சினிமா தமிழ் சினிமா

”கெட்ட கனவில்” இணையும் தினமணியும் – வினவும்:

10955335_1068253103185293_8897482265572587809_n1

கபாலி சினிமா, வினவு விமர்சனத்தின் மீதான விமர்சனம்:

மனநல மருத்துவர் ஷாலினி:

ரஜினி படத்தில் பெண்களை இழிவுபடுத்தும் வசனம் இருக்கும். இதில் இல்லை. பா. ரஞ்சித் தனது அடுத்த பட்த்தில் கருப்பு பெண்ணுக்கு நாயகி வேடம் கொடுக்க வேண்டும்.

திருட்டு வணிகம்:

கட்டணக் கொள்ளைக்கு எதிர்வினையாக திருட்டு DVD-ல் படம் பார்ப்போம்.

பெரியாரிஸ்டுகள்:

பெரியார் படத்தை  காட்டியிருக்க வேண்டும்.

இப்படியான நேர்மறை விமர்சனங்கள் உண்டு. நாமும் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் ஒற்றைக் காட்சி கூட கபாலியில் ரசிக்க முடியவில்லை என்பதும், வினவில் விமர்சனம் என்ற பெயரில் வன்மத்தை கக்கியிருக்கிறது.

கபாலிக்கு முன்பான ரஜினியின் சினிமாக்கள் எப்படிப்படட்து. மூட நம்பிக்கை, பெண்களை இழிவுபடுத்துவது, ஆண்டான் அடிமை புத்தி, சிகரெட், இந்துத்துவ பண்பாட்டை வலிய திணிப்பது தான் கடந்தகால சினிமா வரலாறு.

வினவின் விமர்சகரே. கபாலியில் இப்படியான துர் காட்சிகள் இல்லை என்று கூடவா உங்களால் சொல்ல முடியாது அப்படி சொல்ல தவறியதற்கு வினவின் விமர்சகர் ரஜினியின் பழைய படங்கள் பார்க்காமல் இருந்திருக்க வேண்டும். அவ்வாறு இருக்க வாய்ப்பே இல்லை எனில் உங்களது விமர்சனம் வன்மம்தான்.

ஆதிக்க சாதிகள் கபாலியை கண்டு அடி வயிறு கலங்குவது புரிந்தது தான். வினவுக்கு ஏன் இந்த “காண்டு” செஞ்சிருவேன் ! மகிழ்ச்சி, பஞ்சுக்கும் வித்தியாசம் தெரியலையா  வினவுக்கு ரஜினி என்ற நடிகர் நீங்கள் ஏற்றுக் கொள்ள மறுத்தாலும் மக்களிடம் ஆளுமை செலுத்துகின்ற நடிகர் பார்ப்பன வெறியன் சோவும் அவனது வகையறாக்களும் ரஜினியை பயன்படுத்தி மக்களை பாழ்படுத்தியதற்கும் பா.ரஞ்சித் ரஜினியை பயன்படுத்தியதற்கும் ஓர் இம்மியளவு வித்தியாசம் வினவின் கண்களுக்கு புலப்படவில்லையா?

உங்களுக்கு புலப்பட தவறினால் உங்கள் ”பார்ப்பனிய பயங்கரவாத” அரசியல் பார்வை பழுது என்றே பொருள்.

பார்ப்பன தினமணிக்கு ”ரஜினி கை மாறியதால் எரிவது புரிந்து கொள்ள கூடியதுதான். இது வினவிற்கும் விளங்காத அரசியல் அல்ல. இருந்தும் என் கபாலியின் மீது இந்த கரடுமுரடான ”காண்டு”.

ரஜினியை பார்ப்பன விஷமாக இதுவரை பயன்படுத்தி வந்ததை பா.ரஞ்சித் முறியடித்திருக்கிறார். உணர மறுப்பதற்கு பின்னால் உள்ள வினவின் அரசியல் என்ன?

வினவே கொஞ்சம் அறிவையும், கண்ணையும் துடைத்துக் கொண்டு கபாலியை பாருங்கள்.

