பிற

பற்றி எரியும் ஸ்டெர்லைட் , அரசியல் தீர்வா ,விஞ்ஞானத் தீர்வா?

ஸ்டெர்லைட் போராட்ட துப்பாக்கீ சூடு நடந்து முடிந்து இரண்டு நாள் ஆகிவிட்டது. இநேரம் ஆட்சி தமிழக அரசியல் சூழல் கொந்தளிப்பாகி இருக்க வேண்டும் . ஆனால் முதல்வரும் துனைமுதல்வரும் எப்போதும்போல் பேட்டிகளை கொடுத்து கடந்து செல்கின்றனர். மத்தியில் ஆட்சி செய்பவர்களின்  ஆணவம் இவர்களை விஞ்சுவதாய் இருக்கிறது. தமிழ் சமூகத்தால் முற்றாக நிராகரிக்கபட்டிருக்கும் கட்சிகள் என்று உண்டானால் அது , பாஜகவும் அதிமுகவும்தான். ஆனால் அவர்கள்தான் எந்த குற்ற உணர்வும் இல்லாமல் ஆட்சியில் அமர்ந்திருக்கின்றனர். இவர்களின் கயமையையும் , எதிர்கட்சி தலைவரின் சம்பிரதாய எதிர்ப்பு அறிக்கையையும் , ஆறுதல் சொல்ல செல்வதையும் பெரிதாக பிரித்து பார்க்க முடியவில்லை. சட்டமன்றத்தில் உள்ள பிரதான எதிர்கட்சிகளான காங்கிரசும் திமுகவும் ஆட்சியில் இருக்கையில்தான் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கப்பட்டது. அப்போதே பல இடங்களில் முறைதவறி இயங்கியதற்க்காக் வேதாந்தா குழுமத்தின் மீது பல குற்றசாட்டுகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

கண்னுக்கு எட்டிய தூரம் வரை தமிழகத்தின் கேடுகெட்ட அரசியல் சூழலுக்கு  அரசியல் தீர்வாக உடனடியாக ஏதும் தெரியவில்லை. வேதாந்தா மட்ட்டுமல்ல , பல பண்னாட்டு நிறுவனங்களுக்கு நாட்டின் வடகிழக்கு , மேற்கு மாவட்டங்களை பாஜக காங்கிரஸ் இரண்டுமே தாரைவார்த்திருக்கின்றன. இன்று திமுக காக்கும் மவுனத்துக்கு இனையான மவுனத்தை மற்ற பிராந்திய கட்சிகளும் காட்டி உள்ளன.  இதற்கு என்னதான் தீர்வென்றூ யோசித்தால் , இதில் உள்ள அரசியல் விஞ்ஞான அம்சங்கள் இர்ண்டையுமே புரிந்துகொண்டால் மட்டுமே தீர்வு சாத்தியம்

ஆக  அவ்வாறூ தீர்வு என்று ஏதேனும் ஒரு மாற்று புலப்படுமாயின் எதிர்காலத்தில் அது கொள்கைமாற்றாக மட்டுமே இருக்க முடியும். கடந்த காலங்களை போல் இது ஐந்து வருடம் அது ஐந்து வருடம் என்ற மரத்துபோன மாற்றாக இருக்க முடியாது. கொள்கை மாற்று என கூறுகையில் , சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் . யாவற்றீற்கும் முன் ஓர் உண்மை, கடந்த வருடம் இந்தியாவிலேயே அதிக போராட்ட களம் கண்ட மாநிலமாக தமிழகம்தான் உள்ளது என்பது அரசின் புள்ளி விவரம்!!

21000 சொச்சம் போராட்டங்கள் , ஒரே வருடத்தில்!!  இத்தனை ஆயிரம் போராட்டங்களில் பெரும்பாலானவை சுற்று சுழல் கேடு என்று உணரப்பட்ட அரசின் அல்லது தனியாரின் திட்டங்களுக்கு எதிராக நடந்தது என்றால் மிகையில்லை. மீத்தேன் முதல் , நியுட்ரினோ ,ஸ்டெர்லைட் கூடங்குளம் என இது நீண்ட பட்டியல். பெரும்பாலான போராட்டங்களில் நியாயம் இல்லாமலில்லை. ஆனால் தீர்வுதான் கிடைத்தாபாடில்லை.  மேற்கூறியபடி கொள்கை மாற்றுதான் தீர்வென்றால் அரசியல் கட்சிகளும் , மக்களும் என்ன செய்ய வேண்டும் ?

