அரசியல்

திமுகவை கலங்கடித்த 2ஜி ஊழல் உரையாடல் 2 : (ஜாபர் சேட் – சரத் ரெட்டி)

(காங்கிரஸ் – தனது சிபிஐ உளவு அமைப்பை பயன்படுத்தி, திமுகவின் மீது கொடுத்த அழுத்தம் குறித்த ஊகமான புரிதலை இந்த உரையாடல் மூலம் பெற முடிகிறது. மேலும், குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியைப் போலவே, தமிழகத்திலும் காவல்துறை அதிகாரிகள் முதலமைச்சரின் சொந்த ஏவல்களைச் செய்து வந்துள்ளது அம்பலப்படுகிறது. அப்போதைய முதலமைச்சருக்கு இது முழுமையாக தெரியும் என்றும், டாட்டா நிறுவனத்திற்கும், திமுக குடும்பத்திற்கும் இடையில் இது நடந்திருக்கலாம் என பிரசாந்த் பூசன் சொல்கிறார்)

இரண்டாவது உரையாடல்:

தேதி – 13-02-2011 (இது முழுவதும் ஆங்கிலத்தில் நடந்திருக்கிறது)

ஜாபர் சேட்டுக்கும், கலைஞர் தொலைக்காட்சியின் எம்.டி சரத்குமார் ரெட்டிக்கும் இடையில் நடந்த உரையாடல்கள்.

Jaffer Sait: சரத் … சரத் …

Voice: சரத்தும், அமிர்தம் சாரும் இங்க இருக்காங்க, அவங்க முதல்வரை சந்திக்கல.

Jaffar Sait: நான் அவரோட நம்பருக்கு முயற்சி பண்றேன். ஆனா, அது கெடைக்கல

Voice: நான் என் போனை குடுக்கவா சார்?

Jaffar Sait: சரி, உன் போனை குடு

Sharad Reddy: Hello!

Jaffar Sait: யெஸ், சரத்

Sharad Reddy: Yes சார்…

Jaffar Sait: உங்க போன் ரீச்சபிளா இல்ல

Sharad Reddy: சார் அதை நான் கார்ல வெச்சிட்டு வந்துட்டேன். தலைவர் வீட்டுக்கு வந்திருக்கேன்.

Jaffar Sait: ஓகே! ஓகே!

Sharad Reddy: சார் அந்த சினியுக் ஆளுங்க டெல்லியிலிருந்தும், மும்பைல இருந்தும் கூப்டாங்க. அடுத்த வாரம் அவங்க கிட்ட இருந்து பாசிட்டிவான தகவல் வரலாம்னு சொல்றாங்க. அவங்க கேள்விகளோட வரப்போறதில்ல. உங்களோட டைரக்டர்ஸ் யாரையாவது கஸ்டடியில எடுக்கலாம். தயாரா இருங்க. இது உறுதியான தகவலானு கேட்டேன். அவர் ‘பாஸ், எங்க தகவல்கள் எல்லாமே உறுதியானதுதான், 100 சதவீதம்.’ உங்க தலைவருக்கு இதை இப்பவே சொல்லிடுங்க”. உடனே நான் இப்பவே சொல்றது சாத்தியமில்ல, இப்போ இது மதியம். அதுக்கு அவங்க, நாங்க தகவல் குடுக்கறோம், என்ன செய்றதுனு முடிவு செய்வது உங்களோட முடிவு. இதுக்கு மேல நாங்க எதுவும் செய்ய முடியாது.

சோ … ப்ளீஸ் …

(சிபிஐ விசாரணை வரவுள்ளதாக யாரோ தகவல் கொடுத்துள்ளதாக தெரிகிறது)

Jaffar Sait: போனதடவையும் அவங்க இதைத்தான சொன்னாங்க?

Sharad Reddy: போனதடவ … (குரல் தெளிவற்று ஒலிக்கிறது)

Jaffar Sait: அவங்க நம்ம டிவி ஆபீசுக்கு வருவோம்னு சொன்னாங்க. நினைவிருக்கா?

