பிற

நிறவெறிக்கு‍ எதிரான நாள் (1962 நவம்பர் 6)

தென்னாப்பிரிக்காவில் கருப்பின மக்கள் 80 சதவிகிதம் இருக்கின்றனர். பெரும்பாலும் டச்சு‍ நாட்டிலிருந்து‍ வந்து‍ குடியேறிய வெள்ளையர்களின் வாரிசுகள் ஒன்பது‍ சதவிகிதமும், வெள்ளையர்களுக்கும் கருப்பின மக்களுக்கும் பிறந்த கலப்பினத்தவர் ஒன்பது‍ சதவிகிதமும் உள்ளனர்.

இங்கிலாந்திடமிருந்து‍ அது‍ 1910 இல் சுதரந்திரமடைந்தது. ஆனால் கருப்பின மக்களுக்கு‍ முழுமையான சுதந்திரம் கிடைக்கவில்லை.

கருப்பின மக்கள் தனியான இடங்களில் தான் வசிக்க வேண்டும். வெள்ளையர் வசிக்கும் இடங்களில் நுழையக் கூடாது‍ என்ற அளவில் கருப்பின மக்கள் மீதான அடக்குமுறை இருந்தது. இதனை எதிர்த்து‍ 1960 இல் ஜோகன்னஸ்பர்க் நகரில் கருப்பின மக்கள் அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்கள் மீது‍ துப்பாக்கிச் சூடு‍ நடத்தப்பட்டு‍ 69 பேர் படுகொலை செய்யப்பட்டனர், 180 பேர் காயம் அடைந்தனர்.

File:Sharpville-massacre.jpg

போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில் சிலர்

Sharpeville படுகொலைக்கு‍ பின்னர், 1960 களின் மத்தியில் கம்யூனிஸ்ட் கட்சி, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ், அசானியா பான் ஆப்பிரிக்கன் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கட்சிகள்  சேர்ந்து‍ நிறவெறிக்கு‍ எதிரான விழிப்புணர்வு இயக்கத்தை நடத்தின.

1961 இல் ஆப்பிரிக்கா குடியரசு‍ நாடாக மாறியது. கருப்பின மக்களுக்கு‍ குடியுரிமைகள் கிடைக்கவில்லை. கருப்பின மக்களை தனியாக பிரித்து‍ வைக்கும் கொள்கையை ஐநா சபை இதே நாளில் கண்டித்தது. அது‍ மனித குலத்திற்கு‍ எதிரான குற்றமாக அறிவிக்கப்பட்டது. ஐநாவில் இருந்து‍ தென்னாப்பிரிக்கா 1974 இல் தற்காலிகமாக நீக்கப்பட்டது.

1990 இல் புதிய அரசியல் சாசனம் அறிவிக்கப்பட்டது. நிறவெறிக்கு‍ எதிராக போராடி‍ தனது‍ ஆதரவாளர்களுடன் 27 வருடமாக சிறையில் இருந்த நெல்சன் மண்டேலா விடுதலை செய்யப்பட்டார்.

புதிய அரசியல் சாசனத்தின் படி‍ 1994 இல் நடந்த தேர்தலில் தான் கருப்பின மக்களுக்கு‍ வாக்குரிமை கிடைத்தது. அப்போது‍ மண்டேலா நாட்டின் ஜனாதிபதி ஆனார். இனவெறி பாகுபாடுகள் சட்டப்படி‍ முடிவுக்கு‍ வந்தன. ஐநா சபையிலிருந்து‍ தென்னாப்பிரிக்கா நீக்கப்பட்டது‍ ஒரு‍ அடித்தளமாக அமைந்தது. நிறவெறியை ஐநா மற்றும் சமூக இயக்கங்கள் கண்டித்த நாள் (நவம்பர் 06, 1962).

மூலம்: தமிழ் தி இந்து, விக்கிப்பீடியா

Related Posts