அரசியல்

திமுகவை கலங்கடித்த 2ஜி ஊழல் உரையாடல் 3: ஜாபர் சேட் – கனிமொழி

திமுக ராஜ்ய சபா உறுப்பினர் கனிமொழி மற்றும் தமிழ்நாடு உளவுத்துறை அதிகாரி ஜாபர் சேட் இடையிலான உரையாடல் …

-Jaffar Sait: முரொசொலி ஆபீஸ்ல …

-Kanimozhi: ஓஹ்

-Jaffar Sait: என்னய்யா என்ன பேசிக்குறாங்க மக்களெல்லாம்? … இல்லண்ணே எல்லாம் பேசிக்குறாங்க, எவ்ளோ தங்கமான தலைவர், அவருக்கு போய் இப்புடி கெட்ட பேர் வாங்கி வெச்சிட்டாங்க. அவர் செய்த சாதனைகளுக்கெல்லாம் இதாகிப்போச்சு இப்ப. என்ன இவன் முட்டாள் தனமா பன்னிருக்கா.

Kanimozhi: hmmm

Jaffar Sait: நான் சொன்னன்யா அப்பவே, ஏலத்துல விட்டுட்டு போ, ஏலத்துல விட்டுட்டு போ அப்டினு (கனிமொழி சிரிக்கிறார்)

Kanimozhi: எல்லாம் எப்டி வேலை செய்யுது பாருங்க …ஹப்பா

Jaffar Sait: ஆமா மேடம் … I was very very….i was taken a back

Kanimozhi: நேற்று,, he quite a thing of celebration will be there no…that tone was but..

Jaffar Sait: அவர் திருச்சில இருந்தப்ப

Kanimozhi: Yes yes…no no…அவங்க எதுவும் சொல்ல மாட்டாங்க…

Jaffar Sait: You will know the mood no maam?

Kanimozhi: Yes yes…This is atrocious ya…how they work no…!!! We should scold the grandman for everything…

Jaffar Sait: நாம அவங்க கிட்ட கத்துக்கிட்டு, அவங்களுக்கே கத்துக் கொடுப்போம்.

Kanimozhi: yesss…

Jaffar Sait: And yesterday’s thing again it cropped up…

Kanimozhi: What?

Jaffar Sait: TV issue (Referring to Kalaignar TV issue)

Kanimozhi: Hmmm

Jaffar Sait: திரும்பவும் அவர் சொல்றார், நீங்க எதுவும் எங்க கிட்ட சொல்லல. எல்லாம் மறைச்சிட்டீங்க (Referring to Karunanidhi)

Kanimozhi: அய்யோ… அய்யோ … ஹ்ம்ம்

Jaffar Sait: அதே சமயம் ‘தீக்கதிர்’ ல மோசமான கட்டுரை வந்திருக்கு…

Kanimozhi: நேத்து தான … ஆமா…

Jaffar sait: அந்த கட்டுரைல டாட்டா வோல்டாஸ் லாம் குறிப்பிட்டிருக்காங்க. இதையெல்லாம் என் கிட்ட சொல்லல னு அவர் கேட்கிறார்.

Kanimozhi: Ohhhhh

Jaffar sait: நாங்க ஏற்கனவே சொன்னோம், இதை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கோம்.

Kanimozhi: ஆனா, இதெல்லாம் அவங்ககிட்டத்தான இருக்கு? அது இன்னொருத்தருடையது

Jaffar Sait: என்ன மேடம்.

Kanimozhi: அதுவும், சட்டப்படி அவங்ககிட்ட இல்லைல.