Sharad Reddy: அவங்க சொன்னதா இவன் சொன்னான். இப்பவும் அவன் எல்லாமே தயாரா இருக்கு, அவங்க கைது செய்யச் சொல்லி அழுத்தம் குடுக்கறாங்க, விசாரணையோ அல்லது கேள்வி கேட்கவோ சொல்லல, ஆனா கைது செய்யச் சொல்றாங்க. அதனால நாமதான் முடிவு செய்யணும். உங்க சைட்ல எதாச்சும் முயற்சி செஞ்சு அடுத்த நடவடிக்க என்ன எடுக்கலாம்னு சொல்லுங்க. நான் அமிர்தம் சாரை கூப்டேன் (கலைஞர் தொலைக்காட்சியின் மற்றொரு இயக்குனர்) அவர் எதோ பங்சனுக்கு போய்ட்டார். ராமநாராயணனோட பேத்திக்கு ஏதோ விசேசம்னு நினைக்குறேன். அவர் முதல்ல இத அப்டியே விட்ர சொன்னார். அப்றம் இல்ல, இதை சண்முகநாதன் சார் கிட்ட சொல்லிடலாம் னு சொன்னார். அப்ப நான் அவருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினேன்,நேர்ல வரோம்னு. இங்க வந்து, சொல்ல வேண்டாம்னு முடிவு செய்துட்டோம். நான் வீட்டுக்கு திரும்பின பிறகு எனக்கு கால் வந்துச்சு, நான் திரும்ப வந்துட்டேன்.

Jaffar Sait: இல்ல, சண்முகநாதன் கிட்ட, இப்போதைக்கு அந்த தகவலை (தலைவர் கிட்ட) சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டேன். நாம உறுதிப்படுத்துவோம்.

Sharad Reddy: Correct sir… நாம 100 சதவீதம் இதை உறுதி சென்ய்துட்டு அப்றம் சொல்லலாம். அவங்க சொன்னது கொஞ்சம் அதிர்ச்சியாத்தான் இருக்கு, இப்போதான் நான் சிதம்பரம் சாரும் மத்த காங்கிரஸ் காரங்களும் வந்ததை யோசிச்சு பார்த்தேன். அதனால நான் இங்க உக்காந்து, வெயிட் பண்ணிட்டு இருக்கேன். டி.ஆர்.பாலு சார் சொன்னார், நான் அதை பார்த்துக்கிறேன்னு. அதனால நாங்க இங்க காத்திருக்கோம்

Jaffar Sait: தலைவர் கிட்ட எப்ப சொல்லுவீங்க? .. சொல்லும்போது, எனக்கும் சொல்லிட்டதா சொல்லுங்க.

Sharad Reddy: Thanks sir..thanks sir…

Jaffar Sait: நான் இதை செக் பன்றேன். அவங்க 50-50 தான் னு சொல்றாங்க. யாரும் உறுதிப்படுத்தல, அவங்க 2-3 லாஜிக் சொல்றாங்க. இந்த கேஸ், சீனியர்களால தான் கையாளப்படும்னு சொல்றாங்க.

Sharad Reddy: சரிதான்.

Jaffar Sait: ஆனா, அவங்க அதை செய்யல, இது எதாவது அழுத்தம் தருவதற்கான வேலையா இருக்கலாம். அவங்க கிட்ட பணப் பரிமாற்றம் குறித்தும், அவர் (அவள்) இயக்குனர் இல்லை என்றும் சொல்லிட்டென். அவங்க வெறும் பங்குதாரர்தான், மற்ற இயக்குனர்களும் இங்க இல்ல,

Sharad Reddy: ஆனா, பணப் பரிமாற்றம் நடந்தப்ப அவங்க அங்க இருந்தாங்க சார்… அதுதான் …

Jaffar Sait: என்ன?!!! என்ன?!!!

Sharad Reddy: பணம் கை மாறியபோது, அவங்க இயக்குனரா இருந்தாங்க …

Jffar Sait: Really!!!

Sharad Reddy: Yes sir

Jaffar Sait: Ooohhh…அன்னைக்கு இல்லைனு சொன்ன?

Sharad Reddy: டிசம்பர்ல அவங்க ராஜினாமா செய்தாங்க… எல்லாமே முன் தேதியிட்டு செய்துக்கிட்டு இருப்பதால், நான் அதை தேடிக்கிட்டு இருக்கேன்.

