தனியுரிமையின் முக்கியத்துவம் – “டெக்ஸ்ட் செக்யூர்”

முன்பொரு காலத்தில் எண்ணெய், அணு ஆயுதங்கள் மற்றும் இன்ன பிறவைகள் மட்டுமே வளங்களாகக் கருதப்பட்டன. ஆனால், இன்றைய சூழலில் தரவு எனப்படும் Data தான் மிக முக்கியமான வளமாகக் கருதப்படுகிறது.

தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்படுத்திய மாற்றத்தில், இந்த நூற்றாண்டில் “தரவு” மக்களை கட்டுப்படுத்தும் சக்தியாக விளங்குகிறது. இப்பொழுது தரவை (Data) வைத்திருப்பவன்தான் மேலோங்கி நிற்கிறான். அதை அடைய பலரும் முயற்சிக்கிறார்கள். அப்படியொரு முயற்சிதான் NSA – PRISM.

“கட்டற்ற மென்பொருள்” எனப்படும் “Free Software” மக்களின் பக்கம் நிற்கும் மாபெரும் சக்தியாக விளங்குகிறது. தரவை தனியுரிமையாவதைத் தடுக்கும் விதத்தில் கட்டற்ற மென்பொருளின் விதிகள் அமைந்துள்ளது.

அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக “டெக்ஸ்ட் செக்யூர்” (Text Secure) எனப்படும் செயலி (application) அமைந்துள்ளது. ஆண்ட்ராய்டு செயலியான இதை இலவசமாக அலைபேசியில் நிறுவிக் கொள்ளலாம். தனியுரிமையைப் பற்றி யாரும் கவலைப்படாத இந்தக் காலத்தில், அதன் முக்கியத்துவத்தினை அறிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

“டெக்ஸ்ட் செக்யூர்” பாதுகாப்பான தகவல் பறிமாற்றத்திற்கான ஒரு செயலியாக விளங்குகிறது. இணையத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் போது, வேறொருவருடன் பாதுகாப்பாக தகவல்களை பரிமாறிக் கொள்ளலாம். இந்த தகவல் பரிமாற்றம் ஒரு மறைகுரியீடாக்கிய செய்தியாக செல்கிறது.

“டெக்ஸ்ட் செக்யூர்” இன் சிறப்பு இயல்புகள் :-

  • தனியுரிமை
  • நல்ல வடிவமைப்பு
  • செயல்பாடு
  • கட்டற்ற மென்பொருளின் தனித்துவம்
  • நாம் பகிரும் புகைப்படங்களும், ஆடியோக்களும் சேவையகத்தில் சேமிக்கப்படுவதில்லை. இதை நாம் மூலநிரல் வைத்தே தெரிந்து கொள்ளலாம்.

ஆண்ட்ராய்டில் முன்னிருப்பாக வரும் செயலியை உபயோகப்படுத்தாமல், அதற்கு மாற்றாக டெக்ஸ்ட் செக்யூரைப் பயன்படுத்தலாம்.

இந்த செயலி 2010ல் “Whisper Systems” மூலம் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. பின் 2011ல் ” டுவிட்டர்” தான் இதனை ஒரு கட்டற்ற மென்பொருலாக வெளியிட்டது. பின்புதான் அதன் பெயர் “Open Whisper Systems” என மாற்றப்பட்டது.

இந்த செயலி பல உருவாக்குநர்களால் பல்வேறு வகைகளில் வெளியிடப்பட்டது.

டெக்ஸ்ட் செக்யூரின் தனித்துவங்கள் :-

  • தகவல்களை மறைகுரியீடு செய்து அனுப்பும்.
  • Man in the Middle Attack” தவிர்கப்படுகிறது
  • நாம் பகிரும் தகவல் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு அழியும்படி செய்யலாம்.
  • நமது தகவலை திரைப்பிடிக்க முடியாது.
  • இதனால் வேரு யாராலும் அதனை படிக்க முடியாது.

இந்த செயலியை “Play Store” ல் “Text Secure” என்று தேடி நமது ஸ்மார்ட்ஃபோனில் நிறுவிக் கொள்ளலாம்.

இந்த செயலியின் நிறலை நாம் GitHub ல் பார்க்கலாம்.

About Balaji Ravichandran

I am a Developer and interested in Knowledge Commons, Peer Production and Commons Utilization. I like to read a lot of books and also write about the stuffs I read.