 

தமிழக அரசியலில் பிராதான திராவிட கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கைகளில் பிராதனமாக  கூறுவது இலவசங்கள்.  மக்களும் அதயே பெரிதாக பேசுவதால் , கிட்ட தட்ட ஓட்டுகளை விலைக்கு வாங்குவது போல் இலவசங்களை வீசி ஓட்டு வாங்குவது , காசுக்கு ஓட்டு போடுவது என்பது வாடிக்கையாகிவிட்டது. இனி இது போல் செய்தல் கூடாது  , மாறாக மக்கள் நல திட்டங்கள் குறித்து விரிவான கலந்துரையாடலை அரசியல் கட்சிகள் மேற்கொள்ல வேண்டும்.  மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் திட்டங்களை மேற்கொள்வது என்பது மக்கள் பங்கேற்பு இல்லாமல் சாத்தியமில்லை,  ஆக நிபுணர்கள் , மக்க்ள் , கட்சி பிரதிநிதிகள் என முத்தரப்பும் பங்கேற்கும் கூட்டங்களை அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரத்தின் உத்தியாக மாறினாலும் தகும். இதை கூறும்போது ஒரு கேள்வி எழலாம் , எல்லா கட்சிகளும் அவர்களுக்கு வேண்டியாற்போ யாராவது விஞ்ஞானிகளை கூட்டிவந்து பேசி ஏமாற்றலாமே என்று .

 

கண்டிபாக முடியும்தான் , ஆனால் அவ்வாறு ஒரு உரையாடல் தொடங்குவது என்பதே ஒரு ஆரோக்கியமான விஷயம் , ஒரு சிரிய ஹார்லிக்ஸ் பாடிலுக்கு கூட ஆயிரத்தெட்டு விஞ்ஞான விளக்கம், விளம்பரங்களில் கூறூம் காலத்தில் , வெறும் தேர்தல் அறிக்கைகளில் சில வார்த்தைகள் மூலமோ , அல்லது மேடை பிராச்சரங்களில் அரசியல்வாதிகளின் பேச்சுகள் மூலமோ இந்த கடினாமான பிரச்சனையை எதிர்கொள்லவியலாது.

 

வளர்ச்சி, மக்கள் மேம்பாடு , மக்கள் நலன்  , சுற்றுசூழல் இவைஅனைத்தும் கண்டிபாக நேர் எதிர் முரண்பாடுகளானவை அல்ல, அதே நேரம் பல சமயங்களில் முரண்கள் எழத்தான்  செய்யும் , அதை எவ்வாறு தீர்ப்பது என்பதை அறிவியல் பூர்வமாக ஆராய வேண்டும் , அரசியலினால் அல்ல . அரசியலல்லாமல் ஏதும் இல்லை என்கையில் , அரசியல் கட்சிகளின் நிலைகளை கூர்ந்து ஆராய்ந்து மக்களின் பக்கம் இருப்பவர்கள் எந்தெந்த கட்சிகள் என கண்டுகொளும் பொறுப்பு மக்களுக்கும் உள்ளது.

 

பூமியும் , அதைசார்ந்த மனித குலமும் , இன்னபிற உயிறினங்களும் இங்கு வாழ வேண்டுமானால் , விஞ்ஞான வளர்ச்சி அவசியம் , இதுவரை பூமியைதவிர வேறோர் வீடு இன்னும்  நமக்கு கிடைக்கவில்லை, கிடைத்தாலும்  போகும் சாத்தியகூறு  இன்னும் தென்படவில்லை ஆக, வீடும் முக்கியம் , விஞ்ஞானமும் முக்கியம் எனும் இக்கட்டான சூழல்தான் இது , அறிவியல் பார்வை கொண்ட அரசியலே எதிர்காலத்தீர்வு , ஏனைய அரசியல் அழிவிற்கே வழிவகுக்கும்

Related Posts