சமூகம் சினிமா தமிழ் சினிமா

தரமணி ஒரு பெண்ணின் பார்வையில்…

அது என்ன பெண்ணின் பார்வையில்னு யோசிக்கலாம்.

ஆனா இயக்குநர் ஒரு பெண்ணை எப்படி இந்த படத்து மூலமா பேசவைக்கிறார்னு நான் சொல்ல ஆசைப்படறேன்.

தரமணிய சாதாரணமான படமாவும் பாக்கலாம் சமூகப்படமாவும் பாக்கலாம்.

பொதுவாவே திரைப்படங்கள் கட்டமைக்கும் சமூகத்தை விட சமூக நிகழ்வுகளால கட்டமைக்கப்படுகிற திரைப்படங்கள் அதிகம். அதிலும் எதார்த்தம் மாறாம தன்னோட கருவியா தன் திரைப்படத்த மாத்தி ஒரு ஏகாதிபத்தியத்தையோ அரசாங்கத்தையோ கேள்வி கேட்கும் இயக்குனர்கள் இங்க குறைவு.. அதில முக்கிய இடம் இயக்குனர் ராமிற்கு தவிர்க்க இயலாத இடமுண்டு.. அவரது மத்த படங்களை போல இதுல வித்தியாசம் இருக்கும்.. ஆனா அன்றாட நாம் கடக்கிற மனுசங்கள நாம் கவனிக்காத மனுசங்கள கவனிக்க வைப்பாரு.. உணர்வுகள வெளிப்படையாக பேசும் படம்.. பெண்கள் பற்றிய எத்தனையோ செய்திகளை தினந்தோறும் பார்க்கறோம் ஏன் பெண்களுக்கு மட்டும் இத்தனை ஒழுக்க நெறிமுறைகள் இருக்குன்னு யாரும் யோசிச்சு கூட பாக்கமாட்டோம்..

அதேமாதிரிதான் நம்ம சுத்தி நடக்கற விசயங்கள்ல எது முக்கியம் எதுக்கு போராடனும் எதுக்கு விலகனும்கற எந்த அடிப்படையும் நாம தெரிஞ்சிக்க விரும்பறதில்ல அதனால கூட யாரும் இதப்பத்திலாம் பெரிசா பேசாம அப்போ அப்போ கடந்து போயிடறாங்க.

இந்த படத்துல காதல் மட்டுமல்ல. அதைத் தாண்டிய உணர்வுகளை தவறுகள் தொடங்கும் இடங்களை எல்லாம் பேசியிருக்கிறார் ராம். இரண்டு இரண்டு வரிகளில் வந்த தரமணி போஸ்டர்கள் ஆகட்டும் A – சர்டிவிகேட் குடுத்த சென்சார் போர்ட் ஆகட்டும் எல்லாமே தரமணிக்கு சாதகமானது.

நா.முத்துக்குமார் தமிழும் யுவன் இசையும் மழை போல் நம்மை ஆசீர்வதிக்கும்.

நான் படம் பாக்க போனப்போ தியேட்டரிலே மொத்தம் நாலு பெண்கள் தான் என்னையும் என் தோழிகளையும் சேர்த்தே.

இத வச்சே தெரிஞ்சிக்கலாம் தரமணி தர*மான படம்.

ஆம் பெருங்கழிவில் இருந்துதான் பரிசுத்தம் பிறக்கும்..

தரமணி பரிசுத்தம்…

நண்பா யாரோ ஒருவரின் படுக்கை அறையை எட்டிப்பார்க்க போகாதே நீ போகும் சமயம் உன் படுக்கை அறையும் வேவு பார்க்கப்படும். ஆம் தரமணி இரண்டு பெண்களிடையே மாட்டிக் கொண்ட ஆணின் கதையல்ல. பல ஆண்களிடம் மாட்டிக் கொண்ட பெண்ணின் கதை.

Related Posts