பிற

சுதந்திரம்: இணைய சுதந்திரம்

Optical microscope

1786

ஆங்கிலேய இயற்பியலாளரும் நுண்ணோக்கி உருப்பெருக்கியை உருவாக்கியவருமான நவீன அறுவை சிகிச்சையின் தந்தை என அழைக்கப்படுபவருமான ஜோசப் ஜாக்சன் லிஸ்டர் (Joseph Jackson Lister, FRS (11 January 1786 – 24 October 1869) பிறந்த நாள்.

நுண்நோக்கிகளும், தொலைநோக்கிகளும், 19 ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்டாலும், அதில் நிறைய குறைகள் இருந்தன. முக்கியமாக, உருவங்கள் தெளிவாகத் தெரியாமல், கலங்கலாகத் தெரிந்தது வந்தன. பல முன்னேற்றங்கள் ஏற்பட்டும் கூட, இந்தப் பிரச்சினை பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது. இயற்கையில் கண்ணாடிப் பொருட்களில் ஆர்வமுடைய ஜாக்சன் உருப்பெருக்கியின் ‘அபரேஷன்’ (aberration) எனப்படும் உருவம் மங்கலாகத் தெரியும் பிரச்சினைக்கு முடிவு கட்டினார். ஒரு நுண்நோக்கியை 1826ல் உருவாக்கி அதில் ஆடிகள் மூலம் தெளிவாக அருகாமைப் பொருட்களையும், தொலைவிலுள்ள பொருட்களையும் பார்க்க வகை செய்தார். நுண்ணோக்கி வழியே திசுக்களைப் பார்த்து அதனைப் பற்றிய கல்வியை வளர்த்துக்கொண்டார். அவரது நுண்ணோக்கி உருவாக்கத்துக்குப் பின், உயிரியல் மிக வேகமாக வளர்ந்தது. நுண்ணோக்கி தொழிலும் வளர்ந்தது. முதல் முதல் இரத்த சிவப்பணுவை உருப்பெருக்கியில் கண்டவர், மற்றவர்களுக்குக் காண்பித்தவர் ஜோசப் ஜாக்சன் லிஸ்டர் ஆவார். ஜாக்சன் லிஸ்டர் உருவாக்கிய நுண்ணோக்கி இலண்டன் அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

1787 

யுரேனஸ் கோளின் இரண்டு துணைக்கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. யுரேனஸ் சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து ஏழாவதாக அமைந்துள்ள ஒரு கோளாகும். விட்டத்தின் அடிப்படையில் இது மூன்றாவது பெரிய கோளாகும். இக்கோள் கிரேக்கக் கடவுள் யுரேனசின் நினைவாக பெயரிடப்பட்டது.

சிவப்பு நிறத்தில் இருப்பது‍ மிச்சிகன் மாநிலம்

1805

மிச்சிகன் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் கிழக்கு வடமத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் லான்சிங், மிகப்பெரிய நகரம் டெட்ராயிட். ஐக்கிய அமெரிக்காவில் 26 ஆவது மாநிலமாக 1837 ஜனவரி 11 இல் இணைந்தது.

1911

காம்ரேட் என்ற பத்திரிகையை விடுதலைப் போராட்ட வீரர் மவுலானா முகம்மது அலி கல்கத்தாவில் வெளியிட ஆரம்பித்தார்.

1932

திருப்பூர் குமரன் (பிறப்பு அக்டோபர் 4, 1904 – இறப்பு ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலையில் பிறந்தார். 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, 1932 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதியன்று கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு தடியடிபட்டு மண்டை பிளந்து, கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்து, பின்னர் மருத்துவமனையில் உயிர் துறந்தார்.

1972

கிழக்கு பாகிஸ்தான் வங்காளதேசம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

2013

Aaron Swartz

ஆரோன் சுவார்ட்ஸ் (Aaron Swartz) மெரிக்க கணினி நிரலாளர், எழுத்தாளர், அரசியல் ஒழுங்கமைப்பாளர், இணையச் செயற்பாட்டாளர். இவர் இணையத்தில் தகவல்களைப் பகிரப் பயன்படும் RSS சீர்தரத்தின் முதல் பதிப்பின் இணை ஹேக்கர். இவர் வெப்.பிவை (web.py) எனப்படும் வலைத்தள சட்டகத்தை எழுதினார். திறந்த நூலகத்துக்கான  Creative Commons கட்டமைப்பை உருவாக்கினார். முன்னேற்றத்தைக் கோரு (Demand Progress) என்ற அமைப்பின் நிறுவனர். பூட்டப்பட்ட தரவுத் தளங்களை திறந்த வெளிக்கு கொண்டுவருவதற்கான பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டு இருந்தார். இணையத்தை அரசுகள் கட்டுப்படுத்த கொண்டுவந்த பல்வேறு சட்டங்களை முன்னின்று வெற்றிகரமாக எதிர்ப்பதில் முக்கிய பங்கு கொண்டார்.

பூட்டப்பட்ட ஆய்விதழ்களை (JSTOR) திறந்த வெளியில் கொண்டுவருவதற்கான இவரது கொந்தர் செயற்பாடுகளுக்காக இவர் மீது அமெரிக்க அரசால் பல்வேறு குற்ற வழக்குகள் தொடரப்பட்டும் பெருமளவிலான அபராதத் தொகையும் விதிக்கப்பட்டிருந்தது. ஜனவரி 11, 2013 அன்று தனது 26 வயதில் இவர் தற்கொலை செய்து கொண்டார்.

“ஆரோன் இறந்துவிட்டான். உலகில் அலைபவர்களே, நாம் ஒரு விவேகமான மூத்தவனை இழந்துவிட்டோம். நல்லதுக்கான கொந்தர்களே, எம்மில் ஒருவன் வீழ்ந்துவிட்டான். எல்லாப் பெற்றோர்களே, நாம் ஒரு குழந்தையை இழந்துவிட்டோம். அனைவரும் அழுவோம்” என்று‍ ஆரோனின் இறப்பைப் பற்றி உலகளாவிய வலையின் கண்டுபிடிப்பாளர் ரிம் பேர்னேர்சு லீ தெரிவித்துள்ளார்.

Related Posts