பிற

சபரிமலை விவகாரம் குறித்து கேரள பிஜேபி தலைவர் ஸ்ரீதரன் . . . . . . . . . . . !

பெண்கள் சபரிமையில் நுழைந்து விடும் சூழல் ஏற்பட்ட போது நான் பத்திரிகையாளர் சந்திப்பில் நாங்கள் நீதிமன்ற தீர்ப்பை மீறுவோம் என கூறினேன். நான் எவரையும் அழைத்து தகவல் சொல்லும் முன்னரே நமது அமைப்பினர் பெண்களை தடுத்து நிறுத்த துவங்கினர். சில தொலைகாட்சிகளில் அது தலைப்பு செய்தியாக மாறியது. மாநில தலைவர் அறிவித்த அரை மணி நேரத்தில் இளைஞர்கள் இதை ஒரு சவாலாக எற்றுக் கொண்டு அங்கு நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்க துவங்கினர் என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். இது யுவ மோர்ச்சா அமைபினரால் நடத்தப்பட்டதாகும்.

தற்போது நமக்கு கிடைத்திருப்பது ஒரு Golden Opportunity ஆகும். சபரிமலை ஒரு குழப்பமான பிரச்சனை ஆகும். அதற்கு ஒரு நேர்கோட்டில் நின்று தீர்வு காண முடியாது. இப்போது அந்த பிரச்சனை நமது கையில் இல்லை. நமது அஜண்டாவை நாம் முன்வைத்தோம், அதன் பின்னர் ஒவ்வொருவராக வந்து வீழ துவங்கினர். முடிவாக களத்தில் நாமும் நமது எதிராளியான சி.பி.எம் கட்சியினரும் உள்ளனர். தற்போதைய போராட்டத்தை பொறுத்தமட்டில் கடந்த மலையாள மாதம் 1-5 தியதி வரை, ஆங்கில மாதம் 17-22 வரை திட்டமிட்டு அமுல்படுத்தியது பி.ஜெ.பி தான். மாநில பொது செயலாளர்கள் சில இடங்களுக்கு செல்ல பணிக்கப்பட்டன்ர். அங்கிருந்து அவர்களால் சில செயல்களை வெற்றிகரமாக செயல்படுத்தவும் முடிந்தது. அதே போல் யுவ மோர்ச்சா அமைப்பினர் ஒரு செயலாளரின் தலைமையில் ஸ்ரீஜித் இரண்டு பெண்களோடு சபரிமலைக்கு செல்ல முயன்ற போது எதிர்த்து அதை தடுத்து நிறுத்தினர். அதன் பின்னர் சூழல் மாறும் நிலை உருவானது. நமது அமைப்பு தீர்மானிக்கும் திசையில் பயணிக்கும் போது கிடைக்கும் லாபம் ஒரு புறமும், எதிராளிகளை நாம் தூண்டி அதை நமக்கு சாதகமாக்கும் நிலையையும் உருவாக்க முடியும்.

ஒரு நீண்ட போராட்டம் நடைபெறும் போது அதற்கு சில எல்லைகளும் இருக்கும். குறுகிய கால லாபம் நமது குறிக்கோள் அல்ல. 10-50 வயதிற்குட்பட்ட பெண்கள் சபரிமலை செல்வதை எதிர்த்து கடும் போராட்டங்கள் நடத்த வேண்டும். ஆனால் இது ஒரு யுத்தம் அல்ல. ஒருவரை ஒருவர் வெட்டுவதும், கொலை செய்வதும் இதில் தேவையில்லை.

இது ஒரு நீண்ட நாள் போராட்டமாகும். இதில் பல கட்டங்களை நாம் கடந்து செல்ல நேரிடும் அப்படி ஒரு நீண்ட போராட்டம் நடைபெறும் சூழலில் நாம் என்ன செய்ய வேண்டும், என்ன நடைமுறை தந்திரங்களை கையாள வேண்டும் என அறிவுரை வழங்க சபரிமலை தந்திரி குடும்பம் தயாராக உள்ளது. தற்போதைய நிலையில் அந்த குடும்பம் பி.ஜே.பியின் மீது அல்லது அதன் தலைவர் (தன்) மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ளது.

