ஜூன் 2015 புதிய ஆசிரியன்

புதிய ஆசிரியன் – ஜூன் 2015 தலையங்கம்

சாதிக் கொடுமைகள் வேண்டாம் – அன்பு
தன்னில் செழித்திடும் வையம்

– மகாகவி பாரதியார்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பெருமையே அது வலியுறுத் தும் சமூக நீதிதான். இருப்பினும் அரசியலமைப்புச் சட்டம் நிறைவேறி 65 ஆண்டுகளாகியும் இந்தியாவில் வாழும் இருபது கோடிக்கும் மேற் பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு சமூக நீதி இன்னமும் கிடைத்த பாடில்லை. தீண்டாமை என்பது பாவம் மட்டுமல்ல அது ஒரு குற்றமு மாகும் என்றார் அண்ணல் காந்தியடிகள். இந்திய குற்றவியல் சட்டமும் தீண்டாமையை தண்டனைக்குரிய குற்றமாகவே அறிவிக்கிறது. இதற்கென்றே 1955-ல் குடிமை உரிமை பாதுகாப்புச் சட்டமும்; 1989ல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி மக்கள் மீது இழைக்கப்படும் வன் கொடுமைத் தடுப்புச் சட்டமும் இயற்றப்பட்டன. ஆனால், இச்சட்டங்கள் எல்லாம் சட்டப் புத்தகங்களை அலங்கரிக்கும் வெற்று வார்த்தை களாகவே இருக்கின்றன. தமிழ்நாட்டில் தீண்டாமைக் கொடுமை பல் வேறு வடிவங்களில் நடந்துவருவதை கள ஆய்வுகள் அம்பலப்படுத்து கின்றன. ஆதிக்க சாதிகளின் வாக்கு வங்கியைத் தக்க வைக் கும் நோக்கில் தமிழகத்தை ஆண்ட, ஆளும் கட்சிகள் இதைக் கண்டு கொள்வதில்லை. இது தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கும் அரசியல் சட்டத்திற் கும் செய்யும் துரோகமே தவிர வேறல்ல. காகிதச் சட்டங்களையே தாங்க முடியாமல் இச்சட்டங்களை அறவே நீக்கச்சொல்லி ஆதிக்க சாதியினர் கோரிக்கை வைக்கும் கொடுமையும் ஒரு புறம் நடக்கிறது. இந்த சூழ்நிலையில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாகத் தீவிர மாகச் செயல்பட்டு வருகிறது. பல தீண்டாமைக் கொடுமைகள் வெளிக் கொணரப்பட்டுள்ளன. ஊருக்கும், சேரிக்கும் இடையில் எழுந்துள்ள அவமானச் சுவர்கள் தகர்க்கப்பட்டுள்ளன. பல்வேறு கிராமங்களிலும் அமுலில் இருந்த இரட்டைக் குவளைமுறை முடிவுக்குக் கொணரப்பட் டுள்ளது. அருந்ததியினருக்கு மூன்று சதவீத உள்ஒதுக்கீடு சாத்திய மாகியுள்ளது. பல சாதனைகள் படைத்த அந்த அமைப்பின் இரண்டா வது மாநில மாநாடு விருதுநகரில் மே 16,17,18 தேதிகளில் வெற்றிகர மாக நடந்து முடிந்துள்ளது. சமூகநீதியை முழுமையாக நிலை நாட்ட தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மைல்கள் பயணித்த தந்தை பெரியாரின் கனவையும், சமூக நீதியை உறுதிப்படுத்தும் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் கனவையும் நனவாக்கிட உறுதி பூண்டுள்ளது, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியை மேலும் வலுப்படுத்தி தமிழக மண்ணிலிருந்து தீண்டாமைக் கொடுமையையும் சாதிக் கொடுமையையும் அறவே ஒழித்திட சபதமேற்போம்.

Related Posts