அரசியல்

திமுகவை கலங்கடித்த 2ஜி ஊழல் உரையாடல் 4: கனிமொழி – ஜாபர் சேட்

உரையாடல் 4: தேதி 16-02-2011 (In English and Tamil)

தமிழக உளவுத்துறை அதிகாரி ஜாபர் சேட், திமுக ராஜ்யசபை உறுப்பினர் கனிமொழி இடையே நடந்த உரையாடல். (இந்த தேதியில் கனிமொழி 112 மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்துபோராடி கைதாகியிருந்தார்)

-Kanimozhi: சொல்லுங்க

-Jaffar Sait: நான் சொன்னா என்னை நீங்க உதைப்பீங்க (சிரிக்கிறார்)

-Kanimozhi: என்ன அது?

-Jaffar Sait: நான் சொன்னா, என்ன நீங்க உதைப்பீங்க, இருந்தாலும் சொல்றேன்.

-Kanimozhi: ம்ம் yes…

-Jaffar Sait: இரண்டாவது கஸ்டடியில் இருக்கற ஆள்கிட்ட நான் பேசினேன். ( அவர் சொல்வது அ.ராசா அல்லது டிபி ரியாலிட்டியின் பிரொமோட்டர் சாஹித் பல்வாவாக இருக்கலாம்)

-Kanimozhi: (ஹா ஹா) நானாச்சும், உங்க கஸ்டடில இருக்கேன்

– Jaffar Sait: ஆமாங்க மேடம் … (சிரிக்கிறார்)…மேம் , நான் ஒரு ஸ்டேட்மன்ட் அ படிக்கிறேன். சரியா இருக்கானு பாருங்க. நான் பாஸ்கிட்ட் இதை காட்டினேன் (பாஸ் என்பது கருணாநிதியாக இருக்கலாம்) அவர் சொல்லிட்டார். உங்களுக்கும் படித்துக் காட்டுவதற்காக அழைத்தேன்.

-Jaffar Sait: படிக்கிறார்

-Kanimozhi: நாம முன்கூட்டியே எதிர்பார்த்து இருப்பதா இருக்கும்.

– Jaffar Sait: Yeah…ஆமாங்க மேடம்

-Kanimozhi : நல்லது. மீசைல மண்ணு ஒட்டல என்பது போல இருக்கு.

-Jaffer Sait: பொதுமக்கள் அப்படி நினைப்பார்கள். … அந்த பக்கர்ஸ் தயாரா இருக்காங்க, அவங்களுக்கு கொடுக்க வேண்டியதும் தயாரா இருக்கு. (சிபிஐ யை குறிப்பிடுகிறார்)

-Kanimozhi: நாம அவங்கள, பொதுமக்கள தயார்படுத்தணும்ல.

-Jaffar : ஆமா, ஆமா !! ஒரு 10 சதவீதம்பேர் இதெல்லாம் ஒரு செட்டப்னு சொல்வாங்க

– Kanimozhi: ஆமா… ஆமா…

-Jaffar Sait: என்ன நடந்தாலு, அவங்க அதைத்தான் சொல்ல போறாங்க

-Kanimozhi: ஆமா, அது உண்மைதான் .

-Jaffar Sait: ஒரு 70 சதவீதம் பேர் கலைஞர் தொலைக்காட்சி ஆச்சர்யப்படுத்தும். நாம ஏற்கனவே ஒரு திறந்த புத்தகம் னு சொல்லிட்டோம். அவங்க படிக்கட்டும்.

-Kanimozhi: சிரிக்கிறார்

-Jaffar sait: இப்போ நாம் சொல்லலாம், ‘நீங்க படிங்க, நாங்க ஒரு லைப்ரரி …’னு…

-Kanimozhi: ஹா ஹா

-Jaffar sait: நான் சொன்னதை பாஸ் சரினு சொல்லிட்டார். உங்க கிட்டயும் கேட்டுக்கலாம்னு நினைச்சேன். சரிதான மேடம்?

-Kanimozhi:ஆமா, அவர் சொன்னது சரி

-Jaffar Sait: சரிங்க மேடம்

-Kanimozhi : அவர் எப்பவும் இப்படித்தான் funny… இப்பவந்தாலும், எப்ப வந்தாலும் யாருக்கும் (முன்கூட்டியே) தெரியாது.

-Jaffar Sait: அவங்க வருவாங்க மேடம்

-Kanimozhi: சரிதான்

-Jaffar Sait: This is better

-Kanimozhi: அவங்க எல்லாரும் நம்ம ஆளுங்கதான்

-Jaffar Sait:நாளைக்கு இது பப்ளிஸ் ஆகிடும், ‘நாங்க விசாரணைக்கு தயார்’ சரத் குமார் அறிவிப்பு

-Kanimozhi: எந்த சரத்குமார் னு தெளிவா போடுங்க

-Jaffar Sait: நான் நாடார் பேரவைனா போட்டிருக்கேன்? … இந்த சரத்குமார் ஊனமுற்றவர்.

-Kanimozhi:Yes yes!!! ஊனமுற்றவர்னு சொல்லக்கூடாது, மாற்றுத் திறனாளினு சொல்லுங்க.