பெண்கள் சபரிமலைக்கு சென்று விடுவார்கள் என்ற நிலை உருவான போது மேல் சாந்தி(கண்டரரு ராஜீவரரு) வேறு ஒரு தொலைபேசியில் இருந்து என்னை தொடர்பு கொண்டு பேசிய போது அவருக்கு ஒரு உறுதியை அளித்தேன். அது விதி வசம் நடந்தும் விட்டது. அவர் என்னை அழைத்த போது தர்மசங்கடமான நிலையில் இருந்தார். கோவில் நடையை அடைத்து விட்டால் அது நீதிமன்ற அவமதிப்பு ஆகிவிடாதா என அஞ்சினார். காவல்துறை அவரை மிரட்டியதாகவும் கூறினார். அவர் அழைத்த சிலரில் நானும் ஒருவன். நான் அவரிடம் நீங்கள் தனியாக இல்லை, அப்படியே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வந்தாலும் முதலில் எங்கள் மீது தான் பாயும், நாங்கள் ஆயிரக்கணக்கானோர் உங்களோடு உள்ளோம் என கூறிய போது ராஜீவரரு, ‘சார் நீங்கள் சொன்ன அந்த ஒரு வார்த்தை மட்டும் போதும்’ என கூறி ஒரு தீர்மானத்தை எடுத்தார்.(கோவிலை பூட்டி செல்வதாக அறிவித்தது). அந்த தீர்மானம் தான் காவல்துறையையும், ஆட்சியாளர்களையும் குழப்பத்தில் தள்ளியது. இனி ஒரு சூழல் ஏற்படும் போது அப்படியே தான் தீர்மானிப்பார் என நான் கருதுகிறேன்.

என்ன ஆனாலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முதல் குற்றவாளியாக நானும், இரண்டாவது குற்றவாளியாக மேல் சாந்தியையும் மார்க்சிஸ்டுகள் கூறிய போது, நான் விளையாட்டாக கூறிய வாக்குறுதி, விளையாட்டாக அல்ல மனதார கூறியது தான் நடந்துவிட்டது. ஆனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நான் சிக்கிவிடுவேன் என நான் கனவிலும் நினைத்ததில்லை. கடவுளின் விருப்பத்திற்கிணங்க நானும் மேல்சாந்தியும் நீதிமன்ற வழக்கில் குற்றவாளிகளாகும் போது அவரது தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது என்பது தான் உண்மை. நான் சொன்னது போல் நமது strategy தான் இந்த பிரச்சனை எவ்வாறு உருப்பெற வேண்டும் என தீர்மானிக்க வேண்டும்.

ஊடகங்கள் சொல்வது போல் நமது பாதையை நிர்ணயிக்க வேண்டியவர்கள் அல்ல நாம்.இதில் இறுதியில் தர்மமே வெல்லும். அந்த வெற்றியில் என்ன பலன்கள் கிடைக்க வேண்டும் என்பதை எம்.டி.ரமேஷ் போன்றோர் தெளிவாக விளக்குவர். நமது அமைப்பின் பலரும் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் போது, நான் யாரையும் குறை கூறவில்லை. அவர்கள் பணிவான மரியாதையான முறையில் பேசினால் மட்டுமே நமக்கு பலன். வார்த்தைகளுக்கு ஆயுதங்களை விட கூர்மை அதிகம். வார்த்தைகளை பேசி விட்டால் திரும்ப எடுக்க இயலாது. அதனால் அனாவசிய வார்த்தைகள் பேசி நமது அமைப்பிற்கு களங்கம் விளைவிக்காத அபூர்வமான சிலரில் எம்.டி.ரமேஷ் ஒருவர் என்பதால் எனக்கு அவர் மீது அதீத நம்பிக்கை உள்ளது. அவர் பொது விவாதங்களில் மிதமாகவும் அமையாகவும் பேசுபவர், ஆனால் உள்ளூற அவர் ஒரு தீவிரவாதி தான். ஓமனாவை விட தீவிரமான வார்த்தைகளை தற்போது பேசுவார், வெளியில் மிதமாக பேசுவார்.

அதனால் நீங்கள் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். உங்களிடம் ஒரு விசயம் மட்டும் கூற விரும்புகிறேன். எந்த போராட்டத்திற்க்கும் தயாரிப்பு அவசியம். ஒரு புரட்சி நடத்த வேண்டும் என்றால், அது பிரஞ்சு புரட்சியோ, ரஷ்ய புரட்சியோ அதற்கு முன்னர் தேவைப்படும் முன்னேற்பாடுகளும் கற்க வேண்டியவையும் அவசியமானதாகும் புரட்சியில் பங்கேற்போரின் வரலாறை கற்றுக் கொண்டால் இதை நாம் புரிந்து கொள்ள முடியும். ஒரு குழு வீரர்களுக்கு போராட்டத்தின் நோக்கங்களையும் தேவைகளையும் கற்பிக்கும் பணியை செய்யும்.

மொழிபெயர்ப்பு

– நீலாம்பரன்.

Related Posts