Jaffar Sait: இல்ல, டிசம்பர்ல ராஜினாமா செய்துட்டாங்க. அந்த விசயங்கள் எப்ப வந்துச்சு?

Sharad Reddy: பணம் 2008 ல வந்துச்சுல்ல சார்

Jaffar Sait: Ohh..இந்த டிசம்பர்லதான் அவங்க ராஜினாமா செய்தாங்களா? எந்த டிசம்பர்ல?

Sharad Reddy: ஆமா Sir! இந்த டிசம்பர் அல்லது கடைசியா இருக்கலாம். ஆனா அவங்களும் டைரக்டரா இருந்தாங்க. சார் நான் சில 100 பக்கமுள்ள முன் தேதியிட்ட ஆவணங்கள்ல கையெழுத்துப் போட்டேன். அதோட நகல் எடுத்து வெச்சி, இப்போ படிச்சிட்டு இருக்கேன்.

Jaffar Sait: Hmmm

Sharad Reddy: பிரச்சனை என்னனா? நாம நாம செய்தி படிச்சு, கேட்டு, தெரிஞ்சு அதுக்கு தகுந்த ஆவணங்களை தயாரிக்கிறோம். அதனால, பல மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கு.

Jaffar Sait: Hmmm…

Sharad Reddy: கனி மேடம் 2007 லயும், 2007க்கு அப்றமும் இல்ல, ஆனா பெரியம்மா இருந்தாங்க (தயாளு அம்மாள்)

Jaffar Sait: பெரியம்மா இருந்தது எனக்கு தெரியும், அதனாலதான் அவங்களுக்கு ஆங்கிலமும் தெரியாது தமிழும் தெரியாதுனு சொல்லியிருக்காங்க.

Sharad Reddy: Correct!! Correct!!

Jaffar Sait: அவங்கள இதுல கோர்த்துவிட முடியாது. ஆனா, நாம சொல்ற பண பரிமாற்றங்கள் – செக்மூலமா நடந்திருக்கும்.

Sharad Reddy: பேசுறது பிரச்சனை இல்ல. இதெல்லாம் எந்தக் கோணத்துல நடக்குதுங்கறதுதான் தெரியல.

Jaffar Sait: அதைத்தான் நான் என் ஆளுங்களுக்கு சொல்றேன். என்னோட ஆளுங்க சொல்றாங்க … எல்லாமே குருட்டு தைரியம். அவங்க அதை செய்யமாட்டாங்க, முதல்ல அவங்க கேள்விகள் கேட்பாங்க, அவங்களுக்கு திருப்தி இல்லாட்டி, வேற எதாவது சந்தேகம் இருந்தா ஒருவேளை அவங்க தேடுவது கிடைத்தால் விசாரணையை பலவீனப்படுத்த நாம முயற்சி செய்வதாக – ஆவணங்களை அழிப்பதாக தெரிந்தால் அவர்கள் அடுத்த நடவடிக்கைக்கு போலாம்…

Sharad Reddy: அவங்க இதை கொஞ்சம் முரட்டுத் தனமா எடுத்துக்குவாங்கலா?…

Jaffar Sait: Yeah…

Sharad Reddy: நான் இதெல்லாம் சொல்லிட்டேன். நீங்க சண்முகநாதன் சார் கிட்ட பேசும்போது, இதையே சொல்லுங்க. அவர்கிட்ட இதையெல்லாம் தமிழ்ல சொல்லுங்க அதான் சரியா இருக்கும்

Jaffar Sait: இல்ல இல்ல … நான் சொல்றேன். நீ பாஸ் அ சந்திக்கும்போது சொல்லிடு, நான் சாயந்தரம் சொல்றேன்.

Sharad Reddy: ஓகே சார், …Thank You sir…

(உரையாடல் முடிகிறது)

(இரண்டாவது உரையாடலை இங்கிருந்து தரவிறக்கம் செய்யலாம்: https://app.box.com/s/e6n1b3jkffonepe2v7yx)

(தமிழாக்கம் குறையுடையதாக இருக்கலாம் – முழுமையான பதிவுக்கு இங்கே செல்லவும்: http://ibnlive.in.com/news/aap-targets-dmk-over-2g-scam-releases-phone-conversation-transcripts/449929-37-64.html)

Related Posts