சமூகம்

பெண் என்பவள்-2

ரசவாத கலவையானவள் பெண்.. அவளது மனசும் உடம்பும் விந்தையானது..

சிறுவயதில் இருந்தே மென்மையான விசயங்களுக்கு அவள் பழக்கப்படுத்தப்படுகிறாள்..

நன்றாக கவனிக்கனும் மென்மையான விசயங்கள் அவளுடைய தகவமைப்பில் இல்லை..

அவள் அதற்கு பழக்கப்படுத்தப்படுகிறாள்..

வீட்ல இருக்கற இடம் தெரிய கூடாது..

சத்தமா சிரிக்க கூடாது..

பலமா தும்ம கூடாது..

கொலுசு சத்தம் கூட கேக்காம நடக்கனும் இப்படி..

சின்ன சின்ன விசயங்கள் தான் அவளை அவளாவே இருக்கவிடாம பண்ணுது..

சரி சத்தம் போட்டுகிட்டு ஆடிக்கிட்டு பாடிக்கிட்டு இருந்தா அந்த பொண்ணு என்ன ஒழுக்கங்கெட்டவளா? அய்யய்யோ அப்படி இல்லங்க பக்கத்து வீட்டுல அக்கம் பக்கத்துல இருக்கவங்க என்ன சொல்லுவாங்க.. இத கவனிக்கனும் பெண் பிள்ளைகளே.. மத்தவங்களுக்காக நாம வாழல, நம்மக்குனு சுதந்திரம் இருக்கு.. ஆனா அந்த சுதந்திரம் மத்தவங்கள பாதிக்காத வண்ணம் இருந்தா போதும்…

அடுத்தது நம்ம உடல்.. 

உடல் பற்றிய தெளிவு யாருக்குமே இல்லனுதான் சொல்லனும்…

குறிப்பா மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு போதுமானதா இல்லை. தீட்டு தள்ளியிருக்கறதுன்னு சொல்லுவாங்க. அத தொடாத இத தொடாத உடனே குளிக்கனும் இப்படிலாம். முதல்ல இது பயத்தோட அணுகற விசயம் இல்ல. இது இயற்கை நமக்கு குடுத்த கொடை. அறிவியல் சார்ந்த அணுகுமுறை மிகவும் அவசியம். மாதந்தோறும் கருவுறாத கருமுட்டை சுவர்கள் உறிந்து ரத்தப்போக்கு வெளியேறும்.

அந்த ரத்தம் கெட்ட ரத்தம்னு எல்லாம் சொல்லி வைச்சுருப்பாங்க. அதெல்லாம் இல்ல அதுவும் நம்ம உடம்புல ஓடுர ரத்தம் போலத்தான் தூய்மையானது. அந்த நாட்களில் பெண்களோட மனசும் உடம்பும் சோர்ந்து இருக்கும். வயிற்றுவலி தலைவலி உடல்சோர்வு மனச்சோர்வு ஏன் தற்கொலை எண்ணம் கூட வரலாம்.

அப்போ தேவை கொஞ்சம் ஓய்வு, நல்ல விசயங்கள நினைக்கறதுதான். அப்பறம் உடம்ப சுத்தமா வச்சுகனும். நாப்கின் உபயோகிப்பது அதை 5 மணி நேரங்களுக்கு ஒரு முறை மாற்றவும் வேண்டும். அம்மாக்களே பிள்ளைகளிடம் இதை சொல்ல கூச்சப்படறாங்க. இன்னமும் இந்த நிலைதான் இருக்கு. பள்ளி கல்லூரியிலேயே பாலியல் கல்வி அறிமுகப்படுத்தப்பட வேண்டும். அது இன்னும் நம்ம நாட்டுல இல்ல…

ஆனா வீட்ல தொடங்குவோம்…

நான் சமீபத்துல பார்த்த நானும் ரௌடிதான் படத்துல அப்பா மகளுக்கு நாப்கின் எடுத்து பாத்ரூம்கிட்ட வைச்சிட்டு போற மாதிரி ஓர் காட்சி… பார்க்க ஆரோக்கியமானதா இருந்தது… அது நடைமுறைக்கு வந்தால் இன்னும் நல்லா இருக்குமோனு எண்ணம் எனக்குள்…

ஆக பெண்களுக்கு மட்டும் இல்லாமல் ஆண் பிள்ளைக்களுக்கும் இதைப் பற்றிய தெளிவு வேணும்.

மூடி மறைக்க இது குற்றமல்ல.

ஆண்களும் தெரிஞ்சுக்கட்டுமே.

இதனால பாலியல் வன்கொடுமைகள் குறைய வாய்ப்புகள் இருக்கு.

அப்பறம் ஆண்களே கூட அந்த நாட்களில் தன் மனைவிக்கோ மகளுக்கோ நேரமே எழுந்து காபி போடுக்குடுக்கலாம்..

உதவி செய்யலாம்..

சரிதானே மாற்றம் நம்மில் இருந்து தொடங்கட்டும்..

தொடர்ந்து பேசுவோம்…

Related Posts