அரசியல்

கொரோனாப் பேரிடரை எதிர்கொள்ள திணறும் முதலாளித்துவம்………

வலிகள் நிறைந்த நாட்களாக பொழுது நகர்கிறது. உலகமே உரடங்கால் நிலைகுலைந்து பெருந்தொற்று நோயான கொரானா வைரஸை அழித்தொழிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. உலகளாவிய ஒருமைப்பாட்டை, ஒத்துழைப்புப்பை ஒவ்வொரு நாடுகளும் பகிர்ந்து கொள்ள வேண்டிய காலமாக மாறியிருக்கிறது. கொரானாவை முறிக்கும் மருந்துகள் தயாரிக்க கூர்மையான ஆய்வுகள் மற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2003 ஆம் ஆண்டு சீனாவின் குவாங்டாங் பகுதியில் தோன்றிய SRAS-CoV (The Severe Respiratory Acute Syndrom Coronavirus) என்கிற கொரானா குடும்பத்தைச் சேர்ந்த வைரஸால் கொடிய சுவாச கோளாறு நோய் 26 நாடுகளில் பரவி 8098 நபர்களை பாதிப்புகளை உண்டாக்கி 9% உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. பின்னர் சவூதி அரேபியாவில் மீண்டும் கொரானா வகையைச் சேர்ந்த மற்றொரு வைரஸால் 2012 ஆம் ஆண்டில் MERS- CoV (The Middle East Respiratory Syndrome Coronavirus) பரவியது.

அங்கு 2428 பேருக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி 838 இறப்புக்கும் இட்டுச்சென்றது. இப்போது 2019 ஆம் ஆண்டு சீனாவின் வளர்ச்சி பெற்ற தொழில் நகரமான யூகானில் புதிய பரிணாமம் பெற்று Covid 19 ஆக பரிணமித்து, மனித உடலில் இருந்து வெகு விரைவாக வேறொரு மனித உடலுக்கு மாறும் தன்மை கொண்ட கொரானா வைரஸ் பெரும் நோய் தொற்றாக உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 109 நாடுகளில் பரவி அபாயமாக்கியுள்ளது. இப்போது 28 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை பீடித்து இருக்கிறது. உலக நாடுகள் கொரனாவை தடுத்து ஓரங்கட்ட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதுடன், அவற்றை எதிர்கொள்ள மருத்துவ பொருட்கள், உபகரணங்கள் இல்லாமல் மருத்துவ சமூகம் சவால்களை சந்தித்து வருகிறது. இன்னும் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் இருப்பதாகவும், கொரோனாவை குணப்படுத்தும் மாத்திரைகள், தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்க ஆய்வுகள் துவங்கி நடைபெறுவதாக உலக சுகாதார அமைப்பு நம்பிக்கை அளித்து வருகிறது.

இப்போதைக்கு ஒரே தீர்வு தொடர்பு சங்கிலியை உடைப்பது என்கிற நோக்கில் உலக போக்குவரத்து நிறுத்தப்பட்டு உலக பயணங்கள் ரத்து செய்யபட்டுள்ளதுடன், உலக நாடுகள் உரடங்கை கையாண்டு கொரானா விலிருந்த தொற்றையும், உயிரிழப்புகளையும் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில் சமகாலத்தில் இல்லாத அளவில் உலகம் முழுவதும் 2 லட்சம் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது. 2020 ஜனவரியில் இயற்கையாக உருவான கொரானாவின் கோர பரிணாமம் குறித்து உலக சுகாதார அமைப்பு உலக நாடுகளை எச்சரித்த நிலையில் அவற்றை “அரசியல் புரளி” என ஒய்யாரமாக இருந்துவிட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் இப்போது, சுமார் 8 லட்சத்திற்கு மேல் பாதிக்கப்பட்டு அல்லல்படும் அமெரிக்க குடிமக்களை பாதுகாக்க முடியாமலும், மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க முடியாமல் திணறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சூழலில், பாதுகாப்பு கவசங்களை அங்கிருக்கும் மருத்துவர்கள் துவைத்து பயன்படுத்தும் நிலையிலும், நான்கு ஐந்து நாட்களுக்கு பயன்படுத்தும் நிலையில், பாதுகாப்பு கவசங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