”ஆம்பளைக்கு அடங்கி நடக்குறவதான் பொம்பளை” என்ற வசனம் பேசிய ரஜினியின் வாயில் ”காந்தி சட்டையை கழட்டியதற்கும், அம்பேத்கர் கோட்டு போட்டதற்கும் பின்னால் அரசியல் இருக்கு” என்ற வசனம் பேச செய்தார் ரஞ்சித். ”போற்றிப் பாடடி பொண்ணே, தேவர் காலடி மண்ணே” ”எஜமான் காலடி மண்ணெடுத்து நெற்றியில் பொட்டு வச்சு இசைத்த, தோழர் மருதையனுக்கு பிடித்த இளையராஜா எங்கே? ”கலகம் செய்து கதை முடிப்பான் கபாலி” என்று பாட செய்த ரஞ்சித் எங்கே” எனவே “இருவரும் ஒருவரே தான்” என தாங்கள் அடம் பிடிப்பதும் வினவு படித்த மார்க்சிய மெய்ஞானம் இருவரையும் ஒரே தராசில் நிறுத்துகிறதென்றால் நீங்கள் கற்பதும், கற்பிப்பதும் மார்க்சிய மெய்ஞானம் அல்லவே.

ஃபில்ஹார்மோனிக் லிருந்து பண்ணைபுரம் வரை (புதிய கலாச்சாரம் அக். 1993) கட்டுரையின் இறுதியில் மருதையன் இப்படி முடித்திருப்பார்.

பண்ணைபுரம் தாழ்த்தப்பட்டவர்கள் . . . . . . . . . .  அவர்களுக்கு சிம்ஃபனி தெரியாது, புரியாது அவர்களுக்கு இப்போது தேவைப்படுவதெல்லாம் ஒரு மெட்டு 2 ஆயிரம் ஆண்டுகாலம் தங்களை அழுத்தும் சோகத்தை தாங்கள் அழுத்தி வைத்திருக்கும் கோபத்தை பகிர்ந்து கொள்ள ஒரு மெட்டு – ஹார்மனியில் ஒரு இழை.

எனக்கு என்னவோ தோழர் மருதையன் அவர்களின் கனவை சந்தோஷ் நாராயணன் இசையில் மெட்ராஸ் படத்தில் விழிப்பு இருந்தால் விரைவில் வரும் அந்த திருநாள். உழைக்கும் இனமே உலகை ஜெயித்திடும் ஒரு நாள் ”கலகம் செய்து ஆண்டையின் கதை முடிப்பான் கபாலி” பாடல்கள் மூலம் பா.ரஞ்சித் நிறைவு செய்திருக்கிறார் என்றே தோணுகிறது.

ரஜினியின் நடிப்பை பற்றி “ஒரு எட்டரை ஏக்‌ஷன்” என்று குறிப்பிடுகிறீர்கள். ரஜினி மனநிலை பிறழ்ந்த மனைவியை பாண்டிச்சேரி வீட்டில் சந்திக்கும் பொழுது கூட ரஜினியின் நடிப்பு ”எட்டரை ஏக்‌ஷனாக” தெரிகிறது என்றால் தயவு செய்து  தங்கள் ”கண் நிலை” ”மனநிலை” உணர்க.

”இந்த அக்கக்கா சிரிப்பு 10 முதல் 15 முறை வருது” அந்த காட்சியை யார் சிரிக்கிறீர்கள்?

நடிப்பாளுமையுள்ள ராதிகா ஆப்தேவையும் கலாய்ச்சிருக்கீங்க, ஸ்ப்பா—-முடியல

“இதற்கு மேல் கோட், சூட், அம்பேத்கர், காந்தி போன்ற தத்துவ விளக்கங்களை பொருட்படுத்த வேண்டும் என்று கோருவோருக்கு ஒரு பதில் உண்டு. Five Star ஹோட்டலில் நட்சத்திரப் பொங்கல் ஒரு உதாரணம்”.

