புதிய ஆசிரியன்

காவலன் காவான் எனின்…

You added 3 new photos.
1 min ·
`என்கவுண்டர் என்ற பெயரில் 20 தமிழர்கள் ஆந்திராவில் கொல்லப்பட்டது தமிழகத்தைப் பதற வைத்திருக்கிறது. இந்தியக் காவல்துறை பணக்காரர்களிடம் கைகட்டி சேவகம் செய்கிறது; மத்தியதர வர்க்கத்தினரை உதாசீனப்படுத்துகிறது; ஏழை எளியவர் களிடம் கொடூரமாக நடந்துகொள்கிறது – காவல்துறையின் செயல் பாட்டை இப்படி ஒளிவுமறைவின்றி அப்பட்டமாக விமர்சித்திருப்பது காவல்துறை ஆணையமே நியமித்த ஒரு உயர் காவல்துறை அதிகாரி யின் அறிக்கை. இதைத்தான் ஆந்திரக் காவல்துறை சேஷாசலம் காடு களில் செம்மரங்களை வெட்டுவதற்காக ஆசைகாட்டி அழைத்துச் செல்லப்பட்ட மலைவாழ் தமிழர்களைக் கொன்று குவித்து நிரூபித்துள் ளது. இவர்கள் இழைத்த குற்றத்திற்கும், கிடைத்த தண்டனைக்கும் இடையில் சூதும் வாதும் நிறைந்த செம்மரக் கடத்தல் வணிகம் செய்யும் மிகப் பெரிய கொள்ளைக் கும்பல் உள்ளது. தமிழகத்தின் வடமேற்கு மாவட்டங்களில் தங்கள் வாழ்வாதாரங்களை எல்லாம் இழந்து வறுமையில் வாடும் அப்பாவி வனவாசிகள் வாழ்தல் வேண்டி ஆந்திர மாநிலத்தில் உள்ள காடுகளுக்கு வெறும் சில நூறு ரூபாய் தினக்கூலிக்காக அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இவர்களின் வாழ்வினை மேம்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கைகளும் எடுப்பதில்லை. இதன் விளைவாகவே இவர்கள் செம்மரக் கடத்தல் கும்பல்களின் கைகளில் சிக்கிச் சீரழிகிறார்கள். இவர்கள் வெட்டும் செம்மரங்களை சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அனுப்பி டன் ஒன்றுக்கு நாற்பது, ஐம்பது லட்சங்கள் சம்பாதிக்கும் கொள்ளைக் கும்பல்களுக்கு சமூகத்தில் நாம் கொடுத்துள்ள பெயர் ஏற்றுமதியாளர் கள். நாட்டிற்கு அந்நியச் செலாவணி ஈட்டுபவர்கள். இவர்கள் கௌர விக்கப்படுவார்கள். ஆனால் நீண்ட இந்தக் கொள்ளை வணிகத்தின் கடைசிச் சங்கிலியான ஏழை உழைப்பாளி மக்கள் என்கவுண்டர்கள் என்ற பேரில் சுட்டுக் கொல்லப்படுவார்கள். இன்னும் எத்தனை காலம் தான் காவல்துறையினர் ஏழை எளிய மக்களின் உயிர்களை ஈவு இரக்க மின்றி பறிப்பார்கள்? குற்றவாளிகளைப் பிடிப்பதற்குத்தான் இவர்களுக்கு அதிகாரமே தவிர தண்டனை தருவதற்கல்ல. வல்லான் வகுத்ததே அறம் என்றால் நீதி மன்றங்கள் எதற்கு? சட்ட மன்றங்கள் எதற்கு? காவலன் காவான் எனின் காவல்துறைதான் எதற்கு? இந்தக் கேள்வி களுக்கெல்லாம் விடைகள் கிடைக்க வேண்டுமானால் இது குறித்த பாரபட்சமற்ற விசாரணை மத்திய அரசால் நடத்தப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆசிரியர் குழு

Related Posts