நிகழ்வுகள் பிற

நள்ளிரவு ஒரு மணிக்கு ஒரு இளம்பெண்ணின் தொலைபேசி அழைப்புக்கு தோழர் பினராயி விஜயனின் பதில்

நள்ளிரவு ஒரு மணிக்கு ஒரு இளம்பெண்ணின் தொலைபேசி அழைப்புக்கு தோழர் பினராயி விஜயன் பதில்;

அதிரா ஹைதராபாத்தில் TCS-ல் பணியாற்றும் பொறியாளர். இவரோடு சேர்த்து 13 பெண்கள். ஒருவர் மட்டும் ஆண். 24ம் தேதி நள்ளிரவு முதல் நாடு தழுவிய ஊரடங்கு. இவர்கள் கம்பெனியும் மூடிட்டானுக. என்ன செய்ய, ஹைதராபாத்திலும் இவர்கள் எத்தனை நாளைக்கு தனியாக இருப்பது. அன்று மாலையில் ஒரு டெம்போ டிராவலை வாடகைக்கு அமர்த்தி கொண்டு சொந்த ஊரான கேரளாவில் உள்ள கோழிக்கோட்டுக்கு புறப்பட்டுவிட்டனர்.

தெலுங்கானா – ஆந்திரா எல்லையிலேயே தடுத்துவிட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் இவர்களை போன்று இரு மாநில எல்லையை கடக்க முடியாமல் பரிதவிக்கும் அவலம். அந்தப் பெண் கோழிக்கோடு சப்-கலெக்டரை தொடர்பு கொள்கிறார். அவரது தலையீட்டால் இவர்களது வண்டிக்கு வழி விடப்பட்டுறது.

அங்கே இருந்து புறப்பட்டு ஆந்திரா – கர்நாடக – மாநில எல்லையை சமாளித்து கடந்துவிட்டனர்.
இவர்கள் கர்நாடக – கேரளா எல்லையில் உள்ள முத்துங்கா வன சரணாலயத்தை ஒட்டிய தொலிபெட்டிக்கு வந்தால்தான் அவர்களது மாநில எல்லையைத் தொட முடியும்.

25ம் தேதி இரவு இந்த அடர்ந்த காட்டுக்குள் வண்டி பயணிக்கிறது. இவருக்கு பயம் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் தைரியத்தை வரவழைத்து கொண்டு முயற்சி செய்கிறார். இரவு நேரமாகி கொண்டு இருக்கிறது. கர்நாடக மாநில எல்லையை கடக்க வேண்டும். இந்த டெம்போ டிராவல்காரர் வேறு நான் கேரளாவுக்கு உள்ளே வரமாட்டேன். கர்நாடக பார்டரிலேயே இறக்கி விட்டுட்டு நான் ஹைதராபாத்திற்கு திரும்பிவிடுவேன் என்கிறார்.


அதிரா பல முயற்சிகளை செய்து பார்த்துவிட்டு, கடைசியாக கேரளா முதலமைச்சரோடு தொடர்பு கொண்டு உதவி கேட்டால் என்ன என நினைக்கிறார். அவரது போன் நம்பர் அதுவும் பெர்ஷ்னல் நம்பர் வேணுமே. இவர் கம்ப்யூட்டர் என்ஜினீயர் அல்லவா? ஹூகுல் உதவியோடு ஒரு நம்பரை பிடிச்சு கால் போடுகிறார். அந்த அழைப்பை யாரும் எடுக்கவில்லை.

இரவு. நள்ளிரவு ஒரு மணி. மீண்டும் முயற்சி செய்கிறார். அந்த பக்கத்தில் முதலமைச்சர் பேசுகிறார். இந்த குழந்தைகள் கண்ணீர் மல்க கதையை கூறுகிறார்கள்.

“கவலைப்படாதே குழந்தைகாள். முயற்சி செய்கிறேன். தீர்வு காண்போம்” என்கிறார் தோழர் பினராயி விஜயன். வயநாடு எஸ்.பி. மற்றும் கலெக்டர் நம்பரை கொடுத்து, அவர்களோடு தொடர்பில் இருங்கள், மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்கிறார்.

கேரளா – கர்நாடகா எல்லையில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் வாகனத்தோடு நள்ளிரவில் காத்திருக்கிறார். இவர்கள் எல்லையை அடைந்தவுடன் அவர் இந்தப் பெண் குழந்தைகளை மருத்துவப் பரிசோதனை செய்து வண்டியில் ஏற்றி கோழிக்கோட்டுக்கு பத்திரமாக அனுப்பி வைக்கிறார்.

வீடு வந்து சேர்ந்தவுடன் அவர்கள் மீண்டும் முதலமைச்சரை தொடர்பு கொண்டு நன்றி தெரிவிக்கின்றனர். “ஓகேபா, வெளியே லாந்தக்கூடாது” என்றார் என அதிரா பேட்டி அளித்து உள்ளார்.

ஆம். நாங்கள் கம்யூனிஸ்ட்கள்…

Related Posts