அம்பேத்கர் திரைப்படம் இந்தியிலும், ஆங்கிலத்திலும் வந்த போது முன்னாள் முதல்வர் திரு. கருணாநிதி ambedkar2சட்டசபையில் தமிழில் மொழி மாற்றம் செய்தால் ரூ. 10 லட்சம் தருவோம் என அறிவித்து 10 ஆண்டுக்கு மேல் கிடப்பில் போடப்பட்டு பல்வேறு முயற்சிக்கு பின்பு உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சத்தியசந்திரன் பொதுநல வழக்கு தொடுத்து உயர்நீதிமன்ற உத்தரவிட்டு தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவந்து தமிழ்நாட்டின் அனைத்து முற்போக்கு இயக்கங்களும் “அம்பேத்கர்” திரைப்படத்தை கொண்டாடி தீர்த்தது. வே.மதிமாறன் அம்பேத்கர் பட வெளியீட்டு சிக்கல் குறித்து தனி நூல் எழுதி வெளியிட்டுள்ளார். பெரும் போராட்டத்திற்கு பின்பு வந்த “அம்பேத்கர்” திரைப்படத்திற்கே விமர்சனம் எழுதாத நீங்கள் பா. ரஞ்சித்தின் கபாலியை முழுமையாக கழுவி கழுவி ஊற்றுகிறீர்கள்.

அம்பேத்கார் திரைப்படத்திற்கு விமர்சனம் எழுதாதற்கும் கபாலி திரைப்படத்திற்கு விமர்சனம் எழுதியதற்கும் பின்னால் தங்களின் தவறான அரசியல் பார்வை உள்ளது.

வே. மதிமாறனின் பாரதிய ஜனதா பார்ட்டி நூலுக்கு விமர்சனம் எழுதிய தோழர். மருதையன் பாரதி எழுதியவற்றை விட எழுதாமல் இருந்ததில்தான் அவரது அரசியலை உணர முடியும் என்று எழுதினார்.

”வெல்லட்டும் உம் கழுவி ஊத்தும் திறன்

வெளங்கட்டும் உம் புரட்சி”  

தங்களுக்கு புரியும் மொழியில் சொல்வதானால் நாங்கள் ஏன் கபாலியையும், ரஞ்சித்தையும் ஆதரிக்கிறோம் என்றால், தங்களின் தூங்கறியா நடிக்கிறியா ரங்கநாதா—– பாடலில் இளையராஜா பறையன் கொடுத்த காசு மட்டும் இனிக்குதாடா ரங்கநாதா சோக்கு. சோக்குதான் என்ற கறுப்பு பார்ப்பனர் இளையராஜா போல் செய்யாமல் நான் பகுத்தறிவாளன் என்பதை நெஞ்சுயர்த்தி சொல்கிறார்.

சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக பொது வெளியில் அச்சமின்றி முழங்குகிறார். திரைத்துறையில் கிடைக்கும் மிகசிறிய இடத்திலும் நுணுக்கமாக சாதி எதிர்ப்பை பதிவு செய்கிறார்.

திரைப்படத்திற்கு வெளியே நடக்கும் பேட்டிகளில் ஆராய்ச்சி மாணவர் “ரோஹித் வெமுலா” தற்கொலையை, குஜராத்தில் மாட்டுத்தோலை உரித்த தலித்துகள் தாக்கப்படுவதை சமரசமின்றி ஊடகம் வாயிலாக எதிர்ப்பது உங்கள் பார்ப்பன் பயங்கரவாத அரசியலுக்கு வலு சேர்க்குமே? இருந்தும் நீங்கள் எதிர்ப்பது தான். ஆழ்நிலை மார்க்சிய அறிவா” என்ன?

மாட்டுத் தோலை உரித்தால், மனித தோலை உரிக்கும் இன்றைய நிலையில்  தமிழ் சினிமா  100 ஆண்டுகள் நிறைவடைந்த சூழ்நிலையில் ஓர் படத்தில் கூட   மாட்டுக்கறி குறித்து வசனம் வந்தது இல்லை.

பா.ரஞ்சித் முதல் படமான அட்டக்கத்தியில் ”என்ன கறி என்று கேட்கும் போது மாட்டுக்கறி தான் சமைப்பே

Pa.Ranjith @ 8th Annual Edison Awards 2015 Photos

Pa.Ranjith @ 8th Annual Edison Awards 2015 Photos

வேறென்ன கறி” என வசனம் இடம் பெற செய்தார்.

இந்து புராணங்கள் தொடங்கி தமிழ் சினிமா வரை கதாநாயகர்களை அநாதையாக கூட காட்டுவார்கள் தலித்தாக காட்ட மாட்டார்கள் என்ற கதை பிம்பத்தை உடைத்து தலித் கதாநாயகர்களை தொடர்ந்து பிறக்க செய்தார்.

