இதழ்கள் புதிய ஆசிரியன் மார்ச் 2015

காரணங்களைக் கண்டறியாமல் தீர்வைக் கண்டுபிடிக்க முடியாது

தமிழகத்தில் அண்மைக் காலத்தில் சுமார் 1000 அரசுப் பள்ளி கள் மூடப்பட்டுள்ளன. சென்னை மாநகரில் இருந்த 300 மாநகராட்சிப் பள்ளிகளில், 22 பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன. அப் பள்ளிகளில் 1,20,000 ஆக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை 85,000 ஆகக் குறைந்துவிட்டது. சென்னையில் ஏழு மாநகராட்சிப் பள்ளிகளைத் தனியாரிடம் ஒப்படைக்கப் போவதாகச் செய்திகள் வந்தன. அதற்குக் கடுமையான எதிர்ப்பு எழுந்ததை அடுத்து அம் முடிவு தள்ளிவைக்கப் பட்டிருக்கிறது. ஆங்கிலவழிக் கல்வியை அறிமுகப்படுத்தினால் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரித்து விடலாம் என்று கருதிய அரசு இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலவழி வகுப்புகளைத் தொடங்கியது. ஆனால் 2013-14, 2014-15 மானியக் கோரிக்கை அறிக்கையின்படியே மாணவர் எண்ணிக்கை 55,774 குறைந் துள்ளது. இதிலிருந்து தெரிவது என்னவெனில் அரசுப் பள்ளிகளில் உள்ள தமிழ்வழிக் கல்வி வகுப்புகளிலிருந்து ஆங்கிலவழிக் கல்வி வகுப்புகளுக்கு மாணவர்கள் மாறியிருக்கிறார்களே தவிர, புதிதாக மாணவர்கள் சேர்ந்துவிடவில்லை. அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவதற்கான உண்மையான காரணங் களைக் கண்டறியாமல் இதற்குத் தீர்வைக் கண்டு பிடிக்கவும் முடியாது. அரசுப் பள்ளிகளில் பரிசோதனைக் கூடம், குடிநீர் வசதி, கழிப்பிடம், நூலகம், விளையாட்டு மைதானம் போன்ற அடிப்படை வசதிகள், ஆசிரியர் பற்றாக்குறை, கற்பித்தல் குறைபாடுகள், பணிக்கலாச்சாரத்தை nம்படுத்த முயற்சிகள், ஆங்கிலத்தை மொழியாகக் கற்பிக்க சிறப்பான ஏற்பாடுகள், அரசுப் பள்ளிகளில் மழலையர் பள்ளிகள் போன்ற பல அம்சங்களில் அரசின் தலையீடு இருந்தால்தான் நிலைமையைச் சீர்செய்ய முடியும். அரசுப் பள்ளிகளில் தங்களது சிறப்பான சேவை மூலம் மாணவர் கள் எண்ணிக்கையை அதிகரித்துக் காண்பித்துள்ள ஆசிரியர் களையும் தலைமை ஆசிரியர்களையும் அரசு அங்கீகரித்துப் பாராட்ட வேண்டும். இன்றும் ஏழைக் குழந்தைகளுக்கு அரசுப் பள்ளிகளே புகலிடமாக இருக்கின்றன என்பதை ஏழைகளின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்துள்ள அரசுகள் உணர் வார்களா?

Related Posts