பிற

டிசம்பர் 30!

1906

அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சி டாக்காவில் ஆரம்பிக்கப்பட்டது.

1922

சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் உருவாக்கப்பட்டது.

1941

மகாத்மா காந்தி காங்கிரஸ் தலைமைப் பதவியிலிருந்து விலகினார்.

1947

ருமேனியாவின் மன்னர் மைக்கல் சோவியத் ஆதரவு கம்யூனிச அரசால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

சதாம் உசேன்

2006

ஈராக்னின் முன்னாள் அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட நாள். அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் இணைந்து 2003 ஈராக் போருக்கு பிறகு சதாமின் ஆட்சி கவிழ்த்து, டிசம்பர் 13, 2003 அன்று திக்ரித்துக்கு வெளியே உள்ள பாதாள அறை ஒன்றில் ஒளிந்திருந்த சதாமை அமெரிக்கப் படையினர் கைது செய்தனர்.

பல மனித உரிமை மீறல் வழக்குகள் தொடர்பாக இடைக்கால ஈராக் அரசு அமைத்திருந்த சிறப்பு நீதிமன்றத்தில் சதாம் விசாரிக்கப்பட்டு‍ நவம்பர் 5, 2006 இல் தூக்குத் தண்டனை எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

டிசம்பர் 26, 2006 இல் சதாமின் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டு மரணதண்டனை உறுதி செய்யப்பட்டது. டிசம்பர் 30, 2006 அன்று‍ தூக்கிலிடப்பட்டார்

Related Posts