நாங்கள் இதற்காக தான் அவரையும், அவரது சினிமாவையும் விரும்புகிறோம். ஆதரிக்கிறோம். கொண்டாடி மகிழ்கிறோம்.

தினமணி வகையறாக்கள் மக்களுக்கு கருத்து சொல்லும் உரிமை மனிதர்ம காலம் தொட்டு மறுகாலனிய தற்காலம் வரை தமக்கு மட்டுமே உண்டு என்ற அகங்காரத்தில் கோரமாக எழுகிறது. ரஜினி என்ற பேருருவம் மக்களின் உளவியலில் செய்யும் ஆளுமையை நன்கு உணர்ந்து சகிக்க முடியாமல் ”ஆதிசேஷன் விஷத்தை’ ரஞ்சித் மேல் கக்குகிறது. தினமணி கார்டூன் புத்தனின் மருவிய உருவம் கபாலியை திருடன் கார்ட்டூன் போட்டு        வரலாற்று வஞ்சத்தை தீர்த்துக் கொள்கிறது. இந்துத்துவத்திற்கு எதிரான வர்க்க அணி சேர்க்கையில் தலித்துகளை பரந்து பட்ட பாட்டாளிகளுடன் இணைக்க வேண்டிய வினவே மார்க்சிய விமர்சனம் என்ற பெயரால் “கபாலியை” கேலி செய்து இகழ்ந்து மகிழ்கிறது. அதுவும் மார்க்சியத்தின் பெயரால் இந்த விசித்திரம் நிகழ்கிறது.

நாங்கள் சிரமப்பட்டாவது வினவுடன் இருக்க விரும்புகிறோம். நீங்கள் சிரம்மே இல்லாமல் பா.ஜ.க பக்கம் தள்ளி விடுகிறோர்கள்.

தினமணி “லோ பட்ஜெட் அடித்தட்டு சிந்தனை என்ற பார்ப்பன வக்கிரத்துடன் ”தலைமுடியை விரித்து போட்டு” வரிந்து கட்டி எழுகிறது.

பார்ப்பன பயங்கரவாத ஒழிப்பே என் உயிர் மூச்சு என முழங்கும் வினவும் சேர்ந்து ஐக்கியப்பட்டு எதிர்ப்பது, எதிர்காலமும் இருண்ட காலமாக விரியும் ”கொடுங்கனவு” எம்மை அச்சுறுத்துகிறது. தீட்டாளியின் படைப்பை பார்ப்பன தினமணி ஏசுது, புரிகிறது. பாட்டாளி வர்க்க வினவு ஏன் தாறுமாறாக எழுதுகிறது.

வினவே தங்கள் அரசியலில் விதிவிலக்காக.

“28 ஆண்டுகள் S.P. பிரேம்குமாரை எதிர்த்துப் போராடிய நல்லகாமன் சங்கர ராமன் கொலையாளி . . . . . . . .  A1 ஜெயேந்திரனின் கைதின் போது   S.P. பிரேம்குமாரின் ”மனித உரிமை” மீறவில்லை என்றீர்கள். டாஸ்மாக் பிரச்சனையில் தனது கட்சியில் உள்ள யாருக்கும் சாராய கம்பெனி இல்லை என சொன்னதை ”நம்பி” கருணாநிதியையும் ஆதரித்தீர்கள்.

கள்ளு பிரச்சனையில் நல்ல மவுனம் தொடர்வது தனிக்கதை.

RSS பா.ஜ.க வுக்கு எதிராகவும், சூழல் சீர்கேடு செய்யும் சேது திட்ட்த்தை ராமர் பாலம் உடைப்பையும் ஆதரித்தீர்கள். சிதம்பரம் சிற்றம்பலத்தில் பக்தர் ஆறுமுகசாமியை பாட செய்த தில்லை சமரில் முன்னாள் பா.ம.க வேல்முருகனுடன் கை கோர்த்தீர்கள்.

விதிவிலக்காகவே நாங்களும் பா.ரஞ்சித்தின் ”கபாலி ரஜினியை ஆதரிக்கிறோம்.

விதிவிலக்கு வினவுக்கு மட்டும் பொருந்தும்? இன்னும் வெளிப்படையாக சொல்வதானால் அர்த்தம் செறிந்து விரிந்த பொருளுடைய அரசியலை குறைந்த வார்த்தைகளில் சொல்வதானால் பா.ரஞ்சித் மீது நாங்கள் கொண்டுள்ளது ”சாதிப் பாசமல்ல” சாதி ஒழிப்பு பாசம்.

