அரசியல்

கெஜிரிவால் அரசியல் சில கேள்விகள்……

//////முதலில் ‘இது ஒரு சாமானியனின் எழுச்சி; இந்தியாவில் ஒரு சாமானியன் நினைத்தால், என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதற்கு உதாரணம் கெஜ்ரிவால்’ என்ற கூற்றே அபத்தமானது. டெல்லியின் அதிகாரவர்க்கப் பின்னணியில் வெளிவந்தவர் கெஜ்ரிவால். ‘மகசேசே’ விருதுக்குப் பின் ஊடகங்களுக்கும் மிக நெருக்கமானார். அண்ணா ஹசாரே இயக்கப் போராட்டங்களில் ஊடகங்கள் என்ன ஆட்டம் ஆடின என்பது நமக்குத் தெரியும். கிட்டத்தட்ட அந்தப் போராட்டங்களைத் தேசிய ஊடகங்கள் பின்னின்று இயக்கின. அண்ணா ஹசாரே மவுசு போன பிறகு, கெஜ்ரிவாலை அவை வாரி அணைத்தன. ஓராண்டுக்கு முன் இதே காலகட்டத்தில், ராபர்ட் வதேரா, சல்மான் குர்ஷித், நிதின் கட்காரி என்று வாரம் ஒரு தலையின் முறைகேடுகளை அம்பலப்படுத்தியபோது, நாட்டின் 24 மணி நேரச் செய்தித் தொலைக்காட்சிகள் எந்நேரமும் கெஜ்ரிவாலே கதி என்று கிடந்ததும் அவருடைய போராட்டங்கள் பலவும் ஊடகங்களுக்குத் தீனி போடும் வகையில் வடிவமைக்கப்படுவதும் இங்கு நினைவுகூரத் தக்கவை. எப்படியும் அரசியல் வர்க்கம் நினைத்தவுடன் தூக்கி உள்ளே போடும், காணாமல் ஆக்கும் ஒரு சாமானியர் அல்ல கெஜ்ரிவால்.///////////////

இது நேற்றைய தமிழ் இந்து நாளிதழில் சமஸ் எழுதிய கட்டுரையிம் ஒரு பகுதி… மிகவும் சிறப்பான பதிவு அது. சமஸ் உடன் இணைந்து சில கேள்விகளை நாமும் கேட்கலாம்.

  • எந்த கார்ப்ரேட் நிறுவனங்களையும் கெஜ்ரிவால் கேள்விக்குள்ளாகாமல் இருப்பதில்தான் அவரது விளம்பர சூட்சுமம் அடங்கி இருப்பது உண்மைதானே?
  • எவ்வித அடிப்படை மாற்றத்தையும் முன்வைக்காமல் இருந்ததுதான் அவர் வெற்றிக்கு அடிப்படை என்பது நிஜம்தானே?
  • மிக எளிதாக புரட்சிகரமாக தோற்றம் அளிக்கும்  கேள்விகளை முன்வைத்து  இளம் தலைமுறையினரை தீவிர அரசியலிலிருந்து வெளியே தள்ளி வைப்பது மோசமான அரசியலின் முன்னுதாரணம் இல்லையா?
  • தேசத்தில் உள்ள அடிப்படை பிரச்சனைகளை தேர்தல் பொது விவாத்திலிருந்து தள்ளி வைத்து ஊழல் ஊழல் சார்ந்தும் மட்டும் பிரச்சனைகளை அனுகுவது (ஊழல் முக்கியமான பிரச்சனையெனினும்) இது யாருக்கு உதவும்?
  • “உலகிலேயே சிறந்த குடிமக்கள் நம்மவர்கள். அரசியல்வாதிகள்தான் கெடுக்கிறார்கள்” என்ற கெஜ்ரிவாலின் கூற்று ஊழலின் குவிமையமாக அரசியல்வாதிகளை மட்டும் குறிவைத்து ஊழலின் ஊற்றுக்கண்ணான கார்ப்ரேட் நிறு‍வனங்களை தப்ப வைக்கும் முயற்சியாக தெரியவில்லையா?

செய்தியும் சில கேள்விகளும்- 1

Related Posts