இதழ்கள் இளைஞர் முழக்கம்

கல்வித்துறையிலுள்ள சில நல்ல அம்சங்களைக் கூட நிராகரிக்கிறது புதிய கல்விக் கொள்கை – கே.கே.ராகேஷ், மாநிலங்களவை உறுப்பினர்

blog-primary-edusystem-india-1728x800_c

புதிய கல்விக் கொள்கை 2016 என்பதில் 2016 என்பதைத் தவிர வேறு எதுவும் புதிதல்ல. கிராமத்துப் பழமொழியான ‘புதிய மொந்தையில் பழைய கள்’ என்பதைப் போல கடந்த காலங்களில் சொல்லப்பட்ட விசயங்களையே புதிய கல்விக் கொள்கைக்காக வெளியிடப்பட்டுள்ள உள்ளீடுகள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசின் கல்விக் கொள்கைக்கான உள்ளீடுகள்,  மத்தியத்துப்படுத்துதல், வகுப்புவாதப்படுத்துதல்  ஆகிய மூன்று ‘ஊ’ க்களை உள்ளடக்கியது. மத்திய அரசின் ஓய்வுபெற்ற செயலாளர் டி.எஸ்.ஆர்.சுப்ரமணியம் தலைமையில் அமைக்கப்பட்ட குழு தனது முழு அறிக்கையையும் மத்திய அரசிடம் கொடுத்துள்ளது. இன்றும் முழுமையாக வெளியிடவில்லை. சில உள்ளீடுகள் மட்டுமே தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் 95 பரிந்துரைகள் உள்ளன டி.எஸ்.ஆர்.சுப்ரமணியம் கமிட்டியின் அறிக்கையை ஏன் அரசு மறைக்கிறது என்ற கேள்வியை நாம் வலுவாக முன்வைக்க வேண்டியுள்ளது.

டி.எஸ்.ஆர்.சுப்ரமணியம் கமிட்டி அறிக்கையை முழுமையாக வெளிப்படுத்தினால் மக்களிடம் முழுமையான எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருக்கும் என்ற அச்சத்தில் சில பரிந்துரைகளை உள்ளீடுகள் என வெளியீட்டு மக்களின் மனநிலையை பரிசோதித்துப் பார்க்கிறது. நல்ல சூடான தண்ணீரில் தவளையை போட்டால் தவளை ஆபத்தை உணர்ந்து வெளியே குதித்து விடும். இதுவே குளிர்ந்த நீரில் தவளையை போட்டு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை சூடுபடுத்தினால் தவளை ஆபத்தை உணராமல் உள்ளேயே இருந்து இறுதியில் செத்துவிடும். அதுபோலத்தான் மத்திய அரசின் நடவடிக்கை உள்ளது. அதனால்தான் புதிய கல்விக் கொள்கையை முழுமையாக வெளியிடாமல் உள்ளீடுகளை மட்டும் வெளியிட்டுள்ளது. சுருங்கச் சொன்னால் விசத்தை கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்கிறது.

புதிய கல்விக் கொள்கைக்கான அறிக்கை தயாரிக்கும் முன் டி.எஸ்.ஆர்.சுப்ரமணியம் கமிட்டி ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நடத்தியது. அறிக்கை தயாரித்தபின் அறிக்கை குறித்து மத்திய கல்வியமைச்சர் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நடத்துகிறார். ஆனால் இந்த அறிக்கையை ஏன் அரசு முழுமையாக வெளியிடவில்லை.

