சினிமா மாற்று‍ சினிமா

குற்றமே தண்டனை – விமர்சனம்

எது தேவையோ அது தர்மம் vs  நல்லதை செய், ஒரு தனி மனிதனிடத்தில் நிகழும் இந்த இரண்டு நியதிகளுக்கிடையேயான போரும் விளைவுமே குற்றமே தண்டனை.

யாருக்கும் எந்த கெடுதலும் செய்யாத விதார்த் தனது ‘பார்வை குறைபாட்டிலிருந்து விடுபடுவது’ என்ற தர்மத்திற்காக, ஒரு கொலையை பார்ப்பதன் மூலம் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி அதர்மங்களை மேற்கொள்ள ஆரம்பிக்கிறார். தனது அப்பாவித் தனத்திலிருந்து மாறி மெள்ள குற்றவாளியாக பரிணமிக்கிறார்.

தனது தேவைக்காக அறமற்ற செயல்களைச் செய்ய ஆரம்பிக்கும் ஒரு சராசரி மனிதன். பின்னர் அதனில் ஒரு profession நிலையை நோக்கி பரிணமிக்கும் process ஐ நுட்பமாக செதுக்கியிருக்கிறார் இயக்குநர். விதார்த் அந்த transformation ஐ அவ்வளவு Matured ஆக செய்திருக்கிறார்.

விதார்த் எந்த நோக்கத்திற்காக குற்றவாளி அவதாரம் எடுத்தாரோ, அந்த நோக்கத்தின் மீது வாழ்க்கை என்ன முடிவை தீர்மானிக்கிறது? தீயது செய்தால் தீயது என்றெல்லாம் வாழ்க்கை முடிவுரை எழுதுவதில்லை. மாறாக அறமற்ற செயல்களுக்கான தண்டனை நம்மிடமிருந்தே நமக்கு பெறப்படுகிறது.

2*2=4 போன்ற formulaக்கள் இல்லாத, திட்டமிட்டு நேர்கோட்டில் பயணிக்காத  வாழ்க்கைத் தன்மையை அந்த எதார்த்ததோடே திரைக்கதைப் படுத்தியுள்ளார் மணிகண்டன்.

இப்படி செய்தால் இப்படி நடக்கும் போன்ற பால்ய புரிதல்களை தகர்த்தெறிகிறது வாழ்வின் எதார்த்தங்கள். அப்படியெனில் இந்த நேர்கோடற்ற பயணம், எங்கு எப்படி தன் அறத்தின் கரங்களை நம்மை நோக்கி நீட்டுகிறது?

அந்த கரங்கள் நல்ல மனிதர்களுக்கு அவர்களுக்குள்ளிருந்தே எழுகிறது.

ஒரு அழகான குறுநாவலை திரையில் உணர்ந்த அனுபவத்தை அளிக்கிறது குற்றமே தண்டனை.

தேவைகள், அது தீர்மானிக்கும் அறங்கள், அதிலெழும் முரண்கள் என மனித மனங்களின் Gray pages ஐ படம் பிடித்துக் காட்டும் தேரந்த இலக்கியத்தை காட்சியின் மொழியில் வழங்கியிருக்கிறது குற்றமே தண்டனை.

கொஞ்சமும் மிகை செய்திடாத காட்சியமைப்புகள், ஆர்ப்பாட்டம் இல்லாத த்ரில் நகர்வு, விதார்த் உள்ளிட்ட அனைவரது ஆழ்ந்த நடிப்பு (special hats off to Vidharth and Aishwarya), கச்சிதமான ஷாட் தேர்வுகள், subtle ஆன இசை என the real art of cinema.

டங் டொங்குனு காது கிழியுற இசையோடு, கிராஃபிக்சில் அடியாளின் எலும்பு முறிவதை காட்டுகிற தமிழ் சினிமாவின் கன்றாவிகளிலிருந்து, தமிழ் சினிமாவையும் ரசிகர்களின் மனதையும் மீட்டெடுக்கும் தேவதைகள் அவ்வப்போது வருவதுண்டு.

‘குற்றமே தண்டனை ‘ அப்படியொரு தேவதைதான்.

சாமான்ய ரசிக மனதில் இப்படம் எவ்வகையான தாக்கத்தை நிகழ்தப் போகிறது எனத் தெரியவில்லை. ஆனால், நல்ல சினிமா ரசிகர்கள் நிச்சயம் ஆதரித்து கொண்டாட வேண்டிய படம். சில முரண்கள் உண்டுதான் படத்தில். ஆனால், முதலில் நிஜ சினிமாவை நோக்கிய இந்த அடுத்தக் கட்ட  உடைப்பு கொண்டாடப்பட வேண்டியது.

Related Posts