Jaffar Sait: சட்டப்படி இல்ல ஆனா TRIL உட்பட எல்லா விசயம் பத்தியும் தீக்கதிர்ல எழுதியிருக்காங்க. ரொம்ப விவரமா, …TRIL and நீரா…எல்லாமே எழுதியிருக்காங்க

Kanimozhi: TRIL னா என்ன?…

Jaffar Sait: TATA RETAIL AND INFRASTRUCTURES LIMITED

Kanimozhi: Ohhh ஓகே ஓகே

Jaffar Sait: Voltas அதோட துணை அமைப்பு

Kanimozhi: Yes yes…

Jaffar Sait: அந்த நீரா ராடியா வாய கொஞ்சம் அடக்கி வைக்கணும்

Kanimozhi: ஆஹ் … ஹ்ம்ம் . (சிரிக்கிறார்) ஒருத்தர் இன்னைக்கு கேட்டார். அவரோட இடத்துல யார் இருந்தாலும் – இதைத்தான் செய்திருப்பாங்க.

Jaffar Sait: ஆமா…

Kanimozhi: இந்த ஆளுக்கு தெரிஞ்சிருக்கணும், அமலாக்கப் பிரிவு இதையெல்லாம் டேப் பண்ணுவாங்க.

Jaffar Sait: Hmmm

Kanimozhi: அதெப்டி அவங்களுக்கு தெரியாம இருக்கும்?

Jaffar Sait: Exactly maam…

Kanimozhi: Hmmm…நம்மையாவது எச்சரிக்கை பண்ணியிருக்கணும்

Jaffar Sait: நீங்க அவ கிட்ட பேசிக்கிட்டு இருப்பது எனக்கு தெரிஞ்சிருந்தா, நான் எச்சரிக்கை செய்திருப்பேன்.

Kanimozhi: Oh really… aware of what…

Jaffar Sait: yesss…நான் ஒரு தடவ சொன்னன்ல நினைவிருக்கா?… அந்த கம்யூனிகேசன் மேடம் பேசுறது ரொம்ப அதிகமா இருக்கு..

Kanimozhi: Hmmm

Jaffar Sait: அது அவனோட அலுவலக நெட்வொர்க் … ரெக்கார்ட் பண்ணியிருக்காங்

Kanimozhi: Innocent fellow…

Jaffar Sait: He was totally innocent…absolutely.

Kanimozhi: அதைத்தான் நான் இன்னைக்கு சொன்னேன், ஒன்னும் தெரியாம இருக்கவும், இங்க விலை இருக்கு.

Jaffar Sait: முன்னாள் பிரதமரைப் போன்ற நண்பர்கள் இருக்கும்போது … ஹா ஹா

Jaffar Sait: ஒரு ஸ்டேட்மன்ட்ல அவர் அப்படியே யு டர்ன் அடிக்கிறார். (ராஜாவின் அறிக்கை குறித்து சொல்கிறார். பிரதமருக்கும் சிதம்பரத்துக்கும் தெரியும், நான் செய்தது எல்லாமே அவர்களுக்கு தெரிந்துதான்)

Kanimozhi: ம்ம்… அவர் அரசியல்வாதி, இது ரொம்ப கிளவரான விசயம்

Jaffar Sait: தலைவரும் அரசியல்வாதிதான. அவரோட கடும் உழைப்பும், எல்லாம் சொல்றேன் .. பெரிய ஜோக் …

Kanimozhi: நான், சென்னையின் குடிசைப் பகுதிகளுக்கு போக விரும்பறேன்.

Jaffar Sait: எங்க மேடம்

Kanimozhi: இல்ல, நான் சென்னைல இருக்கும் குப்பம் பகுதிகளுக்கு போய் கேக்க போறேன். கிராமங்களுக்கு கூட இல்ல. யாராச்சுக்கும் இது தெரியுமா? னு கேக்கணும் (2ஜி குறித்து)

Jaffar Sait: எல்லாரும் இது யூரியாவோ, இல்ல பூச்சிக்கொல்லியோ?ணு நினைச்சுப்பாங்க

Kanimozhi: ஆமா, நம்ம இப்ப ஏற்பட்டிருக்கும் சேதத்தை சரிபண்ண எதாச்சும் செய்தாகணும். தலைவரும் இதை புரிஞ்சிருப்பார். அவர் அவரை வெறுப்பது அவருக்கு தெரியும்.

