அரசியல்

நாம் தமிழர் உறவுகளுக்கு ஒர் மனம்திறந்த மடல் …….!

தங்கை அனிதாவின் நினைவேந்தல் நிகழ்வில் அண்ணன்கள்  அமீர் , ரஞ்சித் இடையிலான விவாதம் குறித்து நீங்கள்  பரவலான விமர்சனங்களையும் , பல வினாகளையும் முன்வைத்தீர்கள் அதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. காரணம் விமர்சனங்களும் ,வினாக்களுமே ஆரோக்கியமான  அரசியலின் தொடக்கம் என்பதை நாம் அறிவோம்.  ஆனால் அந்த நிகழ்வில் இறுதியாக நடந்த விவாதத்தை மட்டும் வைத்து விமர்சனம் செய்த நீங்கள் ரஞ்சித் அவர்களின் ஒட்டுமொத்த உரையின் சாரம்சத்தை மறைத்ததுதான் நான் உங்களுக்கு இந்த கடிதத்தை எழுதும் நிலைக்கு தள்ளப்பட்டேன். அதில் மிகபெரிய அரசியல் உள்நோக்கம் இருப்பதாக உணர்கிறேன் …

 • நீங்கள் திட்டமிட்டு தவிர்த்த அல்லது உங்கள் சித்தாந்தம் மறைத்த அந்த மேடையில் அண்ணன் ரஞ்சித் பேசியதை ஒரு பருந்து பார்வையில் உங்களுக்கு மீளநினைவு செய்ய விரும்புகிறேன்.
 • சமூகநீதியற்ற தமிழகத்தில் நாம் சமூகநீதியற்று வாழ்ந்தால் நாமும் ஒருநாள் கொல்லப்படுவோம் , நானும் கொல்லப்படுவேன்.
 • இன்னும் சேரி, ஊர் என்று பிரிந்து வாழ்கிறேம் இதற்க்கு யார் காரணம்?
 • மாட்டுக்கறி தடைவிதிக்கப்பட்டப்போது பொது சமுகம் போராடாடது ஏன் அது என்ன வெறும் தலித் இசுலாமிய உணவா?
 • பெரியாரை சொல்லி இன்னும் எத்தனை நாள் ஒர் சமூகநீதியற்ற அரசியலை செய்யப்போகிறோம்?
 • காலணியில் பெரியார் ,காமராசர் தெரு இருக்கும்போது ஊருக்குள் அம்பேத்கர் தெரு இல்லையே ஏன்?
 • வாடி போடி என்றும் தன் சமநிலை இல்லதாவனை மரியாதை குறைவாக நடத்தும் மனநிலை தமிழனுக்குள்  எப்படி வந்தது?
 • பெரியாரை வைத்து அரசியல் செய்த அரசியல் செய்யும் அரசியல்வாதிகளே பெரியாரை நமக்கு சொல்லிதரவில்லை.
 • ஆட்சியை தக்கவைக்க போராடும் தலைவர்களால்  எப்படி சமுக நீதியை காக்கமுடியும் ?
 • இலங்கையில் தமிழ் சமுகம் கொல்லப்பட்டப்போது நாம் எழுச்சியடையாத காரணம் என்ன?
 • உனக்கு சுயவிமர்சனம் இருந்தால் இந்த தலைவரகளூக்கு ஓட்டே போட்டிருக்கமாட்ட.
 • நாம் வாழவேண்டும் என்ற அடிப்படையில் ஒன்று சேர்ந்திருக்கிறோம். தமிழன் என்ற அடிப்படையில் சேர்ந்தால் நமக்குள் எப்படி சாதி ,வர்க்க வேறுபாடுகள் வரும்.
 • எந்த அரசியல் புரிதலும் இல்லாமல் , இன்னும் சாதிகளுக்கு எதிராக போராடமல் தமிழ்தேசியம் சாத்தியமே இல்லை , தமிழன் பார்பன்னாகமாறி அண்டு பல ஆகிவிட்டது.தமிழன் தமிழனாக இல்லை சாதியாகவே இருக்கிறான் … இதுதான் அவர்பேசியது.

