இதழ்கள் இளைஞர் முழக்கம்

சானிட்டரி நாப்கின் மீது மோடி அரசின் தாக்குதல் – தீப்ஷிதா தர்

பெண்கள் மாதவிடாய் சுழற்சிக்கு பயன்படுத்தும் நாப்கின்களை ஆடம்பர பொருளாக வகைப்படுத்தி வரிவிதிக்க மோடி அரசு தீர்மானித்துள்ளது. நன்று, அது ஆடம்பரப் பொருள் தான் போல….?

குருதி கசியும் அந்த நாட்களில் நம் தேசத்தில் 12 சதவீதம் பெண்களே நாப்கினை உபயோகிக்க முடிகிறது. மீதமுள்ள 88 சதவீதம் பெண்கள் இன்று வரை தங்களின் அந்த துர்ரத்தப் போக்கை மறைக்க கந்தல் துணி, சாம்பல், உமிதூள் ஆகியவற்றோடு சமாளிக்கிறார்கள். எனவே, சுகாதாரம், கல்வி, பேச்சு மற்றும் மத உரிமை எப்படி ஆடம்பரமாக எல்லோருக்கும், கிட்டாத ஒன்றாகி விட்டதோ, அதே போல் இந்த நாப்கின்கள் ஆடம்பரமாகிப் போயின. இந்தியாவில் இளம் பெண்களில் 30 சதவீதம் பூப்பெய்தியவுடன் கல்வி செல்வதை நிறுத்தி விடுகிறார்கள். அவர்களில் 83 சதவீதம் பேர் மாதவிடாய் எதிர்க் கொள்ள பள்ளிகளில் போதுமான வசதிகள் இல்லை என்பதை குறிப்பிடுகிறார்கள்.

மாதவிடாய் தேர்வு அல்ல, வலி மிகுந்தது. (ஒரு பெண்ணின் குரல்)

எனக்கு ஒரு வெட்டுக்காயம் பட்டதாலோ அல்லது வேறு காயத்தாலோ, இரத்தம் கசிவதில்லை.

ஆண் உடலில் உள்ள ஹார்மோன் வேதிவினை புரிவதால் எப்படி தாடி வளர்கிறதோ, அதே போல் கரு ஊட்டப்படாத சினை முட்டைகளை புழையின் வழியாக இரத்தமாக கொட்ட வேண்டி உள்ளது. ஈஸ்ட்ரோஜன், பிராஸ்ட்ரோஜன் மற்றும் ஹார்மோனை தூண்டும் ஊக்கிகள் மற்றும் பிட்யூட்டரி சுரப்பி சம்மந்தமான ஹார்மோன் ஆகியவையே இரத்தம் வெளியேறும் நிகழ்வுக்கு காரணமாகின்றன. இந்த நடைமுறை இலகுவானதோ, மென்மையானதோ அல்ல.

பெரும்பான்மையான பெண்கள் இச்சமயத்தில் கடும் தசை பிடிப்பின் நெருக்கடிக்கு ஆளாகிறார்கள். இவ்வலி மாரடைப்பு வலியை விட மோசமானது என்றும் ஆனால், அதை வெறும் வலி நிவாரணியை கொடுத்து, சாதாரண ஒன்றாக மருத்துவ உலகம் பார்ப்பதாக இத்துறையின் நிபுணரும், இலண்டன் பல்கலைக்கழக பேராசிரியருமான ஜான் கில்லிபாட் கூறுகிறார்.

இத்துறையில் ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள், ஆண்களுக்கு இத்துயரம் இல்லாததால், பெண்களின் இத்துயர் குறித்து போதிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை எனக் கருதுகிறார்கள்.

மருந்தியல் புலம் கூட ஏற்கனவே இருக்கின்ற ஸ்டீராய்டு மருந்துகள் தவிர வேறு மருந்துகளை உற்பத்தி செய்ய ஆர்வம் காட்டவில்லை.

இரத்தம் வெளிப்படுத்தும் பெண்கள் தூய்மையானவர்களே.

ஆனால், அதை வெளிப்படுத்தாத ஆண்களும் அப்படியே. மாதவிடாய் இரத்தம் மற்றும் அதன் புனிதம் பற்றி பேசும் முன், புனிதம், சுற்றுச்சூழல் சம்மந்தமான உங்கள் கருத்து உருவாக்கத்தை உங்கள் மூளையில் இருந்து கழற்றி விடுங்கள். இதை படிப்பதற்கு முன் உங்கள் சாதி சாயம் படிந்த மூளையை தூர வையுங்கள். ஏனென்றால், நீங்கள் தீர்ப்புகளை பகிர்ந்தளிக்கும் நபர் அல்ல.

கோவிலுக்குள் நுழையக் கூடாது. உணவை தொடக்கூடாது போன்ற பல விலக்குகள் மாதவிடாய் காலத்தில் பெண்கள் மீது திணிக்கப்படுகின்றன. ஆனால், அப்பெண்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்பதற்காகவே இத்தகைய விதிகள் என்று முட்டாள்தனமான தர்க்கத்தை வைக்காதீர்கள்.

ஆயிரக்கணக்கான பிற வீட்டுப் பணிகளை நீங்கள் ஏவும் போது அவர்களுக்கு அப்போது ஓய்வு தேவை என்று எப்போதும் நீங்கள் உணர்வதில்லை. சில பெண்கள் கூட, உன் அப்பாவிற்கு அருகில் போகாதே, வெளியே விளையாடப் போகாதே, நீ கரை பட்டிருக்கிறாய் என சொல்வதெல்லாம் என்ன?

