இதழ்கள் இளைஞர் முழக்கம்

பொறியியல் படிப்பு ஒரு பார்வை – அருள்

engineering_courses

நிறைய சம்பாதிக்க இன்ஜீனியராக வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம், ஆர்வம், இலக்கு. இதை அடைபவர்கள் பெரும்பாலும் ஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.டி யில் படிக்கும் இன்ஜீனியர்களே. இரண்டு வருடம் +2 பாடத்தை தவமாய் மனப்பாடம் செய்யும் நம் தமிழக மாணவர்களுக்கு ஐ.ஐ.டி, என்.ஐ.டி யில் படிக்கிற வாய்ப்பு வெறும் கனவாகவே உள்ளது.

மனப்பாடப் படிப்பு அழிய வேண்டுமா? (அல்லது) விண்ணபிப்பவர்களில் வெறும் ஒரு சதவீதத்தினருக்கு மட்டுமே இடம் கிடைக்கும் ஐ.ஐ.டி படிப்பிற்காக வடமாநிலத்து மாணவர்கள் போல நம் மாணவர்கள் பித்து பிடித்து அலைய வேண்டுமா? (அல்லது) விண்ணப்பிக்கும் மாணவர்களில் 25 சதவீத மாணவர்களுக்காவது இடம் கிடைக்கும் வகையில் தரமான அரசு கல்வி நிலையங்களை உருவாக்க அரசை நிர்பந்திக்க வேண்டுமா? எது வேண்டும் என்பதை முடிவு செய்வது தங்கள் பிள்ளைகளின் நல்ல எதிர்காலத்தை விரும்பும் ஒவ்வொரு பெற்றோரின் கடமை. மாறாக, இருப்பதில் சிறந்தது எது என்பதே எப்போதும் நம் தேர்வாக அமைந்து விடுகிறது. பெரும்பாலும் அண்ணா பல்கலைக்கழகத்திலும் அதன் உறுப்பு கல்லூரியிலும் சிறந்த கல்லூரி பாடத்துறையை எப்படி தேர்ந்தெடுப்பது என்பதே தமிழக மாணவர்களின் வாய்ப்பாக அமைந்து விட்டது.

கல்லூரியா? பாடத்துறையா என வரும்போது, சிறந்த கல்லூரியில் எந்த பாரம்பரிய பாடப்பிரிவுகள் (MECH, CIVIL, CSE, ECE, EEE) வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் துவக்கப்பட்ட அரசு கல்லூரிகளில் எந்த பாடத்துறையை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம். சிறந்த தனியார் கல்லூரி என கூறிக்கொள்ளும் கல்லூரிகளில் எத்தனை மாணவர்கள் உயர்கல்விக்கு சென்றனர், குறிப்பாக வெளிநாடுகளில் உயர்கல்வி பயில்பவர்கள் எத்தனை பேர்? எத்தனை பேர் வேலைவாய்ப்பை பெற்றனர் அவர்களின் சராசரி வருமானம் என்ன? என்கிற கேள்விக்கு அவர்கள் தரும் பதிலில் இருந்து அவர்களது தரத்தை மதிப்பிடலாம். கல்லூரியை தேர்ந்தெடுக்கும் போது சில முக்கிய அம்சங்களை கவனித்திட வேண்டும்

  1. ஆசிரியர்
  2. உள்கட்டமைப்பு வசதிகள்
  3. பிறவசதிகள்
  4. வேலைவாய்ப்பு
  5. கூடுதல் கல்வி சார் நடவடிக்கைள்

ஆசிரியர்கள்:- தமது பாடத்தில் சொந்தமாக ஆராய்ச்சி செய்யும் ஆசிரியரின் உதாரணம் தான் அதில் மாணவர்களது நம்பிக்கையை தூண்டி ஆர்வத்தை வளர்க்கும் (கல்வி சிந்தனைகள் அம்பேத்கர் புத்தகத்தில்) எனவே நாம் தேர்ந்தெடுக்கும் கல்லூரியில் எத்தனை ஆசிரியர்கள் ஆராய்ச்சி பட்டம் பெற்றுள்ளனர் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

உள்கட்டமைப்பு வசதிகள்:- பிரம்மாண்டமான முகப்புத் தோற்றம் மட்டுமில்லாமல், வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்கள் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இருக்க வேண்டும்.

