இதழ்கள் இளைஞர் முழக்கம்

தகவல் தொழில்நுட்ப துறையில் தொழிற்சங்கம் – பரணி

JOBS-ARE-AVAILABE-IN-THE-IT-INDUSTRY

சென்னையின் ஒஎம்ஆர் சாலை சில வருடங்கள் முன்பு வரை சதுப்பு நில காடுகளும் மற்றும் விவசாய நிலம் நிறைந்த பகுதி என அறியப்பட்ட பகுதி. இன்று வான் உயர கட்டிடங்களும், பறக்கும் சொகுசு வாகனங்களும், பன்னாட்டு உணவு விடுதிகளும், பன்னாட்டு திரை அரங்குகளும் நிறைந்த பகுதியாக மாறிவிட்டது. ரூ.2400 கோடிக்கு 21 கி.மீ பறக்கும் சாலை திட்டம், மெட்ரோ திட்டம். இப்படி இந்த பகுதி மாற ஒரே காரணம் பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள். இந்த நிறுவனகள் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி அரசுகளிடம் இருந்து பல சலுகைகள் பெறுகின்றனர். இவர்கள் லாப வேட்டையில் மிகவும் பாதிக்கப்படுவது அந்த நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள். பல ஆண்டு காலம் இந்த தொழிலாளர்கள் பல விதமான சுரண்டல், பணிப் பாதுகாப்பின்மை, பெண்களுக்கு எதிரான பாலியல் ஏற்றத்தாழ்வுகள், தொல்லைகள், பாதுகாப்பின்மை போன்ற பல பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கின்றனர். சில நாட்கள் முன்பு இரு முக்கிய தகவல்கள் இந்த தொழிலாளர்கள் உரிமைகளை மையபடுத்தி வந்தன. ஒன்று தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை செய்யும் அனைவரும் “தொழிலாளி” என்ற வரையறைக்குள்ளேயே வருவார் என்று தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்துள்ளது. இது பல ஆண்டுகள் தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை செய்பவர்களுடைய ஊதிய அளவை வைத்து அவர்கள் தொழிலாளி இல்லை என்று கூறிவந்த கருத்து உடைக்கப்பட்டுள்ளது. இன்னுமொரு முக்கிய செய்தி அன்மையில் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் வெளிவந்த அரசின் அதிகாரப்பூர்வத் தகவல். தகவல் தொழில்நுட்ப துறையில் உள்ள தொழிலாளர்கள் விரும்பினால் தொழிற்சங்கம் வைத்துக்கொள்ளலாம் மற்றும் தொழிலாளர் பிரச்சனை என்றால் தொழிற்தகறாரு சட்டத்தில் பதிவு செய்ய முடியும் என்று கூறி உள்ளது.

இந்த தகவல் தமிழகத்தில் பணிபுரியும் 5 லட்ச மென்பொருள் தொழிலாளர்களுக்கு ஒரு நம்பிக்கை தரும் தகவல். தகவல் வெளி வந்த சில மணி நேரத்தில் பல முதலாளித்துவ செய்தித்தாள்கள் இந்த செய்தி பல பின்விளைவுகளை ஏற்படுத்தும், பல பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தமிழகத்தை விட்டு வெளியேரும், பல பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்கள் தொழில் தொடங்க தயங்கும் என்று பல விஷம கருத்துகள் பரப்பபட்டன. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டமைப்பு NASSCOM ஒரு படி மேலே சென்று மென்பொருள் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை இருந்தும் அவர்கள் அதை தவிர்க்க ஒரே காரணம் நாங்கள் நடத்தும் விதமே ஆகும். அரசு வெறும் தொழிற்சங்கம் அமைக்க உரிமை உண்டு என்று ஒரு தகவல் வெளியிட்டதற்கு இப்படிப்பட்ட பல எதிர்மறை கருத்துகள் வந்தன.