இதிலிருந்து தமிழ் தேசியம் சாத்தியமே இல்லை என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் உருவி எடுத்துவிட்டு ஆபச வார்த்தைகளால்  , தரக்குறைவான விமர்சனங்களால் பொது வழியில் நீங்கள் பேசுவது உங்களின் தரத்தை குறைக்குமே தவிர எதிராளியை அல்ல.

சேரிக்குள் நீங்கள் இருக்கும்வரை, தலித்தாக நீங்கள் உங்களை அடையாளப்படுத்துவரை சாதி ஒழியாது நாங்கள் உங்களை தமிழனாகத்தான் பார்க்கிறேம் நீங்கள்தான் தலித் அரசியல் சாதிய அரசியல் செய்கிறீர்கள் என்று கொஞ்சமும் அரசியல் அறிவு இல்லாமல் பேசும் நாம் தமிழர் தோழர்களிடம் சில கேள்விகள்

 • நாங்கள் கோவிலுக்குள் வரவில்லையா நீங்கள் தடுக்கிறீர்களா ?
 • நாங்கள் சேகரிக்கும் எங்கள் பிள்ளைகளுக்கும்   காமராசரை பெயரை வைத்து இருக்கிறேம் ,அம்பேத்கர், கக்கன் பெயர் வைக்காது சாதி அரசியல் செய்வது நீங்களா தலித்துகளா?
 • திருமண விளம்பரத்தில் சொந்த சாதி பெண் தேடுபவனுக்கு எதிராக நாம் தமிழர் செய்தது என்ன ?
 • சைவம் மட்டும் என்று வாடைகை வீட்டில் தொங்கும் அறிவிப்புக்குக்கு எதிராக நீங்கள் போராடுவது எப்போது ?
 • தலித் அல்லாத இயக்கத்தை ஆரம்பித்து மாநாட்டையும் நடத்திமுடித்த ராமதாசுக்கு எதிராக நீங்கள் செய்த புரட்சி என்ன ?
 • இன்னும் உங்கள் பீயை கையில் அள்ளி தலையில் சுமப்பவனுக்காக நீங்கள் எப்போது போராடிவீர்கள். அவன் தமிழன் இல்லையா ?
 • சேரி தாண்டி தமிழ் சமுகத்தில் திருமணம் செய்ததற்காக கொலைசெய்யப்பட்ட தம்பி தங்கைகளுக்கு உங்கள் பதில் என்ன ? அவர்கள் தமிழர் இல்லையா ?
 • இன்னும் இரட்டை குவளை இருக்கிறதே ? நாம் தமிழர் என்ன செய்தது இதற்கு?

இன்னும் கோடி கேள்விகள் தலித்துகளிடம் இருக்கிறது. இதெல்லாம் தெரிந்தும் கடந்துபோகும் பொது சமுகத்திற்க்கும், நாம் தமிழர் தோழர்கள்களுக்கும் நீங்கள் அரசியில் செய்யவேண்டியது , அரசியல் கற்பிக்க வேண்டியது தலித்களிடம் இல்லை உயர்சாதிக்காரர்களோடு, தலித்கள் தமிழார்களாகத்தான் வாழ்கிறார்கள் பொது சமுகம் அவர்களை ஏற்க்க மறுக்கிறது என்பதை  ஏற்றுக்கொண்டு நீங்கள் பொதுசமுத்திடம் தமிழ்தேசிய அரசியலை பேசுங்கள் , உண்மையில் மாறவேண்டியது நீங்கள் தான் தலித்துகள் அல்ல .

நிலபிரபுத்துவ சமூகத்தில், உழைப்பு சுரண்டலின் தேவையை ஒட்டி இறுகிப்போன சாதிய கட்டமைப்பின் முரண்களை இன்றைய முதாளித்துவம் தன் உழைப்புச் சுரண்டலுக்காக பயன்படுத்தி வருகிறது. சாதி ஒழிய வேண்டுமானால் நிலப்பகிர்மானம், வளப்பகிர்மானம், உற்பத்தியை மக்களுக்கு பொதுவாக்குதல் எனும் சோஷலிச சமூகத்தில் மாத்திரம் சாத்தியமே ஒழிய, நீங்கள் முன்னிறுத்தும்  தமிழ்தேசியத்தில் அல்ல என்று உங்களுக்கு தெரிந்ததையே நினைவுபடுத்தி நிறுத்துகிறேன்

 

தோழமையுடன்

ஆமையடியான்.

Related Posts