இவையெல்லாம் ஏன்?

இதில் இயற்கைக்கு மாறாக என்ன இருக்கிறது. என் தந்தை அவருடைய மனைவி மாதவிடாயில் இரத்தம் கசிவதை அறியமாட்டாரா? ஏன் என் சகோதரன் அவனுடைய சிறு தங்கை இந்த வலியால் துன்புறுகிறாள் என்பதை அறிய மாட்டானா? ஏன் இயற்கையாக நடக்கும் ஒரு நிகழ்வை மர்மமானதாய் செய்து தேவையற்ற கட்டுப்பாடுகளை என் உடலின் மீது உருவாக்கி என் சொந்த உடலையே நான் வெறுக்கும் நிலைக்கு என்னை கொண்டு செல்கிறீர்கள். ஆனாலும், நீங்கள் பொது இடங்களில் கழிக்கும் சிறுநீர் பரப்பும் நோய் கிருமிகளை விட, என்னுடைய மாதாந்திர இரத்தக் கசிவு அவ்வளவு மோசமானதல்ல.

நாப்கின் என்பது மந்திரத் துணி அல்ல வெறும் பருத்தி துணியே.

நம் சிறுவயதில் நம் அன்னை ஒரு கருப்பு நெகிழி பைக்குள் ஏதோ வைத்திருக்கிறாரோ என்கின்ற பேர் ஆர்வம் ஏற்பட்டிருக்கும். எனக்கு நினைவில் இருந்து அப்படி ஒரு நாப்கினை கிழித்து பார்த்ததில் அப்படி ஒன்றும் அதில் பிரத்யேகமாக காணப்படவில்லை. எனவே, அன்புக்குரிய ஆண்களே தந்தை வழி சமூகம் நூற்றாண்டுகளாக ஏற்படுத்திய சமூக கட்டுமானமே அந்த கருப்பு நெகிழிக்குள் இருக்கும் அந்த நாப்கினை துணியை இளம் பெண்கள் பொது வெளியில் கேட்டு வாங்குவதற்கு தடை ஏற்படுத்தியுள்ளது என்பதை தவிர வேறல்ல.

மாதவிடாய்க்கு முந்திய அடையாள நிகழ்வுகள் உண்மையே!

மாதவிடாய்க்கு முந்திய அடையாள குறியீடுகள் மாத சுழற்சிக்கு உள்ளே நடைபெறும் நிகழ்வுகளின் வெளிப்பாடுகளே.
இச்சுழற்சியின் போது உங்களின் ஈஸ்ட்ரோஜன், பிராஸ்ட்ரோஜன் ஆகிய ஹார்மோன்கள் சமச்சீரற்று இருக்கும். இது மூளையில் பல இரசாயன மாற்றங்களை உண்டாக்கலாம். மூளையில் உங்களை மகிழ்வாக வைத்திருக்கும் செரடோனின் அளவிலும் பெரிய தாக்கத்தை உண்டு செய்யும். இந்நேரம் தான் அப்பெண் அதி முக்கியமாக புரிந்து கொள்ளப்படவும், பேணப்படவும் ஆகிறாள். நட்போடு இயைந்த அன்பனாக அல்லது குடும்பமாக நீங்கள் அப்பெண்ணை பேண வேண்டும்.

இடுப்பு எலும்பின் கீழே ஒரு வலிமிகுந்த தசைபிடிப்பிற்கு ஆளான பெண்ணிற்கு ஏற்படும் உயிரியல் ரீதியான பாடத்தை நீங்கள் புரிந்து கொள்ளல் வேண்டும்.

வலுமிக்க குழந்தை பிறப்பிற்கு மாதவிடாயே அடிப்படை உயிரியல் அம்சம்.

நான் அறிந்தவரை இந்து பெண்களே குழந்தை பெறும் இயந்திரங்களாக கருதும் சாதுக்களும், யோகிகளும் இது பெண் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் மகிழ்ந்திருப்பார்கள். ஆனால், எதார்த்தம் என்னவென்றால், இச்சுழற்சியை சுகாதாரமற்ற முறையில் கையாண்டால் அது குழந்தை கரு உண்டாக்குதலின் பாதையிலேயே தொற்று ஏற்படுத்தும் மற்றும் அத்தகைய தொற்று எண்ணிலடங்கா, வலுவான சீரழிவை உண்டாக்கும். இது கர்ப்பபைக்கு முந்தைய சூல் கொள்ளுதல், அதில் ஒவ்வாமை ஏற்படுத்துதல் பிரசவத்திற்கு முந்தைய இறப்பு, கர்ப்ப வாய் புற்றுநோய், தீராத வலி மற்றும் ஆழ் மன நெருக்கடி ஆகியவற்றை ஏற்படுத்தும்.

இந்தியாவில் 50 சதவீதம் பெண்கள் இத்தகைய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதிலும் 65 சதவீதம் பெண்கள் 25 வயது முதல் 35 வயதினர். சானிட்டரி நாப்கின் மாதாந்திர இரத்தப் போக்கு என்பவை இந்தியாவில் விலக்கப்பட்டவையாகவே உள்ளன. நம் நாட்டின் தொலைதூர கிராமங்களில் நாப்கின்கள் கிடைக்கும் கடைகளை நீங்கள் பார்க்கவே முடியாது.

தமிழில்: அகிலா

Related Posts