கடந்த சில ஆண்டுகளாக கல்வித்துறை முழுமையாக வியாபாரமாக்கப்பட்டுள்ளது. கல்வித்துறைக்கு சம்பந்தமில்லாத அம்பானி, பிர்லா கமிட்டி, சாம்பிட்ராடோ கமிட்டிகள் கல்வியை முழுமையாக தனியார்மயப்படுத்தி வியாபார பொருளாக மாற்றுவதற்கான பரிந்துரைகளை கொடுத்துள்ளது. அதற்கேற்ற வகையில் மாணவர்களை அரசியலற்றவர்களாக வளர்த்தெடுக்கும் நடவடிக்கைகளும், தரப்படுத்துதல் என்ற பெயரில் அரசு கல்வி நிறுவனங்களை மூடுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் உள்ள பொறியியல் இடங்களில் 56 சதம் நிரப்பபடாமல் காலியாக உள்ளது. இதன் பொருள் பொறியியல் படிப்பதற்கான மாணவர்கள் இல்லை என்பதல்ல. தகுதியான மாணவர்களை பொறியியல் கல்லூரிகளுக்கு உள்ளே நுழைய விடாமல் தடுப்பது எது? தகுதிக்கு இங்கே மதிப்பில்லை. பணத்திற்கு மட்டுமே மதிப்பு. பணமிருந்தால் மட்டுமே படிக்க முடியும்.
இத்தகைய மோசமான நடவடிக்கைகளை மேலும் வேகப்படுத்தும் வகையில்தான் புதிய கல்விக் கொள்கையின் பரிந்துரைகளும் உள்ளன. சமத்துவம், சமூகநீதி என்பதெல்லாம் இந்த அறிக்கையில் இல்லை. மட்டுமின்றி தற்போது கல்வித்துறையிலுள்ள சில நல்ல அம்சங்களைக் கூட நிராகரிக்கிறது புதிய கல்விக் கொள்கை.

குருகுலக் கல்வி முறையை பெருமையுடன் பேசுகிறது இந்த அறிக்கை. குருகுலக் கல்வி முறையில் என்ன நடந்ததுancient-education1 என்பது நமக்குத் தெரியும். பிராமணர்களும், சத்திரியர்களும் மட்டுமே அன்று கல்வி கற்க முடியும். சூத்திரர்கள் வேதங்களை படிப்பது மட்டுமல்ல கேட்பது கூட குற்றமாக கருதி அவர்களுக்கு கல்வி கற்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. அத்தகைய கல்வி முறையை மீண்டும் கொண்டுவர முயற்சிக்கிறது மத்திய அரசு. ஆர்எஸ்எஸ் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சொல்லித்தரும் வகுப்புவாத பாடத்திட்டத்தை புதிய கல்விக் கொள்கை மூலம் நாடு முழுவதும் பரவலாக்கிட மத்திய அரசு முயற்சிக்கிறது.

ஆர்எஸ்எஸ் சங்பரிவார் அமைப்புகள் பிராமணியத்தை தூக்கிபிடிக்கும் வேலையை காலம் காலமாக செய்து வருகின்றன. வர்ணாசிரம் முறையை வலுப்படுத்தும் மனுநீதிதான் உலகின் சிறந்த சட்டம் என்றும் ஆர்எஸ்எஸ் கொண்டாடுகிறது.

மிகச்சிறந்த ராம பக்தரான மகாத்மா காந்தியை சுடும் முன் ஜெய்ஸ்ரீராம் என்று சொன்னான் நாதுராம் கோட்சே. துப்பாக்கிக் குண்டுகள் துளைத்து மரணத்தை நோக்கி செல்லும் போதும் ஹேராம் என்று உச்சரித்தார் மகாத்மா காந்தி. கோட்சேவின் ஜெய் ஸ்ரீராம் தான் ஆர்எஸ்எஸ் கொண்டாடும் அரசியல் ராமன். மகாத்மா காந்தியின் ஹேராம் சாதாரண இந்துக்கள் வழிபடும் கடவுள் ராமன். இரண்டிற்குமான வேறுபாட்டை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மக்களுக்கும் புரிய வைக்க வேண்டும். அப்போதுதான் ஆர்எஸ்எஸ்யின் இந்துத்துவா வகுப்புவாத நடவடிக்கைகளை முறியடிக்க முடியும்.

புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் கல்வியை வியாபாரமாக்க, மத்தியத்துவப்படுத்த, வகுப்புவாதமயமாக்க முயற்சிக்கும் மத்திய அரசின் முயற்சிகளை முறியடிப்போம்.

Related Posts