Jaffar Sait: அவர் மொத்தமாக மறுப்பதுதான் பிரச்சனைனு தலைவர் சொல்றார்.

Kanimozhi: என்ன?

Jaffar Sait: அவர் மொத்தமா மறுக்கிறார்

Kanimozhi: தெரிஞ்சேதான?

Jaffar Sait: ம்ம்

Kanimozhi: ம்ம் .. முழுசா தெரிஞ்சுக்கிட்டே, என்கிட்டையும் சொல்லாம..

Jaffar Sait: இல்ல மேம், நாம தலைவர்கிட்ட சொன்னோம்…

Kanimozhi: ம்ம்

Jaffar Sait: அந்த மின் திட்டத்துக்கு … அது பெரிய சோர்ஸ் மூலமா வந்திருக்குனு சொன்னோமே …

Kanimozhi: Ahhh…

Jaffar Sait: நாம பாதி பாதியா பிரிச்சோம், நினைவிருக்கா?

Kanimozhi: Ahhh..ம்ம்

Jaffar Sait: இன்னிக்கு, அவர் தீக்கதிர் குறித்து கேட்கும்போது. அவர் அப்படியே தீக்கதிர் கட்டுரையில் எதுவுமே தெரியாது. இந்த கான்ட்ராக்ட், பணமெல்லாம் எங்க வந்துச்சு?னு கேட்கிறார்.

Kanimozhi: ம்ம்

Jaffar Sait: அதனால நான் அவர் கிட்ட சொன்னேன். இதெல்லாமே உங்க கிட்ட முன்னாடியே சொல்லிட்டோம். சொல்லாம விடல. இப்போ அவை எல்லாமே வித்தாச்சு.

Kanimozhi: ம்ம்

Jaffar Sait: இல்ல, எனக்கு எதுவுமே தெரியாதுங்கறார்

Kanimozhi: ஐயோ …

Jaffar Sait: எனக்கு என்ன சொல்றதுணு தெரியல … (ஹா ஹா)

Kanimozhi: அவர் டிவில எப்படி பேசினாரோ, அதே போலத்தான பேசுறார்? (கலைஞர் டிவி விசயம்)

Jaffar Sait: ஆமா, டிவி விசயத்தை யாரும் என்கிட்ட சொல்லல. இப்போ அவர் டிவியை உடனே மூடச் சொல்றார்.

Kanimozhi: எது? டிவியா?

Jaffar Sait: ஆமா

Kanimozhi: அது நல்ல ஐடியா நாம அதை செய்யப் போறோம்.

Jaffar Sait; நாம எதுவும் செய்ய வேண்டியதில்லை. அதுவே போயிடும்.

Kanimozhi: நாம இப்ப அதை செய்தா, அது திவாலாகாம இருக்கும்.

Jaffar Sait: நான் இன்னிக்கு சாயந்தரம், டெல்லி வரேன் மேடம்…

Kanimozhi: அப்ப, நான் உங்கள நாளைக்கு பார்குறேன்.

Jaffar Sait: Yes maam…thank you.

Kanimozhi: உங்களால முடிஞ்சா… பாருங்க … உங்களாலவே ஒரு லிமிட்டுக்கு மேல சொல்ல முடியல.

Jaffar Sait: நான் என்ன செய்வது மேடம்? … அவர்கிட்ட பி.ஆர் வொர்க் பத்தி சொல்லிட்டேன். சிஏஜி நமக்கு சாதகமா இருக்கு. நாம் அதைத்தான் அதிகமா பேசணும். அவர் என்னை அதை செய்ய சொல்றார். இப்பொதான் நமக்கு ஆள் கிடைச்சிருக்காங்க. டெல்லில நமக்கு ஒருத்தர் கிடைப்பது ரொம்ப கஷ்டம். நமக்கு அங்க எந்த அமைப்பும் இல்ல. நாம கொஞ்சம் கொஞ்சமா வேலை செய்யலாம். அவர் அதுக்கு சரினு சொல்லிட்டார்.

