை கண்டுபிடித்துவிடுகின்றனர். ஆனால் நள்ளிரவு அடித்த சூறாவளி யில் கூடாரம் மலைமுகட்டி ல் தொங்குகின்றது. இது சாப்ளினின் அற்புதமான கற்பனை மட்டுமே அல்ல, தூரக் காட்சியில் மிகுந்த திகில் ஊட்டும் ஒன்றாகவும் உள்ளது. கூடாரத்தின் ஒரு பாதி மலைமுகட்டில் பாதாள த்தை நோக்கி சரிய மறு பாதி மலையில் இருக்க, இவர்களது ஒவ்வொரு அசைவுக்கும் கூடாரம் மேலும் கீழுமாக தள்ளாடுவதைப் பார்க்கும் போது எந்த வினாடியிலும் அது அதல பாதாளத்தில் விழுந்துவிடும் என பார்க்கின்ற நாம் பதைக்கின்றோம்.

மிகுந்த போராட்டத்திற்கு பிறகு இருவரும் வெளியேறும் இறுதி நொடியில் கூடாரம் பாதாளத்தில் விழுந்து நொறுங்குகின்றது. தேடி வந்த தங்கமும் கிடைத்திட அலாஸ்க்காவில் இருந்து வெளியேறுகின்றனர். அலாஸ்காவில் இருந்தபோது எதிர்பாராத நேரத்தில் சந்தித்த. ஜார்ஜியா என்ற பெண்ணை கப்பலில் பார்க்கின்றான்    நாயகன். மனம் விரும்ப இருவரும் இணைகிறார்கள்.
……
1925இல் வெளி வந்த படம். ஹாலிவுட்டிலும் நெவேடாவிலும் ஆக 15 மாதங்கள் படப்பிடிப்பு நடந்தது.

தங்கம் கண்டுபிடிக்கப்பட்ட நாளிலிருந்து அது வரலாற்றில் சமூக பொருளாதாரத்தில் ஒரு முக்கிய இடத்தைத் தக்க வைத்துக்கொண்டுதான் இருக்கின்றது. குறிப்பாக இன்றைய முதலாளித்துவ அரசு-ஏகபோகக்கூட்டத்தின் வளர்ச்சியோடும் குறிப்பாக  பணவியல் அமைப்பு மற்றும் சர்வதேச பொருளாதார உறவுகளின் பரிமாணத்தோடும். இணைந்திருக்கின்றது. இதையே தலைகீழாக சொன்னால் தங்கத்தின் தலைவிதியை நிர்ணயிக்கின்ற கூறுகளில் முதலாளித்துவ சமூக அரசியல் நெருக்கடிகளும் பணவீக்கமும் முக்கியமான பாத்திரத்தை வகிக்கின்றன என்றும் கூறலாம்.

மஞ்சள் பிசாசு என்ற நூலில் அ.வி.அனிக்கின் கூறுகின்றார்: “மஞ்சள் பிசாசு தன்னுடை ய முகத்தை மாற்றிக்கொள்ள முடியும். அது முன்னேற்றம், கடன் வசதி, தொழில்நுட்ப ம் மற்றும் கலை என்ற கவுரவமான முகமூடிக்கு பின்னால் மறைந்து கொள்கின்றது. முதலாளித்துவம் நீடிக்கின்ற வரை மஞ்சள் பிசாசு உயிரோடு இருக்கும்.”

சார்லி சாப்ளினின் திரைப்படங்கள் சமூக அவலங்களின் பின்னால் இருக்கின்ற முதலாளித்துவ அரசியலை எள்ளி நகையாடிய மிக சீரியசான படங்கள். அவன் எளிய மக்களைப் பற்றி பேசியவன். ஆகவேதான் அவன் மக்கள் கலைஞன்.

(சார்லி சாப்ளின் பிறந்த நாள் 16 ஏப்ரல் 1889)

Related Posts