இதழ்கள் இளைஞர் முழக்கம்

கல்வி நிலையங்களில் பெண்கள் எதிர்க்கொள்ளும் சவால்கள் – வசந்தி

கல்வி நிலையங்களில் பெண்கள் எதிர்க்கொள்ளும் சவால்கள் – வசந்தி

                இந்தியாவில் ஏழை எளியவர்களுக்கு கல்வி என்பது சாத்தியமற்றதாக இருக்கும் போது பல பெண்களுக்கு கல்வி இன்றும் எட்டா கனியாகவே இருந்து வருகிறது. பெண்கள் ஒவ்வொருவரும் வளரும் போதும் பாலியல் பொருளாகவே பார்க்கப்படுகிறார்கள். பெண் என்பதாலேயே எல்லா தளங்களிலும் பாதிப்புக்குள்ளாக்கப்படுகிறார்கள்.

குறிப்பாக இந்தியாவில் பெண் கல்வி மறுக்கப்பட்ட காலகட்டத்தில் அப்போது சாவித்திரி பாய் பூலே, முதல் பெண் பொதுப் பள்ளியை உருவாக்கினார். அதே போல சமஸ்கிருதம் பெண்கள் படிக்க கூடாது எனும் மனுநீதி கடந்து, தடைகளை மீறி வாசித்து கற்று பண்டிதரானார் ராமபாய், பழங்குடியினர்கள், தேவதாசிகள் மற்றும் பாலியல் தொழிலாளிகளின் குழந்தைகள் கல்வி கற்க பாடசாலை தொடங்கியவர் டாக்டர் முத்து லட்சுமி ரெட்டி இவர்களை போன்றவர்கள் பல ஆபத்துகளை கடந்து தடைகளை மீறி எழச்சிமிகு போராட்டங்கள் நடத்தி பெண் கல்வியை வலியுறுத்தி வந்தனர் இதுபோன்ற வீரம் செழிந்த வரலாற்றில் பெரும் பகுதியில் பெயற்றவர்களாக வலம் வருபவர்கள் பெண்களே.

பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும், பாரினில் பெண்கள் நடத்துவர் என பாரதி முழக்கமிட்டபடி, இன்று பல பெண்கள் தடைகளை முறியடித்து வெற்றிப்பெற்று வருகிறார்கள் இவ்வாறு பல்வேறு தடைகளை கடந்து முன்னேறி வரும் பெண்களுக்கு வன்முறையானது எல்லா தளங்களிலும், பல்வேறு வடிவங்களில் நீக்கமற நிகழ்த்தபடுகின்றன. அவை பெண் கருக்கொலை தொடங்கி, கல்வி நிலையங்கள், பணியிடங்கள் மற்றும் குடும்ப வன்முறை என பல வடிவங்களில் வன்முறைகள் நிகழ்த்தப்பட்டு வருகிறது. இப்படி பெண்களின் வாழ்வாதரங்களை பறிக்கின்ற வன்முறைகள் சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற ஒரு சாதாரண நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

பெண்கள் தான் விரும்பும் கல்வியையோ துறையோ தேர்ந்தெடுக்க தகுதியற்றவர்களாக இந்திய சமூகம் உருவாக்கியுள்ளது. இச் சமூகத்தில் ஒரு பெண் பொறியாளர், கப்பல் பணியாளர், ஓவிய ஆசிரியர், புகைப்படக்கலைஞர், பத்திரிக்கையாளர் மற்றும் இராணுவ வீராங்கணை என தான் என்னவாக வர வேண்டும் என்ற தன் விருப்பங்களை வெளிபடுத்த முடியாத நிலையே உள்ளன. காரணம் சமூகத்தில் பெண் கல்வி என்பது அவசியமற்றதாகவும், ஆண்களுக்கு மட்டுமே கல்வி என்பது முக்கியதுவமாக கருதப்படுவதாலும் நிகழ்கிறது. சுதந்திரமான சூழல் பெண்களை காட்டிலும் ஆண்களுக்கே அதிகம் உள்ளது என  இந்திய சமூகம் கூறுகிறது.

கல்வி நிலையங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் இரு முக்கிய சவால்கள் முதலாவதாக அவர்களுக்கென கழிப்பிட வசதி பல அரசு மற்றும் தனியார் கல்வி நிலையங்களில் இருப்பதில்லை. அவ்வாறு இருக்கும் கழிப்பிடங்கள் பயன்படுத்த முடியாமல் தகுதியற்ற நிலையில்தான் உள்ளது. பெண் மாணவர்கள் தங்கள் மாதவிளக்கு நேரங்களில் சொல்ல முடியா துயரத்திற்க்கு ஆளாக்கப்படுகிறார்கள். இதனாலேயே பல பெண்கள் தங்கள் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திவிடுகிறார்கள். பெண்கள் பள்ளியை தொடர முடியாத நிலைக்கும் தள்ளப்படுகிறார்கள்.