உத்தரவு போட்டால் மருத்துவ பொருட்கள் வந்திறங்க வேண்டும் என்கிற வல்லாதிக்க மனநிலையில் உலக நாடுகளை மிரட்டி வரும் அமெரிக்கா. இப்போது சீனாவை சீண்டி பார்க்கிறது. சீனா திட்டமிட்டு வைரஸை பரப்பியதாக கதைக்கிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் ஹைட்ரோகுளோராகுயின் மாத்திரைகளை கேட்டு மிரட்டும் அமெரிக்க அதிபர் டிரம்ப். உலக சுகாதார அமைப்புயும் விட்டுவைக்காமல் அது சீனாவிற்கு ஆதரவாக உள்ளதாகஅநியாய கருத்துருவாக்கம் செய்து வருகிறார். சீனாதான் உலகத்திற்கு தொற்றை பரவவிட்டதாக ஆதாரமற்ற பொய்யால் வீண் பழி சுமத்துவது எல்லாம், அமெரிக்காவில் நடைபெறும் உயிரிழப்புகள், அதிகரிக்கும் கொரானா பாதித்தவர்களின் எண்ணிக்கை, மருந்து தட்டுபாடுகளை பற்றி சொந்த மக்களும், உலக நாடுகளை சாமாளிக்கவும் தன்னுடைய இயலாமையை மறைக்க சாமர்த்தியமாக வாய் சவடால் விடுகிறார் டிரம்ப்.

கடந்த காலங்களில் கியூபா, வடகொரியா, ஈராக், ஈரான், காங்கோ, லிபியா, சோமாலியா, சூடான், சிரியா, ஜிம்பாப்வே உள்ளிட்ட நாடுகள் மீது பொருளாதார தடை விதித்து அந்த நாடுகளின் உலக வர்த்தக தொடர்புகளை அறுத்தெறிந்துடன் சூடான், சோமாலியா மக்களை பஞ்சம் பட்டினியால் கொலை செய்த நிகழ்வுகள் ஏராளம் உண்டு. தென்கொரியாவிலும், இஸ்ரேலில் தன் நாட்டு படைகளை நிறுத்தி ஈராக், ஈரான், பாலஸ்தீன நாடுகள் மீது குண்டுகளை பொழிந்து அப்பாவிகளைளன கொன்றுகுவித்தவர்கள் அமெரிக்க படைகள். அப்படிபட்ட ஈவிரக்கமற்ற அமெரிக்கா தன்னுடைய இயலாமையை மறைக்க இப்படிப்பட்ட பொய்களை சொல்லி சொந்த மக்களை ஏமாற்றி வரும் நிலையில், அமெரிக்க குடிமக்கள் உரடங்கை எதிர்த்தும், வர்த்தகம், வாழ்வாதார பாதிப்புக்கு உள்ளாகி வரும் சூழலுக்கு எதிராக மாகாணம் எங்கும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

அனைத்தும் தனது கையில் இருக்க வேண்டும் என்கிற வல்லாதிக்க மனப்பான்மை கொண்ட அமெரிக்காவின் பேராசை தன்னுடைய பொருளாதார வலிமைக்கு சவால்விடும் 2 ஆம் நிலையில் கம்யூனிச கொள்கை கொண்ட சீனா பொருளாதார வளர்ச்சி பெற்றுள்ளதை தாங்கிக்கொள்ள முடியாமல் அவற்றின் மீது விஷமத்தை கக்குவது, குடிமக்களை பாதுகாக்க வழி தெரியாமல் அலைந்து கொண்டிருக்கும் கையாலாகாத டிரம்பின் இயலாமையின் வெளிப்பாடே.

சே.அறிவழகன்,
விழுப்புரம்
.

Related Posts