Kanimozhi: ம்ம்… எனக்கு என்ன செய்றதுணு தெரியல. செல்வகணபதில இருந்து, காங்கிரஸ் ஆளுங்க வரைக்கும் … எப்படி சொல்லலாம் உனக்கு ஜேபிசி பத்தியெல்லாம் எத கவலையும் இல்லைணு?

Jaffar Sait: நீங்க தலைவர்கிட்ட சொல்லியிருக்கலாம். அது தப்புதான் மேடம்.

Kanimozhi: என்ன செய்றது… சும்மா பேசுனாலே பிரச்சனையாகுது.

Jaffar Sait: புரளிகூட பிரச்சனையாகுது.

Kanimozhi: அவர்கிட்ட போய் இத எப்புடி சொல்றது?

Jaffar Sait: யாராச்சும் சொல்லணும், இல்லைனா அவங்களுக்கு தெரிஞ்சிடும்

Kanimozhi: என்ன நடக்கும்னா? அவங்க ஜேபிசி அறிக்கையை ஏத்துக்க மாட்டாங்க. சுஷ்மா ஸ்வராஜ் ரொம்ப அறிவாளி. பிரதமருக்கு சாதகமா இருப்பாங்க. உங்களுக்கு ஜேபிசி வேணும்னா, பிரதமருக்கு மனுப்போடலாம்னு சொன்னாங்க.

Jaffar Sait: hmmm

Kanimozhi: இப்போ காங்கிரசோட கை உயர்ந்திருக்கு, அதனால அவங்களுக்கு கண்டிப்பா இது தேவையில்ல. அவங்களும், எப்டி இதை சொல்லலாம்ணு கேட்குறாங்க.

Jaffar Sait: Hmmm

Kanimozhi: அவங்களுக்கு அது எப்பவுமே தேவையில்லைல? … இப்போ அவர் பெயரும் இழுக்கப்பட்டிருக்கு. ஜேபிசில பிஎம் அ இழித்தா அது நடக்குமா? காங்கிரஸ் நாராயணசாமி சொல்றார், தேர்தல் நெருங்கிட்டு இருக்கு, அவங்க பத்திரிக்கைக்கு செய்தி குடுக்க ஆரம்பிப்பாங்க. என்ன செய்ய?

Jaffar Sait : Yess yesss!!! அதை நேத்து தலைவர்கிட்ட சொன்னேன். நீங்க அதை இன்னும் தெளிவா அவர் கிட்ட சொல்லலாம். டெல்லியில என்ன நடந்தாலும், அது முதலமைச்சருக்கு சொல்லப்படனும். நேரா சொல்ல முடியாட்டி யார் மூலமாவது சொல்லணும். அவர் கிட்ட பேசும் யாராவது வழியா… நாராயணசாமியாவது சொல்லணும்.

Kanimozhi: aahmmm

Jaffar Sait: அதை நான் செய்றேன்.

Kanimozhi: செல்வகணபதியால முடியும்ணு நெனைக்குறேன். அவர் ஓபனா பேசுவார். சேலம் போனபோது, என்னை எதோ தப்பான வழில கூட்டிப் போய்ட்டு … நான் எதுவுமே சொல்லல. அவர் என் அப்பாகிட்ட பேசும்போது, இதை சொல்லியிருப்பார். சொல்லித்தான் செய்திருப்பார்ணு நெனைக்குறேன்.

Jaffar Sait: Ohhhh

(Not Audiable)

Kanimozhi: நாம் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும், நாளைக்கு உன்கிட்ட பேசுறேன்.

Jaffar Sait : Ok mam thank you

Kanimozhi: We will talk in Delhi…

உரையாடல் முடிகிறது

(உரையாடல் 3 ஐ தரவிரக்க செய்ய)

Related Posts