இதர வசதிகள்:- நூலகம், இணையம், குறைந்தபட்ச மருத்துவ வசதிகள், மாணவர்கள் விவாதிக்க SEMINAR HALL, உடற்பயிற்சி கூடம் போன்றவை இருக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு:- கல்லூரியின் கடந்த ஆண்டு வேலைவாய்ப்பு பெற்றுள்ள மாணவர்களின் எண்ணிக்கையை தெரிந்து கொள்ள வேண்டும்.

கூடுதல் கல்விசார் நடவடிக்கைகள்:- வயிற்றுப் பிழைப்பைத் தேட பரிட்சையில் தேர்ச்சி ஆக வேண்டும். அதன்பின் தங்கள் அறிவை அத்துடன் வைத்துக்கொள்ள கூடாது. தானே எதையும் சிந்தித்து உணரும் பகுத்தறிவை பெற்றுத்தரும் கல்வியை பெறவேண்டும் (கல்வி சிந்தனைகள் பெரியார்). பகுத்தறிவைப் பெற்றுத் தருவதும், ஆளுமைப் பண்பை வளர்ப்பதும் கூடுதல் கல்வி சார் நடவடிக்கைகளே, கல்லூரி விழா, விளையாட்டுவிழா, கருத்தரங்குகள், பயிற்சி பட்டறைகள் தொழில்துறை பயிற்சிகள்,N.C.C, N.S.S மூலம் சமூக நடவடிக்கைகள், மாணவர்களின் தனித் திறனை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த பலவகை (STUDENTS CLUB) போன்ற இதர கல்விசார் நடவடிக்கைகள் இருத்தல் வேண்டும்.

மேற்கூறிய அம்சங்களின் அடிப்படையில் கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது ஒரளவு நல்ல பலனைத் தரும். இது குறித்த தகவல்களை கல்லூரியின் இணையதளம், முன்னாள் மாணவர்கள் மூலம் பெறலாம். நேரடியாக கல்லூரியை அணுகியும் இந்த தகவல்களை கேட்டு பெறலாம். பாடத்துறையை பொறுத்தவரை SPECIALISED COURSES (AUTOMOBILE, AEROSPACE, MANUFACTURING INDUSTRIAL, MATERIAL, ROBATICS) போன்றவற்றை அரசு கல்லூரிகளில் தேர்ந்தெடுத்து படிப்பதே பலன் தரும். பாரம்பரியமான (TRADIONAL, DEPARTMENT) MECHANICAL, CIVIL, CSE, ECE, EEE தேர்ந்தெடுக்கும்போது அவை நம் விருப்பம் சார்ந்து உள்ளதா என சோதித்து தேர்ந்தெடுக்க வேண்டும்.

COMPUTER SCIENCE ENGINEERING:-

• COMPUTER ல் பணிபுரிய விரும்புபவாரா?
• பலரும் வியக்கும் வண்ணம் COMPUTER ஐ பயன்படுத்துபவரா?
• புதிர் (PUZZLE) விளையாட்டை விரும்புபவரா?
• சி, சி++ போன்ற கணினி மொழியின் அடிப்படை அறிந்தவரா? ஆம் எனில் இந்த துறையை தேர்வு செய்யலாம்.

ELECTRICAL& ELECTRONICS:-

• வீட்டில் உள்ள SWITCH BOARD  ஐ திறந்து பார்த்தவரா? அதை புரிந்து கொள்ள முயன்றவரா?
• வீட்டில் உள்ள மின் உபகரணங்கள் எப்படி செயல்படுகிறது. என்பதை அறிய முயன்றவரா?
• சென்சார், டிரான்சிஸ்டர், குறித்த அடிப்படையை அறிந்தவரா?
• கணினியின் CPU எப்படி செயல்படுகிறது என்பதை அறிய முற்பட்டவரா?
• +2 இயற்பியல் பாடத்தை அறிந்து விரும்பி படித்தவரா?
• ஆம் எனில் இந்த துறையை தேர்ந்தெடுக்கலாம்

