அரசியல் காதல்

கொல்லப்பட்ட மனிதர்களும். . . . . அழுகிப் போன சமூக மனசாட்சியும் . . . . . !

 201610060225083181_girls-father-kills-dalit-over-marriage-proposal_secvpf

அக்டோபர் மாதத்தில் அந்த 4 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. பல ஆயிரம் செய்திக் குவியலில் இந்த மரணங்கள் குறித்த செய்திகள் அடிஆழத்திற்கு சென்று விட்டது. நம் நினைவில் இருந்தும் அகன்றும், மறைந்தும் வருகிறது. அந்நியமாதலின் ஒரு பகுதியாக அச்செய்திகள் குடிமைச்சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் மிக குறைவாகவே இருக்கிறது.

அண்டை வீட்டாருக்கு இடையிலேயே ஒரு சீனப்பெருஞ்சுவர் வளர்ந்தோங்கி இருக்கையில், இந்த மரணங்கள் நம் இதயத்தின் ஒரு நரம்பைக் கூட தொட முடியாத ஒரு உலகத்தில் நாம் இருக்கிறோம். முதலாளித்துவ சமூகம் பணத்தை மையமாக கொண்டு இயங்குவதோடு, அது மனிதனின் ஆளுமையையும், சுயசிந்தனையையும் கொன்றழிக்கிறது. பண பிணைப்பை தவிர வேறொன்றுமில்லை இங்கே.

ஆயினும், மரணங்கள் நம்மை துரத்துகின்றன. அந்த மரணத்தின் பாதையில் பல நூறு ஆயிரம் லட்சம் கோடிப்பேர் நிற்பதாக மனக்கண்ணில் தெரிகிறது. கடைசியாக எழுதப்பட்ட கடிதத்தின் மை உலர்ந்து, எழுத்து அழிவதைப் போல, மரணித்துப் போன மனிதர்களின் இதயம் எதை நினைத்து இறுதி நொடிகளில் துடித்திருக்க கூடும். நம் காதுகள் ஏன் அவற்றை கேட்க துணியவில்லை.

அக்டோபர் 5-ல் முதல் மரணம் நிகழ்ந்தது. அது பல ஆயிரம் ஆண்டுகளின் தொடர்ச்சியாகவே இருந்தது. kolaiiiமுத்துப்பட்டன், காத்தவராயன், மதுரைவீரன் என்று பல நூறு பழங்கதைகளின் நீட்சியாகவே அது நடந்து முடிந்தது. இன்னமும் இங்கே காதல் சமூகமயமாகவில்லை. தனிமனித உணர்வாகவே உள்ளது. ஷாஜகானின் குடும்ப காதல் கொண்டாடும் சமூகத்தில், மரபுகளை மீறிய, அதிகாரத்தை புறந்தள்ளிய சலீமின் காதல் காதலர்களால் மட்டுமே பேசப்படுகிறது. நரகத்தில் நடப்பதாக சொல்லப்படும் பாட்டிகளின் கதையை விட மிக கொடூரமாகவே சாதி மறுப்பு காதலர்கள் கொல்லப்படுகிறார்கள். எண்ணெய்ச்சட்டியில் தூக்கி போடுவதற்கும், காதில் விஷம் ஊற்றுவதற்கும், உயிரோடு சுடுகாட்டில் கொளுத்தப்படுவதற்கும் இடையில் வித்தியாசம் ஏதுமில்லை.

சிவகுருநாதனின் கொலையும் அத்தகு கொடூரம் நிறைந்த ஒன்று தான். அவர் ஒரு நாள் பேசவில்லை என்றாலும், அவள் நாள் முழுவதும் யாருடனும் பேச மாட்டாள், முகத்தில் துக்கம் வழிய துயருற்று இருப்பாள் என்று கஸ்தூரியின் தோழி கூறியுள்ளார். குரலையும், கண்களையும் கேட்க முடியாத, பார்க்க முடியாத காதல் துயரத்தை பிள்ளைகளை பெற்று தள்ளும் இச்சமூகம் ஏன் உணர்ந்து கொள்ள மறுக்கிறது.