தென் மாவட்ட கலவரங்களின் போது

“சாதி சங்கங்களை தடை செய்” என போஸ்டர் ஒட்டினீர்கள் தலித்களும் முற்போக்காளர்களின் எதிர்வினைக்கு பின்பு

”ஆதிக்க சாதி சங்கங்களை தடை செய்” என உங்கள் அரசியல் நிலைபாடு மாறியது.

ஆதிக்கவாதிகள் ரஜினியை சீரழித்த போது,

“ரஜினி கழிசடை நாயகன்” தான் ஏசலாம் தவறில்லை

தீட்டாளி ரஞ்சித் ரஜினியை எதிர்திசையில் பேச விடாமல் தடுத்த போதும் ரஞ்சித்தை நொறுக்குதீனி சீன் பிடிப்பது  என ஏசுவது கூசுகிறது.

உங்கள் மட்டரகமான ரசனையின் மட்டம் மட்டுமே தெரிகிறது.

காசி தியேட்டர் ரஜினி ரசிகர் அனுபவம் முதல் காக்னிசெட் ரசிகர் வரை உங்கள் கபாலிக்கு எதிரான அரசியலை ஆதரித்த ரசிகர் பட்டாளத்தை கக்கத்தில் பிடித்து இழுத்து வந்து இறுதியில் முடித்திருக்கிறீர்கள் நன்று.

வெளியாகி 6 நாட்களில் 300 கோடி ரூபாய் ஈட்டிக் கொடுத்த படத்தை ”தினமணி: தோல்வி என்கிறது.

நீங்களும் 1000 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கிய அண்ணாச்சி திருப்பி கொடுக்க ஆளை தேடிய கதையை சொன்னீர்கள்.

வினவு புரட்சியும்-பார்ப்பனியமும் ”தோல்வி படம் என விமர்சித்ததை மக்கள் “பீச்சாங்கையில்” தள்ளி விட்டு வெற்றிப்படமாக கபாலியை மாற்றியிருக்கிறார்கள்.

வினவு புரட்சியமும் பார்ப்பனியமும் ”மக்கள் விரோதமாக” இருந்திருக்கிறது.

மேற்படி வணிகமும் எனக்கு “பீப் பிரியாணி – சிக்கன் பிரியாணி” வியாபாரத்தை உணர்த்துகிறது. 1 கிலோ சிக்கன் ரூ. 160 1 ப்ளேட் சிக்கன் பிரியாணி விலை 80 முதல் 100 வரையில் விற்கிறது. பீப் 1 கிலோ 240 1 ப்ளேட் பீப் பிரியாணி  50 முதல் 70 வரை மட்டுமே விற்கிறது.

பீப் பிரியாணி விலையை தீர்மானிப்பது “சந்தை நிலவரம்” அல்ல வர்ணாசிரம கருத்து.

கபாலி படத்தின் ”சந்தை நிலவரத்தை” தீர்மானிப்பதும் ”தினமணியும் – வினவும்” இரண்டிடமும் நிலவும் கருத்து தான் தவிர சந்தை நிலவரமல்ல.

உயர்நீதிமன்ற முற்றுகை போராட்டம்

கடந்த 25.07.2016 ம் தேதி HRPC தோழர்கள் ராஜீ, மில்டன் உள்ளிட்ட தோழர்கள் மேடை சூழ இருந்த போது நமக்கு விருப்பமான உங்கள் கருத்துக்கு எப்போதும் இசைவான வழக்குரைஞர் திருமலைராஜன் அவர்களை சமூக நீதி வழக்குரைஞர் தோழர்கள் பா.ப. மோகன் தன் நீண்ட உரையின் இறுதியில்

எங்களின் கபாலி திருமலைராஜன் என்றும்

நெருப்புடா நெருங்குடா பார்ப்போம்

நெருங்குனா பொசுக்குற கூட்டம்

என்றே முழங்கினார்.

இதுதான் பா.ரஞ்சித்தின் கபாலி ”பாசிடிவ் பஞ்ச்”

மகிழ்ச்சி

– மு.கார்க்கி

9443064416

Related Posts