அரசியல் புதிய ஆசிரியன் மார்ச் 2015

டெல்லி தேர்தல் முடிவு உணர்த்தும் பாடங்கள்

டெல்லி சட்டமன்றத்திற்கு நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அபாரமான வெற்றியைப் பெற்று, பாஜகவுக்கு ஓர் அதிர்ச்சி வைத்தியம் செய்திருக்கிறது. “இந்த வெற்றி எனக்கு அச்சத்தை அளிக்கிறது. இது நமக்கு ஆணவத்தைத் தந்துவிடக் கூடாது” என்று அர்விந்த் கேஜ்ரி வால் கூறியுள்ளது அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் பொருந்தி வரக்கூடிய வைரமொழி. சென்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிவும் அதற்குப் பிறகு நடந்த சில மாநிலத் தேர்தல் முடிவுகளும் நரேந்திர மோடி – அமித் ஷா ஜோடிக்கு ஆணவத்தை அளித்திருந்தன. கடந்த எட்டு மாத காலமாக ஏழை எளிய  மக்களைத் தாக்கும் பொருளாதாரக் கொள்கைகள், மதவாதம், யதேச்சதிகாரம் ஆகிய மூன்றையும் தங்க ளின் அரசியல் நடைமுறையாகக் கொண்ட அந்த ஜோடியே பா.ஜ.க. வின் இந்தப் படுதோல்விக்குக் காரணம். காங்கிர° கட்சியும் துடைத் தெறியப்பட்டுள்ளது. 52.5 சதவீத வாக்குகளைப் பெற்று, அசுர பலத் துடன் ஆட்சிக் கட்டிலில் ஏறியிருக்கும் ஆம் ஆத்மிக் கட்சியின் தலைவர்கள் மீது டெல்லிவாழ் மக்கள் மிகப் பெரிய பொறுப்புகளைச் சுமத்தியுள்ளனர். மின்சாரம், தண்ணீர் சம்பந்தமாக அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் மக்களைப் பெரிதும் கவர்ந்தன. அதோடு ஊழல்களற்ற, நேர்மையான ஆட்சியை ஏஏபி கட்சி வழங்கிடும் என்ற அவர்களது எதிர் பார்ப்பும் சேர்ந்து கொண்டது. கடந்த முறை பெரும்பான்மை இல்லாமல் 49 நாட்கள் மட்டுமே ஆட்சியில் அமர்ந்தபோது ஊழலற்ற ஆட்சியை நடத்த அவர்கள் முயற்சி செய்தார்கள் என்பதைக் கவனித்த டெல்லி வாக்காளர்கள் இம்முறை அவர்களை மிகப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் அமர்த்தியிருக்கின்றனர். இந்திய அரசியலில் இதுபோன்ற அதிரடி மாற்றங்கள் இதற்கும் முன்னரும் ஏற்பட்டுள்ளன. ஆனால், மாற்றங்கள், உண்மையான மாற்றங்களாய் இல்லாமல் போனால் மக்கள் தங்களை ஏமாற்றியவர்களைத் தண்டிக்கவும் தயங்கிய தில்லை.  “எங்களுக்கென்று எந்த அரசியல் சித்தாந்தமும் கிடையாது. நாங்கள் வலதும் அல்ல, இடதும் அல்ல” என்று ஆம் ஆத்மி கட்சி கூறு வது நடைமுறை சாத்தியமற்றது. சித்தாந்தம் அற்ற அரசியல் குழப்பங் களுக்கே இட்டுச் செல்லும். பிரசாந்த் பூஷன் போன்ற நேர்மையான தலைவர்கள் இன்று கட்சியிலிருந்து ஒதுங்கி நிற்பது குறித்தும் கேஜ்ரிவால் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். டெல்லியில் நடைபெற்றிருக் கும் மாற்றம் மதச்சார்பற்ற சக்திகளுக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. ஆம் ஆத்மி கட்சி மக்கள் விரும்பும் மாற்றங்களைக் கொண்டுவரும் என்று எதிர்பார்ப் போம்.
– ஆசிரியர் குழு

Related Posts