-Jaffar Sait: ஆமா, சாரி மேடம். என் சொந்த ஊர்லயும், எங்க டிபர்ட்மென்ட்லயும் ரெண்டு குற்றவாளிகளுக்கு ஒரே பேர் இருந்தா நாங்க பட்டப்பேர் வைப்போம்.

-Kanimozhi: hmmm

-Jaffar Sait: உதாரணத்துக்கு மலைக்கள்ளன் சுரேஷ், புல்லட் ரவி அதுபோல இவர் ஒத்தக்கால் சரத்

-Kanimozhi: ஹா ஹா … அவர் விசாரணைக்கு எடுக்கப்படும்போது நீங்க அவரை காப்பாத்துவீங்க னு நினைக்கிறேன். அது நடக்கத்தான் போகுது.

-Jaffar Sait: நீங்கதான் பாதுகாவலர். நான் சின்ன உதவியாளர்.

-Kanimozhi: சின்னப் பையன், பாவம்

-Jaffar Sait: என்னையா சொல்றீங்க மேடம்?

-Kanimozhi: நீங்க ரெண்டுபேரும்தான்

-Jaffar Sait: Ok maam…ஹாஹா

-Kanimozhi: அவங்க எங்கள பி.எஸ்.பி ஸ்கூல்ல விட்டாங்க

-Jaffar Sait: நீங்க அங்க இருக்க விரும்பரீங்களா, இல்ல வேற எதாவது ஏற்பாடு செய்யட்டுமா மேடம்?

-Kanimozhi: No no…பிரச்சனயில்ல.

-Jaffar Sait: லஞ்ச்மேடம்?

-Kanimozhi: அவங்க தருவாங்கல்ல?
-Jaffar Sait: ஆமா, ஆனா உங்களுக்கு மேடம்?

-Kanimozhi: அதையே சாப்டுக்கறேன். இல்லாட்டி அது நல்லா இருக்காது.

-Jaffar Sait: Ok maam

-Kanimozhi: இந்த மண்டபத்துக்கு ஸ்பெசல் சாப்பாடு சொல்லட்டுமா? (கனிமொழி போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளார்.)…ஓஹ் நீங்கதான ஏற்பாடு பண்ணுவீங்க? அவங்க பண்ண மாட்டாங்க?

-Jaffar Sait: திமுகவ சொல்றீங்களா? இல்ல, இல்ல மக்கள் எங்க கஸ்டடில இருக்கும்போது, உணவு கொடுக்கும் கடமை அரசுடையது.

-Kanimozhi: ஓஹ்

-Jaffar Sait: உங்க தகவலுக்காக. அரசாங்கம் ஒரு நாளைக்கு, ஒரு நபருக்கு உணவுச் செலவுக்காக 10 ரூபாய்தான் கொடுக்குது.

-Kanimozhi: உங்களால அந்த பணத்துல சாப்பாடு வாங்க முடியுமா?

-Jaffar Sait: எங்களால முடியாது. நாங்க போராடுறோம். அதனாலதான் இந்த ஆளுங்க ஹோட்டல் போய்டராங்க.

-Kanimozhi: ஓஹ்

-Jaffar Sait: பெரிய கைது நடவடிக்கைகளின்போது, சரவண பவன்ல போய் கேப்பாங்க. அவங்க நீங்க சாப்பாடு போடுறீங்களா? இல்ல நாங்க போடணுமா னு கேப்பாங்க.

-Kanimozhi: 10 ரூபாய், அநியாயம்

-Jaffar Sait: ஆமாங்க, மேடம்

-Kanimozhi: காவல்துறையே சொந்தமா சமயல் பண்றதுதான் வழி.

-Jaffar Sait: நான் அதைத்தான் சொல்றேன். ஒரு மையப்படுத்தப்பட்ட சமயலறை. ஆனா டிஜிபி ஒத்துகல.டூட்டி உள்ளவங்களுக்கும், தனி நபர்களுக்கும் அந்த சமயலரை பயன்படுத்தலாம்.

-Kanimozhi: ஆஹ்…அது நல்ல ஐடியா.

-Jaffar Sait: ஆமா, மேடம் .. நான் டிஜிபி ஆனா இதை செய்வேன். டிஜிபி அப்பாய்ன்ட் மென்ட் போடும்போது என்னையும் நியமிக்க மறந்துடாதீங்க மேடம்.

-Kanmozhi: என் எதிர்காலத்தை கனிக்கப் போவதா நீங்கதான் சொன்னீங்க.

-Jaffar Sait: அதைத்தான் நான் சொல்றேன் மேடம்

-Kanimozhi: என்ன???

-Jaffar Sait: மன்னர் வழி ஆட்சிதான் …

-Kanimozhi: எனக்கு அதெல்லாம் வேண்டாம். நான் வீட்டுக்கு வந்து, அதுல பேசுறேன் ..

(உரையாடல் முடிந்தது)

(இது ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டிருப்பதால், தொலைபேசி உரையாடலின் நேரடி வார்த்தைகள் அப்படியே இருக்காது. உரையாடலை தரவிறக்கி கேட்பது இன்னும் கூடுதல் பலனளிக்கும்)

(உரையாடல் 4 தரவிரக்கம் செய்ய)

Related Posts