அறிவியல்

நெஞ்சைக் கரைக்கும் ஆற்றல் எபோலா ஆபத்து…?

எம். சிவானந்தம், திருவாரூர்

அமெரிக்கப் பத்திரிகையாளர் ஜேம்ஸ் ஃபோலியின் தலையை அறுத்துக் கொன்ற காட்சி கற்பனைக்கெட்டாத கொடூரமாக இருக்கிறதே?

கொடூரம்தான். காட்டுமிராண்டித்தனமாகத்தான் நமக்குத் தெரிகிறது. இராக்கில் தாக்குதல் நடத்த உத்தரவிட்ட ஒபாமாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே இந்தப் படுகொலை என ஐஎஸ்ஐஎஸ் அறிவித்திருக்கிறது. உலகமெங்கும் போர்ப் பதட்டத்தையும் படு கொலைகளையும் நடத்தும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நிற்பவர்கள் இப்படிப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாதிகளாக இருக்கிறார்கள். அல் காய்தா போல ஐஎஸ்ஐஎஸ் அமைப்பும் அமெரிக்கா வளர்த்த கடாதான். இந்த மோதலில் சிக்கி அழியும் பாவப்பட்ட பெண்களையும் குழந்தைகளையும் நினைத்தால் நெஞ்சம் கலங்கித் தவிக்கிறது. பிற நாடுகளில் ஜனநாயகத்தைக் காப்பாற்றுகிறேன் என்ற பெயரில் அமெரிக்கா தலையிடும் இடங்கள் எல்லாம் ரணகளங்களாக மாறுவதுதான் வரலாறு. ஆனந்தவிகடன் வலைபாயுதே பகுதியில் “இலங்கையில் பூமிக்கடியில் பெட்ரோல் கிடைக்குதுன்னு கிளப்பி விட்டுட்டாப் போதும், மிச்சத்தை அமெரிக்காக்காரன் பாத்துக்குவான்” என்ற பதிவு நகைச்சுவையாகத் தெரிந்தாலும் எவ்வளவு சத்தியமான உண்மை!

அந்தோனிசாமி, மதுரை 11

வறட்சியா, தமிழகத்தில் எங்கே வறட்சி என்று கேட்கும் தமிழக அமைச்சர் களை என்ன செய்வது?

வறட்சி நிவாரணம் வேண்டும் என்று தமிழக விவசாயிகள் கேட்கிறார்கள். அந்த செலவைத் தவிர்க்க, அம்மா ஆட்சியில் வறட்சி எப்படி இருக்கும் என்று கேட்டுவிட்டால் அம்மாவைக் குளிர்வித்தது மாதிரியும் ஆயிற்று, செலவி லிருந்து தப்பித்தது மாதிரியும் ஆயிற்று என்று அவர்கள் போடும் கணக்குதான் இப்படிப் பேச வைக்கிறது.

வி. சேகர், ஆரணி

மனிதர்களுக்குபுதிய ஆபத்தாக எபோலா வந் திருக்கிறதே?

இந்தியாவுக்குள் எபோலா வைரஸ் வர வாய்ப்பு இல்லை என்று அரசு கூறுகிறது. நமக்குத் தான் நம்பிக்கை வர மறுக்கிறது. கொடிய தொற்றுநோய் என்கி   றார்கள். வியர்வையிலிருந்து கூட தொற்றக் கூடியதாம். இந்த வைரஸ் தொற்று பாதிக்கப் பட்டவர்களை 30 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கண்காணிக்க வேண்டுமாம். இதுவரை மருத்து கண்டுபிடிக்கப்படவில்லை. எபோலா பாதித்த 4 மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் மட்டும் 45 ஆயிரம் இந்தியர்கள் இருக்கி றார்கள். அவர்கள் தாய்நாடு திரும்பினால் ஒவ்வொருவரை யும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். பார்க்கலாம்.

எஸ். தேவராஜ், திருநெல்வேலி

அண்மையில் நீங்கள் ரசித்துப் படித்தவை?

தி இந்துவில் சமஸ் எழுதி வரும் நீர், நிலம், வனம் தொடர் தான். கடலோடிகளின் வாழ்க் கையைப் பற்றி இவ்வளவு நெருக்கமாக அறிந்துகொள்ளும் வாய்ப்பு இதுவரை எனக்குக் கிடைத்தது இல்லை. அன்றாடம் நாம் சந்திக்கும் சில பிரச்சனைகள் எல்லாம் தூசுக்குச் சமானம் என்ற உணர்வை ஏற்படுத்திய கட்டுரை கள். உணர்வுபூர்வமாக எழுதி நம் நெஞ்சைக் கரைக்கும் ஆற்றல் சமஸிடம் இருக்கிறது.

எம். காளிமுத்து, புதுக்கோட்டை

நம் நாட்டில் கருப்புப் பணம் உருவாகும் காரணங்கள் பட்டியலில் கல்வி நிறு வனங்களும் இடம் பிடித்துள் ளனவே..?

ரியல் எஸ்nட், சுரங்கத் தொழில், மானியங்களைத் திசை திருப்பல் ஆகிய மூன்று வழி களில் கருப்புப் பணம் உருவாவ தாகப் படித்தபோது ஆச்சரிய மாக இல்லை. கல்வி நிறுவனங் கள் அடிக்கும் கொள்ளை நான்காவது காரணமாக இருக்கிறது என அறிந்தபோது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. தனியார் மருத்துவ மனைகளைக்கூட கல்வி நிறுவனங்கள் மிஞ்சி விட்டன போலும். கல்வி உரிமைச் சட்டம் என்று பெயருக்கு ஒரு சட்டத்தைப் போட்டு விட்டு அரசு கையைக் கட்டிக் கொண்டிருந்தால் அந்தத் துறையில் கருப்புப்பணம் பெருகாமல் எப்படி இருக்கும்?

கே. சக்திவேல், நாமக்கல்

காங்கிரஸ் ஆட்சியில் டீசல் விலை ஏறியபோது அதைக் கடுமையாகச சாடிய தமிழக முதல்வர் அதே காரியத்தை மோடி அரசு செய்யும்போது மயிலிறகினால் ஒத்தி எடுப்பதற்கு என்ன காரணம்?

வேறு காரணங்கள் இருப்பது கண்கூடாகத் தெரிகிறதே? ஆனால் ஒன்று, அம்மாவின் மென்மையான அணுகுமுறை யெல்லாம் எப்போது மாறும் என்று யாராலும் சொல்ல முடியாது. அவராலேயே கூடச் சொல்ல முடியாது. விடுங்கள். அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியவர்கள் நாம் அல்ல.

————————————————————————————————-

கேட்டா கொடுப்பாங்க.. கேட்டாதான் கொடுப்பாங்க…

ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் புதிய ஆசிரியன் சந்தா சேகரிப்பில் ஏற்படும் ஒரு தொய்வு, இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக புதிய ஆசிரியன் இதழைப் பாதித்திருக்கிறது. நண்பர்களிடம் நீங்கள் சந்தா கேட்டால் கொடுப்பார்கள். கேட்டால்தான் கொடுப்பார்கள். தொய்வுக்கு ஒரு காரணம் நாம் ஈராண்டுச் சந்தா வசூலிப்பதை அநேகமாகக் கைவிட்டு, ஓராண்டுச் சந்தாக்களாகவே வசூலிப்பது தான். ஆர்வலர்கள் இந்த அம்சத்தைக் கவனித்து இனி ஈராண்டுச் சந்தாக்கள் சேர்ப்பதில் முனைப்பு காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

-ஆசிரியர் குழு

Related Posts