பிற

டிசம்பர் 21!

மேரி கியூரி

டிசம்பர் 21, 1898

மேரி கியூரி (Marie Curie) மற்றும்  Pierre Curie ஆல் டிசம்பர் 21, 1898  இல் ரேடியம் (Radium) கண்டுபிடிக்கப்பட்டது. வேதியியல் மற்றும் இயற்பியலுக்காக நோபல் பரிசை முறையே 1911, 1903 ஆம் ஆண்டுகளில் மேரி கியூரி பெற்றார். (இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற முதல் நபர்) ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டு பிடித்தார். அத்துடன் பாரிஸ் பல்கலைக்கழகத்தின் முதலாவது பெண் பேராசிரியரும் இவரேயாவார்.

டிசம்பர் 21, 1907

சாண்டா மரியா பள்ளி படுகொலை

சாண்டா மரியா பள்ளி படுகொலை

சிலி நாட்டில் சுரங்க தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்ததால் சிலி இராணுவம் வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்கள், தொழிலாளர்களின் குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளையும் சேர்த்து‍ வைத்து‍ படுகொலை செய்த நாள். இது‍ சாண்டா மரியா பள்ளி படுகொலை எனப்படுகிறது. இந்தப் படுகொலையில் 2,000 இறந்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

டிசம்பர் 21, 1991

கசக்ஸ்தானில் கூடிய பதினொரு சோவியத் குடியரசுகளின் தலைவர்கள் தனிநாடுகளின் பொதுநலவாய அமைப்பு (Commonwealth of Independent States) உருவாகியவுடன் சோவியத் ஒன்றியம் கலைக்கப்படும் என அறிவித்தனர். இதன்படி டிசம்பர் 26 ஆம் நாள் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது.

டிசம்பர் 21, 1995

பெத்லகேம் (Bethlehem) டிசம்பர் 21, 1995 முதல் பாலஸ்தீன தேசிய அதிகாரத்தின் கீழ் (Palestinian National Authority) கொண்டுவரப்பட்டது‍.

Related Posts