இந்திய சினிமா சினிமா

பீகே : நிர்வாணத்தின் கேள்வி

மனித நாகரிகத்தின் வளர்ச்சியை ஒரே வார்த்தையில் வார்த்தையில் விளக்குவது எப்படி ? அவ்வாறு விளக்கம் கூற தகுதியுடையவர் யார் ? மெத்த படித்த மேதாவியால் மடுமே இவ்விளக்கத்தை தர இயலுமா? இந்த கேள்வியை சற்றே நாம் யோசித்தபொழுது ஒரு விஷயம்தான் மனதிற்க்குள் வந்தது. மனித நாகரீகம் எனும் மகத்தான தொட்டிலை கடியெழுப்புவதற்க்கு அஸ்திவாரம் அமைத்தவர்கள் , இன்று நாம் அடிப்படை நாகரீகமாக கருதும் ஆடையை கூட அணிய தெரியாதவர்கள்தான் , என்ற உன்மையை முதலில் நாம் உணர வேண்டும் என்பதேயது. மொழி கூட உருவாகிறாத காலத்தில் நெருப்பையும் , மாமிசத்தையும் , விவசாயத்தையும் கண்டுபித்தவர்களே மேதாவிகள். அவர்களை, இக்கண்டு பிடிப்புகளை நிகழ்த்த துண்டியது ஒன்றே ஒன்றுதான் “தேவை”. அதுவே நாம் தேடும் நாகரீகத்திர்க்கான ஒற்றை வார்த்தை விளக்கமாக இருக்க வேண்டும். இன்றுவரை இந்த மனித நாகரிகத்தை வளர்த்தெடுப்பது தேவை எனும் சொல்தான். இந்த தேவையை புறந்தள்ளும் போக்கை ஒரு குழந்தையின் மனதோடும் உண்மையான ஆத்திகனின் ஆதங்கத்தோடும் கேட்கும் படம்தான் பீகே.

விஞ்ஞானத்தை போல , விவசாயத்தை போல , மதமும் மனித தேவையையோட்டியே எழுந்தது என்பதை மறுப்பத்ற்க்கில்லை. சாப்பிட வேண்டும் என்றால் மட்டும் போதுமா அதற்க்காக உழுது , பயிரிட்டு மெனக்கெட வேண்டாமா அது போல்தான் மார்கங்களும் . காலம்,இடம்,பெளதிக சூழ்நிலைமகளால் மார்கங்களில் தன்மையில் வேறுபாடுகள் பிறந்தன என்பதுதான் வரலாறு. ஆனால் இன்றும்டவுள் நம்பிக்கை என்பது உலகம் முழுவதும் ஒன்றுதான். அனைத்திற்க்கும் அப்பாற்ப்பட ஒரு சக்தியின் மீது வைக்கும் நம்பிக்கை மனித சமுதாயத்தினின்று பிரிக்கமுடியாத ஒரு பகுதியாக வந்திருக்கிறது என்பதில் ஐய்யமில்லை. இந்நம்பிக்கையை பூர்த்தி செய்ய உருவான மார்கங்களுக்கு இடையிலான சர்ச்சையை அல்லது மார்கங்களின் வளர்ச்சிபோக்குகளில் இருக்கும் அபாயகரமான விஷயங்களைதான் இத்திரைப்படம் கேள்விக்குள்ளாக்குகிறது. காலங்காலமாக பகுத்தறிவினில் இருந்து புறப்பட்ட கேள்விகளானாலும் ஒரு குழந்தையின் அறியாமைனின்று கேட்கப்படும் கேள்விகளும் , அதற்கு பதில் என்ற பெயரில் கிடத்தவற்றால் ஏற்பட்ட குழப்பங்ளும் , அதானால் ஏற்ப்படும் சோகமும் , அந்த சோகம் தந்த தேடலும்தான் இறுதியாக கிடைத்த விடையும்தான் பீகே.

ஒரு வேளை நமது சமூகம் குழந்தைகளுக்கான ஜனனாயகதன்மையும் , அவர்களின் கேள்விக்கான சுதந்திரத்தையும் , மதிப்பையும் கொடுக்கும் சமூகமாக இருந்திருந்தால் இன்று பிகே எனும் வேற்றுகிரகவாசி இந்த மாதிரியான மிக அடிப்படை கேள்விகளை நம்மை நோக்கி கேட்கும் நிலை வந்திருக்காமல் இருந்திருக்கும். கள்ளளங்கபடமற்ற குழைந்தகளுக்கே கருத்து சுதந்திரம் இல்லாத போது , 18 வயதை தாண்டி யோசிக்கும் திறனும் சற்றே அதிகமாக உள்ள அமீர்கானுக்கு அந்த சுதந்திரம் கிடைக்கும் என நாம் எதிர்பார்க் முடியாதுதான். நம்பிக்கை சார்ந்த விஷயமாக மதத்தை பார்க்கும் பட்சத்தில் , மத மார்கங்களுக்கு இடையிலான வேறுபாடுகளை பகுத்துபார்க்கும் அறிவு அந்தந்த மார்கத்தின் ஒரு பகுதியாகவே அமைந்திடும் . வேறுவார்த்தைகளில் கூறுவதானால் ஆத்திகம் பகுத்தறிவை தனதாக்க்கும் அற்ப்புத நிகழ்வு அது . கடவுள் கூட உண்மையாகவே எல்லாவற்றிர்கும் அப்பார்பட்டவராக ஆகியிருப்பார். இவை எல்லாவற்றிர்க்கும் மாறாக கடவுளுக்கும் அப்பார்ப்பட்டதாக மத மார்கங்களின் வளர்ச்சிபோக்குகள் அமையும்போது , கடவுள் நம்பிக்கை எனும் ஒரு அற்புத தேவையையே புறந்தள்ளி வேறெந்த பிடிமானமும் இல்லாத ஒரு அபாயகரமான நிலைக்கு ஆத்திக கருத்தாக்கமே தள்ளப்படுகிறது. இதன் விளைவு எவ்வளவு கொடுரமானதாக இருக்கும் என்பதை ஒரு சராசரி இந்தியனுக்கு சொல்லத்தேவையில்லை. இந்த நிலைமையைதான் பீகே சற்றே ஹாஸ்யமாக கூற முற்படுகிறது. இத்திரைப்படத்தில் கூறவது போல் “நீங்கள் படைத்த கடவுள் , உங்களை படைத்த கடவுள் ” என் கடவுளை இருவகை படுத்துவது, கடவுள் நம்பிக்கையை எந்த வகையிலும் நிராகரிக்காமல் அதைக்கொண்டாடும் பகுத்தறிவேயன்றி வேறில்லை. இது எந்த மதத்திற்க்கும் பொருந்தும்.

