தன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)

இந்த மாதத்துக்கான புள்ளி இதயம் சம்பந்தப்பட்டது.
இதயத்திற்கு சக்தியூட்டக்கூடிய இந்தப் புள்ளியின் அமை விடத்தை சுலபமாக அறிந்து கொள்ள முடியும். இந்தப்புள்ளி சுண்டுவிரல் நகத்தை ஒட்டி நகத்தின் கீழ்ப்பகுதி விளிம்பில் மோதிர விரல் பக்கமாக அமைந்துள்ளது (படத்தில் காட்டியபடி).
இந்தப் புள்ளியை ஆள்காட்டி விரலால் கையை எடுக்காமல் மூன்று நிமிடங்கள் மிதமாக அழுத்திக்கொள்ள வேண்டும்.
இடது சுண்டுவிரலில் அமைந்த புள்ளியை வலது ஆள்காட்டி விரலாலும், வலது சுண்டுவிரலில் அமைந்த புள்ளியை இடது ஆள் காட்டி விரலாலும் தொடுசிகிச்சை செய்ய வேண்டும். தொடர்ந்து ஒரு நாளைக்கு இருமுறை இந்தப் புள்ளியைத் தூண்டிவிடுவதன் மூலம், மாரடைப்பு நோய் வருவதிலிருந்து தடுக்கலாம். உயர் ரத்த அழுத்தம் குறைந்து, இருதயப்படபடப்பு சரியாகும். இன்றைய வாழ்க்கை முறை பெரும்பாலும் – பரபரப்பு, அவசரம், படபடப்பு, மன அழுத்தம் அமைந்ததாக இருக்கிறது. பலருக்கு உயர் மன அழுத்தம் இருக்கும் இன்றைய சூழ்நிலையில், இந்த மாதம் கூறப்பட்டுள்ள புள்ளி, உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் சிறப்பான புள்ளி.

இந்த அக்குபஞ்சர் புள்ளியின் மற்ற உபயோகங்கள்:
குதிகால் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும். கீழ் இடுப்பு வலியில் குணம் தெரியும்.

தேவநாதன் (தேவா) Diploma in acupuncture
தொடர்புக்கு : 93806 96474