பிற

எது கொண்டாட்டம்?

இன்று வானம் கொண்டாட்டம் முடிவடைந்து பைக்கில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தோம்.

அடையாறிலிருந்து ஓ.எம்.ஆர் சாலை முழுக்க நடந்துக் கொண்டிருப்பது கொண்டாட்டமா ? இல்லை கலவரமா ? என்னுமளவுக்கு டிராஃபிக் ஒரு அபாய நிலையிலிருந்தது.

இரண்டு கார்கள் zig zag என சலம்பிக்கொண்டு உச்ச கட்ட வேகத்தில் சீறிப்பாய்கின்றன ! அந்த கார்களை சேஸ் செய்தவாறே உச்சகட்ட வேகத்தில் 10,15 பைக்குகள். இந்த கார் மற்றும் பைக் ஓட்டுனர்கள் குடித்திருப்பதும் தெரிகிறது.

எங்களுக்கு அருகே ஒரு சிறு குடும்பம் பைக்கில் சென்று கொண்டிருந்தது. சர்ச்சில் நிகழ்ச்சி முடிந்து கிளம்புகிறார்கள் போலும்.
அந்த குடும்பம் முழு பயத்துடனும் , பதட்டத்துடனுமே சென்றுக் கொண்டிருந்தது ! பின்னர் பார்க்கும் போது தெரிந்தது.. சாலையில் பலரும் பெரும் பீதியுடன் தான் சென்றுக் கொண்டிருந்தனர்.

முதலில் கொண்டாட்டம் என்பது முகவரி அறியா சக மனிதர்களுடன் மகிழ்ச்சியை , சிறு நேசத்தை பகிர்ந்து கொள்ளுவது. சக மனிதனை பதற வைப்பதும் , பயப்பட வைப்பதும் அல்ல !

மனதில் தேங்கி நிற்கும் நேசங்களை மடை திறந்து விடும் ஒரு நாள் தான் கொண்டாட்ட நாள் ! மனதிலிருக்கும் வக்கிரங்களை , மிருகத்தனத்தை , அடாவடித்தனத்தை கட்டவிழ்த்து விடுவதற்கான ஒரு நாளாக தான் சென்னையின் புத்தாண்டு கொண்டாட்டம் விளங்குகிறதென்று சொன்னால் அது மிகையல்ல.

கூட்டு சமூக வாழ்வை அறியாத , ஒன்று கூடுகையின் சுவையறியாத வெறும் நுகர்வும் , சாகசவாதமும் மட்டுமே வாழ்வை பெருமளவில் ஆக்கிரமித்திருக்கிற ஒரு இளைய தலைமுறையின் பிறழ்வாகத்தான் இத்தகைய நடவடிக்கைகளை பார்க்க முடிகிறது !

வானம் திருவிழா முடிந்ததும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கிளம்பினார்கள். நிச்சயம் அவர்களில் ஒருவர் கூட சாலையில் வாகன பைத்தியக்காரத்தனங்களை அரங்கேற்றியிருக்க மாட்டார்கள் என உறுதியாக கூற முடியும். Coz they are trained towards a social responsibility !

2008 ம் வருடம் என நினைக்கிறேன். கோவையில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு மற்றும் பேரணி நடைபெற்றது .பேரணி – மாநாடு நடந்த 3 நாட்களுமே பொது மக்களுக்கு ஒரு துளி இடையூறும் ஏற்படுத்தப்படவில்லை ! The cadres are trained for a social responsibility !

கிராமப்புறங்களின் சீழ் பிடித்து போன சாதிய கலாச்சார நிலையும் , கொண்டாட்டமும்.. சென்னை போன்ற மாநகரங்களில் வெகுவாக நெகிழ்ந்திருப்பது.. நவீனத்துவத்தின் ஒரு ஆக்கப்பூர்வமான அம்சம். ஆனால் simultaneously இந்த உலகமயச்சூழல்… சக மனிதன் குறித்து சிறிதும் அக்கறையற்ற , வெறித்தனமான நுகர்வை மட்டுமே கொண்டாட்டமாக எண்ணுகிற Socially irresponsible freaks களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பதையும் உரையாட வேண்டியிருக்கிறது.

சமூக உணர்வை மழுங்கடித்து , ஒவ்வொருவரையும் தனித்தனி மனிதர்களாக சிதறடித்த நவீனத்துவ சூழலின் விளைவாகவே இதனைப்பார்க்க முடிகிறது !

சுதந்திரம் கொண்டாட்டம் இவைகள் நான்கு மனிதர்கள் சூழ்ந்திருக்கும் ஒரு சமூகத்திற்குள் நடக்கிறது என்ற பிரக்ஞையே அற்ற தனித் தனி மனிதர்கள் தான் கார்களையும் பைக்குகளையும் சலம்பி படுக்க போட்டு புல்லட் வேகத்தில் ஓட்டிச் செல்கிறார்கள். ஏனெனில் அவர்களுக்கு அவர்கள் மட்டுமே சமூகம். அவர்கள் வக்கிரங்களே சுதந்திரம் !

ஒன்று கூடுகையின் சுவை நிரம்பும் ஆண்டாக இந்த ஆண்டு வாய்க்கப் பெறட்டும் . புத்தாண்டு வாழ்த்துகள் ? ? !

– அருண் பகத்

Related Posts