புதிய ஆசிரியன்

பொம்மலாட்டக் கலைக்கு உயிர் கொடுக்கும் ஆசிரியர்

ஐ.வி. நாகராஜன்
பொம்மலாட்டக் கலை என்பது ஒரு காலத்தில் பிரசித்தி பெற்ற கலை யாக இருந்தது இந்தக் கலை நிகழ்ச்சி கிராமங்கள் மட்டுமின்றி நகர்ப்புறங் களிலும் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை சிறப்பாக நடைபெற்று வந்தது. இந்த வித்தியாசமான கலை, அட்டைகளால் தயார் செய்யப்பட்ட பொம்மை களை திரைக்குப் பின்னால் இருந்து இயக்குபவர் வேடிக்கையாக கதைக்கு ஏற்ப பின்னணிக் குரல் கொடுத்து நிகழ்ச்சிக்கு உயிரோட்டம் கொடுப்பார். அதைப் பார்த்து ரசிப்பவர்கள் தங்களை மறந்து அந்த கதாபாத்திரங்களோடு ஒன்றிப்போய்விடும் பரவசமிக்க காட்சிகளை இப்போதும் நம்மால் மறக்க முடிய வில்லை. அத்தகைய அற்புதமான ஈர்ப்புத் தன்மைகொண்ட பொம்மலாட்ட கலைநிகழ்ச்சிகள் இன்று மறைந்து போய்விட்டன. நவீன தாராளமய அமுலாக் கத்தின் காலச்சூழலில் பாரம்பரியமான பல்வேறு கலைகள் அழிந்துவரும் பட்டி யலில் இந்த பெம்மலாட்டக்கலையும் ஒன்று. நாட்டுப்புறக் கலைகளில் முக்கியத்துவம் வாய்ந்த இவை தமிழகத்தில் சிற்சில பகுதிகளில் இன்னுமும் நடைபெற்று வருகின்றன என்பது நமக்கு ஆறுதல் அளிக்கிறது. இக்கலைக்குப் புத்துயிர் ஊட்டுமுகமாக ஏழை, எளிய கிராமப்புற பள்ளி மாணவ மாணவி களுக்கு பொம்மலாட்டக் கலையின் மூலம் பள்ளிக்கல்வியையும். சமுக விழிப் புணர்வையும் ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை ஒரு பள்ளி ஆசிரியர் சத்தம் இல்லா மல் செய்து வருவது நமக்கு வியப்பை அளிக்கிறது. பொம்மலாட்டக் கலை மூலம் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாடங்கள் நடத்தி மாணவர்களின் கற் கும் ஆர்வத்தை அவர் தூண்டி வருகிறார். ஈரோடு மாவட்டம் நாதகவுண்டம்பாளையம் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளியின் இடைநிலை ஆசிரியரான தாமஸ் ஆண்டனிதான் அவர். இவரதுகற்பித்தல்முறை மாணவர்கள்மத்தியிலும் பெற்றோர்கள்,பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் பொருளா தாரத்தில் மிகவும் பின்தங்கியவர் கள். இங்கு படிக்கும் மாணவ-மாணவி கள் பலர் தங்களின் பெற்றோர்களால் கைவிடப்பட்டு ஆதரவற்றோர் இல்லத் தில் படித்து வருபவர்கள். சில மாண வர்கள் விவசாயக் கூலி வேலைக்குச் செல்லும் பெற்றோர்களின் குழந்தை கள். வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் இந்த கிராமப்புறக் குழந்தைகளின் கல்வித்திறனை வளர்த்தெடுக்க தமிழகத்தின் எந்த ஒரு கல்வி கூடத்திலும் எடுக்காத ஒரு புதிய முயற்சி இங்கு எடுக்கப்பட்டிருக் கிறது. இந்தத் தேவையை தமிழகத் தில் பின்தங்கியுள்ள பல கிராமபுறக் கல்வி நிலையங்களுக்கு எடுத்துச் செல்லலாம். இந்த குழந்தைகளுக்கு வீட்டில் வாய்பிருக்கும் பட்சத்தில், தொலைக்காட்சி பார்க்கும்போது அதில் அறிவுபூர்வமான கார்ட்டூன் சேனல்களை அதிகம் பார்க்க வைத்து அதில் வரும் செய்திகளை யும், கல்வி சம்பந்தபட்ட தகவல் களையும் எளிதில் புரிந்துகொள்ள வைப்பதற்கும் அதன் மூலம் பொம்ம லாட்ட காட்சிகளை அமைத்து மேலும் சீரிய முறையில் அவர்க ளுடைய கல்வித் திறனை வளர்ப்பது அபூர்வமானது.. ஆச்சரியமானது.
இதுபோன்ற கலைகள் மூலம் குழந்தைகளின் சிந்தனைத் திறனை வளர்ப்பதற்குசமூகப்பார்வை கொண்ட, சேவை மனப்பான்மை உள்ள ஆசிரியர்கள் தேவை. இப்படிப் பட்ட ஆசிரியர்களின் முயற்சிக்கு பள்ளி நிர்வாகமும், அரசும் ஊக்கம் கொடுத்து உற்சாகப்படுத்த வேண் டும். ஆப்போதுதான் குழந்தைகளின் கல்வித் திறனும் வளர்ச்சி பெறும். பாரம்பரியக் கலையும் வளரும். வகுப்பறையில் ஆசிரியரைக் கண் டால் பய உணர்வுடன் செயல்படும் மாணவர்களின் மனநிலை மாறி ஆசிரியரை சக நண்பராகப் பார்க்கும் நிலைக்கு மாணவர்கள் வருவதற்கு வாய்ப்புகள் ஏற்படும். பொம்மைகளை வைத்து பாடங்கள் கற்பிக்கப்படும் போது மாணவர்களுக்கு கற்கும் திறன் அதிகரித்து, பாடங்கள் எளிமை யாகப் புரிந்து, ஞாபகத்தில் வைத்துக் கொள்ளும் திறன் அதிகரிக்கிறது. எந்த வசதியும் இல்லாமல் வறுமை யில் வாடும் ஏழை மாணவர்களுக்கு பிராக்டிகலாக பொம்மைகளை வைத்து பாடங்களை நடத்திக் காட்டு வதால் ஈடுபாட்டுடனும், திறமையுட னும் அவர்கள் முன்னேறுவதற்கு நல்ல வழி கிடைக்கிறது.
அரசுப் பள்ளிகளை மூடுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்றுவரும் இந்த சூழலில் அரசுப் பள்ளிகளை நம்பி யுள்ள கிராமப்புற ஏழை மாணவர்கள் ஈடுபாட்டோடு படிப்பதற்கும், கல்வி மீது ஒரு ஆர்வத்தை ஏற்படுத்துவதற் கும் இதுபோன்ற முயற்சிகள் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். இந்நிலை தமிழகத்தின் மற்ற பள்ளிகளுக்கும் தொடர்ந்தால் பள்ளிக்கூடங்களை மூடாமல் தடுப்பதோடு பாரம்பரிய மிக்க கலைகளையும் அழியாமல் பாதுகாக்கலாம்.
(தொடர்புக்கு : (9787368271)

Puthiya Aasiriyan's photo.

Related Posts