அக்டோபர் 10ல் அடுத்த மரணம் நிகழ்ந்தது. எட்டு ஆண்டுகள் தான் மிகவும் நேசித்த அந்த உத்தியோகமும், அந்த உடுப்பும் தன் உயிரையும் பறிக்கும் என்று அந்த இளம் சகோதரிக்கு தெரியவில்லை. இது அதிகாரத்தால் கட்டமைக்கப்பட்ட ஒன்று. அந்த அதிகாரத்தில் ரத்தமும் சதையும் போல பிணைந்திருப்பது, ஆளும் வர்க்கத்தின் ஆணாதிக்க, சாதிய மேலாதிக்கம் என்பதனையும் அவள் அறிந்திருக்கவில்லை. அப்பா இல்லாத குடும்பத்தில் சகோதிரிகளையும் அம்மாவையும் கவனிக்க வேண்டும், வேறொரு நல்ல அரசு உத்தியோகத்திற்கு போக வேண்டும் என்பதை தவிர வேறொன்றும் இல்லை அவர் மனதில்.

police-ramu-deathமற்ற எல்லோரையும் போல அன்பும், அரவணைப்பையும் அந்த இதயம் தேடியிருக்க கூடும். நயவஞ்சகமும், துரோகமும் அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. சாதாரண மனிதர்கள் தோல்வியுறும் இடம் இதுவாகத்தான் இருக்கிறது. ஆனால், ஒரு காமாந்திரனுக்கு அரசு அதிகாரம் முற்றிலும் துணை போன கொடூரத்தை எப்படி சகித்துக் கொள்வது. 7 நாள் பிணவறையில் ராமுவின் சடலம் போராடிய பின் குற்றவாளி கைது செய்யப்பட்டான். இரண்டு பெண்களுக்கு அவன் துரோகம் இழைத்திருக்கிறான். ஒருவர் பிணமாகவும், மற்றொருவர் நடைபிணமாகவும் ஆகிவிட்டனர். நிர்மல்யாக்களின் கதை தொடர்கிறது. நிர்மல்யா என்றால் இந்தியாவின் குழந்தை என்றர்த்தம். போதும். சகிக்க முடியாத இந்த கதைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி தேவை.

அக்டோபர் 15லும், அடுத்த நாளிலும் இரு மரணங்கள். 19 வயது திவ்யலட்சுமி தன் அப்பாவின், அம்மாவின் மரணத்தை, விசமருந்தி நொடிகளையும், நிமிடங்களையும், மணி நேரங்களையும் விசமாக தொண்டையில் வைத்திருந்து செத்துப் போனதை பார்த்தவர். ஒரே சாட்சி. பண்டிகைகளும் இன்று எளிய மக்களின் எதிரியாக வடிவெடுத்து நிற்கிறது. மருத்துவமும், கல்வியும் ஏழை மக்களை கடனில் தள்ளுகிறது. பிணவறைகள் நிரம்பி வழிகின்றன.

மரணங்கள் துரத்துகின்றன. நீதி கேட்கின்றன. மூடிய கண்களுக்குள் அமர்ந்து கொண்டு சட்டையை பிடித்து உலுக்குகின்றன. பல நூறு ஆயிரம் பேரின் ஆதரவையும், ஆக்ரோசத்தையும் வேண்டுகின்றன. நடக்கும் பாதையெங்கும் புதைகுழிகளாய் மாறி, அவைகள் நம்மிடம் அழுகிப்போனது எங்கள் உடலல்ல, இந்த சமூகம் சுட்டெரி என உத்தரவிடுகின்றன். இதயமற்றவன் இதனை கடந்து விடுகிறான்.

– K.G.பாஸ்கரன்.

Related Posts