இதழ்கள் இளைஞர் முழக்கம்

கேம்பஸ் இன்டர்வியூ எனும் மோசடி – அலகுநம்பி வெல்கின்

கடந்த காலங்ளில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை என்பது அக்கல்லூரியன் கல்வி கற்பிக்கும் விதம், பல்கலைக்கழகத் தேர்வில் அக்கல்லூரியின் வெற்றி விகிதாச்சாரம் மாணவர்கள் பெறும் மதிப்பென், ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே நடைபெற்றது. ஒரு கல்லூரி சிறந்த கல்லூரியா அல்லது தரமற்ற கல்லூரியா என்பதை மேற்கண்ட அடிப்படையிலேயே தீர்மானிக்கப்பட்டது. ஆனால் இன்றைய நிலை அப்படியல்ல. கல்லூரியில் நடைபெறும் வளாகத் தேர்வில் எத்தனை மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். எந்தெந்த நிறுவனங்கள் வளாகத் தேர்வில் கலந்து கொள்கிறது என்பதை அடிப்டையாகக் கொண்டே கல்லூரியில் தரம் தீர்மானிக்கப்படுகிறது.

இதனால் எவ்வித அடிப்டை வசதிகளும் இல்லாத தரமான ஆசிரியர்கள் இல்லாத கல்லூரிகள் கூட ஏதாவது நிறுவனங்களை அழைத்து வந்து கேம்பஸ் இன்டர்வியூ நடத்தி தங்களது கல்லூரியும் சிறந்த கல்லூரி என்று நிரூபிக்கவும் அதன் மூலம் தங்களது கல்வி வியாபாரத்தை பெருக்கிக் கொள்ளவும் முயற்சிக்கின்றன. ஆரம்பத்தில் தரமற்ற நிறுவனங்களை அழைத்து வந்து கெம்பஸ் இன்டர்வியூ நடத்திய கல்லூரிகள் தற்போது பல கார்ப்பரேட் கம்பெனிகளுடன் ரகசிய உடன்பாடு செய்து கொண்டு கேம்பஸ் இன்டர்வியூ நாடகங்களை நடத்தி வருகின்றன. தரமற்ற கல்லூரிகள் கூட தங்கள் கல்லூரியில் படித்த மாணவர்களை பிரபலமான பன்னாட்டு நிறுவனங்கள் வேலைக்காக தேர்வு செய்துள்ளன என்று விளம்பரம் செய்து தங்களது கல்வி நிலவரத்தை பெருக்கியுள்ளன. ஆனால் இத்தகைய வளாகத் தேர்வுகளில் தேர்வு செய்யப்ட்ட மாணவர்களுக்கு உண்மையிலேயே வேலை வழங்கப்பட்டுள்ளதா என்றால் பெரும்பாலும் இல்லை என்பதே பதிலாக உள்ளது.

இத்தகைய மோசடியின் கொடூர சாட்சியாக சென்னை டு ரூ வு ஐகெழவநஉh எனும் பன்னாட்டு நிறுவனம் உள்ளது இந்த நிறுவனம் 2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில் பல்வேறு கல்லூரிகளில் கேம்பஸ் இ;ன்டர்வியூ என்ற பெயரில் 5000-க்கும் மேற்பட்ட மாணவர்களை வேலைக்காக தேர்வு செய்துள்ளது.

ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் படித்த மாணவி தெரிவித்தாவது 2014 அக்டோபர் 29, 30 ஆகிய இரு தினங்கள் தங்கள் கல்லூரியில் டு ரூ வு ஐகெழவநஉh நிறுவனம் நிறுவனம் நடத்திய வளாகத் தேர்வில் கலந்து கொண்டதாகவும் அந்நிறுவனம் நடத்திய ஐந்து சுற்றுகள் கொண்ட வளாகத் தேர்வில் கலந்து அனைத்து சுற்றிலும் முழுமையாக தேர்ச்சி பெற்றேன். இதனை உறுதி செய்யும் வகையில் டுரூவு ஐகெழவநஉh நிறுவனம் எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியது. அதில் எனது வேலையின் உறுதி சான்றிதழ் பயிற்சி குறிப்புகளும், சம்பள விபரங்களும் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனது கல்லூரிப் படிப்பை முடித்த நேரத்தில் டுரூவு ஐகெழவநஉh நிறுவனத்திலிருந்து மீண்டும் ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது அதில் எனது பல்வேறு சான்றிதழ்களை அந்நிறுவனத்தில் இணையதளத்தில் பதியுமாறு தெரிவித்திருந்தது. பணியில் சேர வேண்டிய நாள் பின்னர் தெரிவிக்கப்படும் எனவும்தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரையிலும் வேலையில் சேருவதற்கான அறிவிப்பு தரவில்லை என தெரிவித்தார்.
இம்மாணவி மட்டுமல்ல இதுபோல் இந்நிறுவனத்தால் கல்லூரி வளாகத் தேர்வுகளில் பணிக்கு தேர்;வு செய்யப்பட்டு இதுவரையிலும் வேலை வழங்கப்படாமல் ஏமாற்றப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 1500-க்கும் மேல். இது குறித்த இம்மாணவர்கள் தங்களது கல்லூரியில் முறையிட்டால் வளாகத் தேர்வுகளில் தேர்வு செய்வதோடு தங்களது பணி முடிந்து விடுவதாகவும், கல்லூரி படிப்பை முடித்த பின்னர் அந்த வேலை குறித்து தாங்கள் எவ்விதமான தலையீடும் செய்ய இயலாது என கூலாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஏற்கனவே டுரூவு ஐகெழவநஉh நிறுவனம் நடத்திய தேர்வில் வெற்றிபெற்று பணிநியமன ஆணை பெற்ற இம்மாணவர்கள் மீண்டும் ஒரு தேர்வை எழுதவேண்டுமென அறிவுறுத்தியது. ஏற்கனவே நீங்க்ள் நடத்தியதேர்வில் வெற்றிபெற்றதால் தானே பணிக்கு தேர்வு செய்தீர்கள். இப்போது மீண்டும் எதற்காக தேர்வு எழுதச் சொல்கிறீர்கள் என்று கேட்ட போது இது பணியில் சேரும் நாளை தீர்மானிப்பதற்காகத் தான் என்றும் இத்தேர்வில் எவ்வித நிராகரிப்பும் இருக்காது என உத்திரவாதமும் அளிக்கப்பட்டது. ஆனால் தேர்வு முடிந்த பின்னர் தேர்வு எழுதிய மாணவர்களில் 20 சதம் பேருக்கு மட்டுமே பணியில் சேர வேண்டிய நாள் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளது. மற்றவர்களின் பணி நியமண ஆணையை ரத்து செய்துள்ளது.

கல்லூரியில் படிக்கும் போதே பன்னாட்டு நிறுவனத்தில் வேலை கிடைத்து விட்டது என மகிழ்ச்சியடைந்த மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் இன்று துயரத்தின் உச்சத்திற்கே தள்ளப்பட்டுள்ளனர். கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் பணியில் சேரலாம். பல ஆயிரங்களாக கிடைக்கும் சம்பளத்தைக் கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் என்று கனவுகளை வளர்த்த இளைஞர்களின், இளம் பெண்களின் கனவுகள் சுக்குநூறாக்கப்பட்டிருக்கிறது. பணியில் தேர்வு செய்ததாக சொல்லி கடிதம் கொடுத்ததால் அம்மாணவர்கள் வேறு பணியில் சேரவும் முயற்ச்சிக்கவில்லை. தற்போது இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னர் உனக்கு வேலையில்லை போ என்று துரத்துகின்றனர். இதனால் அவர்கள் இப்போது வேறு நிறுவனத்தில் கூட சேர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்திய நாட்டு இளைஞர்களை மனிதர்களாக மதிக்காத அன்னிய நாட்டு நிறுவனத்தை கேள்வி கேட்க நம் நாட்டு ஆட்சியாளர்களுக்கு துப்பில்லை.

இதுவரையிலும் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்துக் கிடந்த இளைஞர்கள் வேறு வழியின்றி வீதியில் இறங்கி போராடத் துவங்கியுள்ளனர். வழக்கம் போலவே இடதுசாரி இயக்கங்கள் மட்டுமே இவர்களுடன் துணைநின்று போராடுகின்றனர்.

Related Posts