நிகழ்வுகள்

டிசம்பர் 27!

1822

வேதியலாளரும், நுண்ணுயிரியலின் தந்தை என்று அழைக்கப்படும் லூயிஸ் பாஸ்டரின் பிறந்த நாள். நொதித்தல் நிகழ்வை உற்றுநோக்கும் போது நுண்ணுயிரிகளை பற்றி இவர் அறிந்துக் கொண்டார். நுண்ணுயிரியல் துறையில் இவரது பங்கு அளப்பரியது. இவர் நடத்திய ஆய்வுகளின் பயனாய் பல நோய்கள் நுண்ணியிரிகளால் ஏற்படுகின்றது என்று அறிந்தார். இவர்தான் முதன்முதலாக வெறிநாய் முதலிய வெறிநோய் ஏறிய விலங்குகளின் கடியில் இருந்து காக்க ஒரு தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்தார்.

1911

1911-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி முதன்முதலாக கல்கத்தா நகரில் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு நடக்கும்போது ஜன கண மன முதன்முதலில் கல்கத்தா நகரில் இசைக்கப்பட்டது. தாகூரின் உறவினரான சரளாதேவி சௌதுராணி இந்தப் பாடலைப் பாடினார். 1950 ஆம் ஆண்டு ஜனவரியில் ஜன கன மண இந்தியாவின் தேசிய கீதமாகவும் “வந்தே மாதரம்’ தேசியப் பாடலாகவும் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் இராஜேந்திர பிரசாத்தால் அறிவிக்கப்பட்டது.

1945

உலக வங்கி 28 நாடுகளின் ஒப்புதலுடன் உருவாக்கப்பட்டது. இதன் தலைவர் எப்பொழுதும் ஓர் அமெரிக்கராக இருப்பதும், அனைத்துலக நாணய நிதியத்தின் தலைவர் ஐரோப்பியராக இருப்பதும் வழக்கம்.

1956

தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

Benazir Bhutto meeting with socialist intellectuals in 1996 during a socialist convention in Pakistan.

2007

முஸ்லீம் அரசை  தலைமை தாங்கி நடத்தி செல்ல தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணியும் பாகிஸ்தானின் பிரதம மந்திரியாக இருமுறை (1988–1990; 1993–1996) பதவி வகித்தவருமான பெனசீர் பூட்டோ  ராவல்பிண்டியில் தற்கொலைக் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.

Related Posts