கடவுள் நம்பிக்கையை புறந்தள்ளி மத மார்கங்களை பிரதானபடுத்தும் போக்கு கடவுளை அடைய காத்திருக்கும் , கடவுள் நம்பிக்கை உடைய மனிதர்களாகைய நம்மயே நம் நோக்கத்திற்க்கு தடையாக ஆக்குகிறது. இறுதியில் மார்கங்களில் நம்மை இழந்து கடவுளை மறந்துவிடுகிறோம். எந்த சூழ் நிலைமையில் குரு கிரந்த சாகிப்பை குரு கோபிந் சிங் குருவாக அறிவித்தாரோ , எந்த நோக்கத்தோடு ராமானுஜர் திருக்கோட்டியூரில் கோபுரத்தின் மீதிருந்து இருந்து முழங்கினாரோ , நபிகள் நோக்கத்தோடு ஹடிசை வரைந்தாரோ , அதே நோக்கத்தோடுதான் பீகேயும் பல கேள்விகளை கேட்கிறது,. மேற்கூறீய அனைவருமே கடவுள் நம்பிக்கையின் தேவையை வேறு எவரையும் விட நன்றாக உணர்ந்தவர்கள், அகையினாலேதான் மத மார்கங்களை புதுப்பித்தனர் , அவர்களுக்கு கடவுள் நம்பிக்கை வேறு எதையும் விட முக்கியமானதாக இருந்தது . அகையினாலே மத மார்கங்களை பற்றிய விவாதங்களை அனுமதித்தனர் , தாமே அதை முன்னெடுத்து நடத்தினர். கூரத்தாழ்வார்களை கூறுடாக்கியதும் , நாவுக்கரசரை சுண்ணாம்பு களவாய்க்குள் போட்டதும் மதவெறியே அன்றி வேறில்லை. எந்த வகையிலும் கடவுள் நம்பிக்கை அதற்க்கு பொறுப்பாக முடியாது. கிட்டதட்ட
இது போன்ற நிகழ்வுதான் பீகேவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதும். இவ்வாறான காரியங்கள் ஆத்திகர்களின் கடவுள் நம்பிக்கையை அவமதிப்பதேயன்றி வேறில்லை. சுருங்க சொன்னால் இதுதான் பீகே கூறும் கருத்து . சரியாக சொன்னால் இது பகுத்தறிவின் கருத்து , இதில் ஒரு மதத்தையோ மார்கத்தையோ சாடுவது என்னும் பேச்சுக்கே இடமில்லை. கடவுள் நம்பிக்கையை பின்னுக்கு தள்ளும் அனைவருமே கேள்விக்கு உட்படுத்தபடவேண்டியவர்கள்.

இத்திரைப்படத்தின் கடைசி காட்சியில் வருவது போல, காதலனும் காதலியும் தமக்கு கொஞ்சமும் சம்மந்தமில்லாத கடிதத்தால் பிரிவது போல , பக்தனும் கடவுளும் இந்த உலகத்தில் பிரிக்கப்பட்ருக்கின்றனர். இந்த பிரிவை தாங்க முடியாத ஒரு அப்பாவி ஆத்திகனின் உள்ளம் கூறும் கதைதான் பீகே. இந்த உள்ளத்தின் நோக்கமும் அதன் புனிதமும் ஒரு குழந்தையயின் நிர்வாணத்திற்க்கு சமமான புனிதத்தை உடையது. அதை வக்கிரமாகத்தான் பார்ப்பேன் என்றால் அது பார்பவரின் பரிணாம வளர்ச்சியில் இருக்கும் குறைபாடேயன்றி வேறில்லை. இது ஒரு வர்தமானனின் நிர்வாண நிலை . பீகே எனும் இந்த ஜிவாத்மா , தனக்கான கடவுள் எனும் பரமாத்மாவுடன் இரண்டர கலக்க நினைக்கிறது குறுக்கே வருபவர்க்ளை நேருக்கு நேர் சந்த்திபதை தவிர திரும்பியோடும் எண்னம் இல்லை அதற்கு.
— ஜீவாத்மன்

Related Posts