NASSCOM மற்றும் முதலாளித்துவ ஊடகங்களின் இந்த நிலைப்பாடு பல விதத்தில் வியப்பு அளிக்கிறது. இன்று உலக அளவில் மிகவும் மகிழ்ச்சியாக வாழும் மக்கள் NORDIC பகுதி மக்கள். அங்கு 60 சதவீதம் மேல் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தில் உள்ளனர். நான் சொல்வது ஏதோ சோசலிச நாடுகள் இல்லை, வளர்ந்த முதலாளித்துவ நாடுகள். இந்த நிறுவனங்கள் அங்கு சென்றால் தொழிற்சங்கத்திற்கு எதிர் கருத்து கூறுவது இல்லை. அதுவே இந்திய தொழிலாளி என்று வந்து விட்டால் அவனுக்கு தொழிற்சங்க உரிமை இல்லை. இதற்கு சிறந்த உதாரணம் கடந்த ஆண்டு டிசிஎஸ் பிரச்சனையில் இந்தியாவில் டிசிஎஸ் தொழிலாளிக்கு சங்கம் இல்லை. ஆனால் பின்லாந்து டிசிஎஸ்யில் தொழிற்சங்கம் இருப்பதால் அங்கு உடன்பாட்டுக்கு செல்ல வேண்டி இருந்தது. ஆகையால் இது இந்திய பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவன முதலாளிகளின் திட்டமிட்ட தொடர் செயல்முறைதான். இது இந்தய அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு 21 தொழிற்சங்கம் அமைக்கும் உரிமைக்கு எதிரானது கூட.

ஒரு விதத்தில் அரசின் இந்த தகவல் நம்பிக்கையும், உரிமையும் தந்தாலும் இந்த அறிவிப்பிலும் மற்றும் சட்டத்திலும் பல பிரச்சனைகள் உள்ளன. அதை களையாமல் ஒரு மென்பொருள் தொழிலாளிக்கு இந்த அறிவிப்பால் ஒரு பயனும் இல்லை. இந்த தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் வந்த இன்னொரு முக்கிய செய்தி அரசுக்கும் இது போன்ற தகவல் தொழில்நுட்ப தொழிலாளர் பிரச்சனையில் பொது விசாரணை செய்யாது என்பது. இது ஒரு விதத்தில் பிரச்சனையில் இருந்து தமிழக அரசு தப்பிக்கும் செயல். நிலம், நீர், காற்று, வரி சலுகை என்று தமிழக அரசு தந்தாலே பன்னாட்டு நிறுவனங்கள் வேலைக்கு ஆள் எடுத்தனர் அப்படி இருக்கும்போது அரசு தனக்கு பொறுப்பு இல்லை என்று கைகழுவ முடியாது. இதற்கு ஒரு படி மேலே சென்று மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தகவல் தொழில்நுட்ப தொழிலாளர் பிரச்சனை மற்றும் தொழிற்சங்கம் என்பது மாநில விவகாரம் என்று தன் பொறுப்பைதட்டி கழித்துவிட்டார். இப்படி இரு அரசுகளும் தங்கள் பொறுப்பு இல்லை என்று சொல்வது மூலம் தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்கள், தொழிலாளர் சட்டம் மற்றும் தொழிலாளர்துறை சரதே தங்கள் உரிமையை பெற முடியும்.

ஆனால் இப்போது இருக்கும் தொழிலாளர் சட்டம் பல விதத்தில் மத்திய பாஜக மோடி அரசால் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. அதுவும் தகவல் தொழில்நுட்ப தொழிலாளிகளுக்கு விரோதமாக இந்த சட்டத்தில் நிறைய உள்ளன. தகவல் தொழில்நுட்பதுறையில் லாபம் குறையும் போது அந்த நிறுவனத்தில் இருந்து வெளியே தள்ளப்படும் தொழிலாளிகளில் 80 சதவீதம் பேர் இரு பிரிவின் கீழ் வருவார்கள். ஒன்று புதிதாக வேலைக்கு சேரும் 1-3 ஆண்டு அனுபவம் உள்ள தொழிலாளிகள் மற்றும் 10-11 வருடம் அனுபவம் உள்ள, சம்பளம் அதிகம் வாங்கும் தொழிலாளிகள். இதில் புதிய தொழிலாளிகளை Apprentice act ,1961 யில் agreement இல் சேர்க்கும்போது அவர்கள் பிரச்சனை என்றால் தொழிலாளர் நீதிமன்றத்தை அனுகுவதில் சிக்கல் உள்ளது. அது மட்டுமின்றி இந்த தொழிலாளர்கள் வேறு மாநிலத்தில் பயிற்சி அளிக்கப்படுவதால் அந்த மாநில சட்டத்தின் படி அந்த தொழிலாளி போராட முடியுமே தவிர தமிழக சட்டத்தின் கீழ் வர மாட்டார்கள். புதிய தொழிலாளி நிலமை இப்படி இருக்க 10-15 ஆண்டு வேலை செய்த தொழிலாளிகள் எந்த சட்ட பதுகாப்பும் இல்லை. இவர்கள் அனைவரும் மேலாளர் அல்லது சூப்பர்வைசர் என்கிற பணி செய்வதால் தொழிற்சங்கத்தில் சேர அல்லது தொழில் தகறாரு சட்டத்தில் போராடுவதில் சிக்கல் எழுகிறது.