MECHANICAL:-

+1 இயற்பியல் பாடத்தை படிக்காதவர்களுக்கும் இந்த துறைக்கு எந்த தொடர்பு இல்லை. MECHANICAL துறைக்கான அனைத்து அடிப்படை அறிவியலும் +1 இயற்பியல் பாடத்தில் தான் உள்ளது.
• நீங்கள் +1 இயற்பியல் பாடத்தை கற்றவரா?
• BIKE, CAR போன்றவற்றின் வடிவமைப்பில் அதன் வேலைப்பாடுகளில் ஆர்வம் உள்ளவரா?
• வீட்டில் உள்ள A.C, REFRIGERATOR, WASHING MACHINE போன்றவை எப்படி செயல்படுகிறது என்பதை அறிய முனைந்தவரா?
• இயந்திர பாகங்கள் உற்பத்தி முறை பற்றி அறிய ஆர்வமா?
• சாதாரண மனித வாழ்விற்கு பயன்படும் புதிய இயந்திரங்களை உருவாக்க வேண்டும் என்கிற ஆர்வம் உள்ளவரா? ஆம் எனில் இந்த துறையை தேர்வு செய்யலாம்.

CIVIL:-
• +1 இயற்பியல் பாடத்தை கற்றவரா?
• கட்டிடம் கட்டுவதில் உள்ள தொழில் நுட்பத்தை அறிய முனைந்தவரா?
• உங்கள் வசிப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள ஏதோ ஒரு சிறு கட்டிடம் படிப்படியாக உருவாவதை ஆர்வமுடன் கவனித்தவரா?
• நிலம் அளவிடுதல், நீர் மேலாண்மை போன்றவற்றில் ஆர்வம் உள்ளவரா? ஆம் எனில் இந்த துறையை தேர்வு செய்யலாம்.

பெரும்பாலும் கடந்தகால அனுபவங்களை கொண்டே பாடத்துறையை தேர்ந் தெடுக்கின்றனர். மூன்று ஆண்டுகளுக்கு முன் சிறந்த துறையாக அனைவராலும்
விருப்பப்பட்ட IT, BIO TECHNOLOGY போன்றவை தற்போது அண்ணா பல்கலைக்கழகத்திலேயே ஒரு வாரம் கழித்துதான் நிரம்புகிறது.

தற்போது MECHANICAL, CIVIL, CSE போன்ற துறைகள் சிறந்ததாக கூறப்படுகிறது. அரசு எந்த தொழில்நுட்பத்திற்கு முன்னுரிமை கொடுத்து மூலதனம் செய்கிறதோ அந்த துறைதான் வேலைவாய்ப்புள்ள துறையாக வளரும். எனவே அரசின் தொழில் நுட்பம் சார்ந்த நடவடிக்கையை கவனித்து அதற்கேற்ப நமது தேர்வை செய்திட வேண்டும்.

மாணவன் தான் வசிக்கும் சூழலை விட்டு விலகி தனித்து போகாத கல்வி, உடல் உழைப்பை போற்றும் புத்தக சுமையற்ற கல்வி, குழுவாய் இணைந்து கற்கும் செயல்பாடுகள் நிறைந்த கல்வி, பன்முக திறமைக்கு வாய்ப்பளிக்கும் கல்வியே சிறந்த கல்வி. அவசியமில்லாத அறிவை சேகரித்து வைத்துகொள்ளும் பாத்திரங்களாகவே, கல்லூரிகள் நம்மில் பெரும்பானவர்களை செய்து விடுகிறது. (கல்வி சிந்தனைகள் காந்தி). தேவையற்ற, பயனற்ற, உயிரற்ற அறிவியல் திறன்களை மாணவர்களிடம் திணிப்பதும் எந்த தகவலுக்கும் சம்பந்தமில்லாத பணியையும், வாழ்வையும் மாணவர்கள் தேர்ந்தெடுப்பதும் மிக மிக கொடுமையானதாகும்.

“பொருளல்ல வற்றை பொருளென்று”
உணரும் குணத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்தாதிருப்போம்!!

Related Posts