இரண்டாவதாக கல்வி நிலையங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் ஆசிரியர்களாலும், சகமாணவர்களாலும் நடத்தப்படுகிறது. ஆசிரியர்கள் நல்ல பெற்றொர்களாக கல்விநிலையங்களில் இருக்க வேண்டும். ஆனால் சில ஆசிரியர்கள் காம வெறியர்களாக மாறி  வேலியே பயிர்களை மேய்வது போல் ஆசிரியர்களே படிக்க வரும் பெண் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்களை தொடுத்து வருகிறார்கள்.

சர்வதேச அமைப்பான சீடா கமிட்டியின் பொது தீர்மானம் எண் 19 ஐ, 1992 ஆம் ஆண்டு பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான தீர்மானமாக நிறைவேற்றி உடல்ரீதியாக, மனரீதியாக, உளவியல் ரீதியாக தரப்படும் எல்லா விதமான வன்முறைகளையும் சேர்ந்தே பெண்கள் மீதான வன்முறை என பார்க்கப்படுகிறது.

உலகின் மொத்த மக்கள்தொகையில் 759 மில்லியன்  எழுத்தறிவு பெறாதவர்களாக உள்ளனர். உதாரணமாக இந்தியாவில் ஓன்றாம் வகுப்பில் அடியெடுத்து வைக்கும் 100 ஆண் குழந்தைகளில் 39 குழந்தைதான் எட்டாம் வகுப்பவரை பள்ளியில் தக்க வைக்கப்படுகின்றனர்கள். அதிலும் 23 குழந்தைகள் மட்டுமே பத்தாம் வகுப்புக்கு அடியெடுத்து வைக்கின்றனர். இதே 100 பெண்குழந்தைகளில் வெறும் 17 குழந்தைகளே எட்டாம் வகுப்புவரை போகிறார்கள். கல்லூரிக்கு மூன்று பேர்தான் அடியெடுத்து வைக்கிறார்கள்.

இன்று உலகளவில் பெண் கல்வி என்பது மேலே கூறியதைவிட மிக மோசமாக உள்ளது. பெண்கள் அடிமைகளாக வீட்டு வேலைகள் செய்வதையே தீவிரமாக ஆதரிக்கின்றனர். ஆப்பிரிக்காவின் சகாரா பாலைவன நாடுகளில் 17 மில்லியன் பெண் குழந்தைகள் கல்விக்கூடமே சென்றதில்லையாம், யேமனில் ஆப்கானில்தான் தொடங்ககி சோமாலியா வரை ஏறக்குறைய 40 நாடுகளில் கல்வி உரிமை மனுக்கப்பட்ட பெண்குழந்தைகளின் குமுறல்கள் வெளியே கேட்பதில்லை. மொத்த பெண் குழந்தைகளில் பள்ளியில் பதிவானது 14 பேர்தான் மீதம் 86 சதம் பெண்களுக்கான கல்வி உலக கல்வி தரத்தில் 147 வது இடத்தில் உள்ளன. கடந்த ஆண்டுகளில் மூன்று மில்லியன் பெண் குழந்தைகள் பாடப் புத்தகத்தை தொடுவதே பாவம் என விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.

பெண்களான நாங்கள் பொதுப் பள்ளிகளில் கல்விகற்க கூடாது என்று உத்தரவிடவும், தடைசெய்யவும் தலிபான்களுக்கு எந்த உரிமையும் கிடையாது என்றும் கல்வி என்பது அனைவரின் அடிப்படை உரிமை என இந்த செவிட்டு உலகத்திற்கு கேட்கும்படி வெறும் 12 வயதாக இருக்கும் போது உறக்க கூரியவள் மலாலா,  மலாபலாவின் எதிர்வினை பல தலைமுறைகளாக கல்விக்காக  கோடிக்கணக்கான பெண்களின் குறலாக பார்க்கப்பட்டது.

இன்றும் மலாலா போன்று பல பெண்கள் கல்விக்கான பல போராட்டங்களை நாள்தோறும் நடத்திக்கொண்டுதான் வருக்கிறார்கள். இந்திய சமூகத்தில் ஒரு பெண்ணை ஒரு முழுமையான மனுஷியாக பார்க்காமல், அவளை ஒரு உடலாக பார்க்கும் பார்வை மிகவும் அதிகமாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் பெண்களை சந்தைப்படுத்திய தற்காலப் பொருளாதார அரசியல் நிலைமைகளே. பெண்கள் முன்னேறுவதற்கான சூழல தானாக உருவாகாது மலாலா போல ஆயிரம் மலாலாக்கள் இந்திய மண்ணில் மலரும் போதும், பெண் கல்வி சமுத்துவத்தை வலியுறுத்துகிற அரசியல் மாற்றம் ஏற்படும் போது மட்டுமே சாத்தியமாகும், சாத்திய மற்றத்தை சாத்திய மாக்கும் கலை தான் அரசியல் அந்த அரசியலை முன் கை எடுத்திட வேண்டும்.

Related Posts