இப்படிபட்ட பல சட்ட சிக்கல்களை தாண்டியே மென்பொருள் தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்கள் ஒன்று சேர வேண்டும். இன்று அதற்கான புரிதல் மற்றும் சூழல் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அடுத்த 3-4 ஆண்டுகளுக்குள் automation அதிகரிக்கும் போது தகவல் தொழில்நுட்ப துறையில் 40-60 சதவீதம் என்ற அளவுக்கு ஆட்குறைப்பு ஏற்படலாம். அன்று அவர்களுக்கு தொழிற்சங்கம் என்ற அமைப்பும் தேவைப்படும். அரசு தகவல் அறியும் சட்டம் மூலம் வந்த இந்த உரிமையை உறுதி செய்யவேண்டும். தமிழ்நாட்டில் உள்ள 90 சதவீதம் பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சிறப்புப் பொருளாதார மண்டலதிற்குள் வருகின்றன. இந்த பகுதியில் தொழிற்சங்க செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகள் உள்ளன. இதனால் சென்னையில் உள்ள பெரிய SEZகள் சிர்செரி சிப்காட் – 70000 பேர் தாம்பரம் MEPZ – 40,000 பேர் கிண்டி தொழிற்பேட்டை – 40,000 பேர் போரூர் DLF – 60000 பேர் மகேந்திர சிட்டி-50,000 பேர் ELCOT – 40,000 பேர் ஸ்ரீராம் சிட்டி – 20000 பேர் ஆகிய இடங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்கள் வேலை செய்யும் இடத்தில் தொழிற்சங்க செயல்பாடுகளில் ஈடுபடுவதில் சிக்கல் உள்ளது.

இது போன்ற பல சிக்கல்களை திருத்த மத்திய மற்றும் மாநில அரசு தலையிட வேண்டும். இந்தியாவின் உற்பத்தியில் 9 சதவீதம் மற்றும் தமிழ்நாட்டின் உற்பத்தியில் 15 சதவீதம் மேல் பங்கேற்றும் தகவல் தொழில்நுட்ப துறைக்கு ஒரு அமைச்சகம் மட்டும் போட்டால் போதாது. அந்த அமைச்சகம் பன்னாட்டு முதலாளிகள் மற்றும் NASSCOM போன்ற அமைப்புகள் பத்தி சிந்தித்து ஒரு பயனும் இல்லை, வளர்ச்சியை உருவாக்கிய தொழிலாளர்கள் பத்தி சிந்திக்க வேண்டும். இந்த சட்ட சிக்கல்களை திருத்த தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்களுக்கு என்று ஒரு தனி சட்டம் மத்திய அரசு ஏற்ற வேண்டும், ளுநுஷ் சிறப்பு சலுகையில் இருந்து தொழிற்சங்க செயல்பாடு தடைகள் தலர்த்தப்பட வேண்டும் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவன நிர்வாக குழுவில் தொழிலாளர் பங்கை உறுதிபடுத்த வேண்டும். இது போன்ற மாற்றங்கள் வந்தாலே இங்கு வேலை பார்ர்கும் 30 இலட்சம் தொழிலாளர்களுக்கு ஒரு விடிவு பிறக்கும்.

Related Posts