அறிவியல்

எடிசன் செய்த கொலை!

https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/79/Tesla_circa_1890.jpeg/179px-Tesla_circa_1890.jpegவரலாறு என்பது வேட்டைக்காரர்களின் டைரிக் குறிப்பே. சிங்கம் வந்து உண்மையைச் சொல்லாதவரை வேட்டைக்காரர்கள் தான் ராஜாக்கள். இது டெஸ்லா என்கிற அறிவியல் சிங்கத்தின் கதை. ஆஸ்திரியாவில் ஜூலை 10, 1856 ல் பிறந்த நிகோலா டெஸ்லாவுக்கு அறிவியல் என்றால் அவ்வளவு பிரியம். கையில் கிடைத்த உபகரணங்களை வைத்து எதாவது புதிய பொருளை கண்டுபிடிப்பது அவனது வாடிக்கை.” உன்னை மாதிரி ஆட்களுக்கு அமெரிக்காவில் நிறைய மவுசு” என்று நண்பர் சொல்ல அமெரிக்காவின் பிரபலமான பணக்கார விஞ்ஞானியான எடிசனுடைய ஆராய்ச்சிக்கூடத்தில் ஆராய்ச்சியாளர் பணிக்கு எழுதிப் போட்டார். டெஸ்லாவின் திறமையைக் கண்ட எடிசன் அவரை உடனே வேலைக்குச் சேர்த்துக் கொண்டார்.

அமெரிக்க விஞ்ஞானிகள் எல்லாம் பணத்தின் பின்னால் ஓடிக் கொண்டிருக்க தன் கனவின் பின்னால் ஓடிக் கொண்டிருந்தார் டெஸ்லா. அவர் கண்டுபிடித்த ஒவ்வொரு பொருளையும் எடிசன் தனது பெயரில் பேடண்ட் உரிமை வாங்கிக் கொண்டிருந்தார்.அதைப் பற்றி எந்த கவலையும் இல்லாமல் தனது கண்டுபிடிப்புகளை நிகழ்த்திக் கொண்டிருந்தார் டெஸ்லா. ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்த டெஸ்லா எடிசனிடம் நியாயம் கேட்க ”வெளியே போ” என்கிற பதிலே கிடைத்தது.

வெளியே வந்த டெஸ்லாவுக்கு எடிசனின் போட்டிக் கம்பேனிகள் ஆதரவுக்கரம் நீட்டினர். டெஸ்லாவும் ஒரு கம்பெனியில் சேர்ந்து தன் பணிகளைத் தொடர்ந்தார். அவைகளும் சொற்ப ராய்ல்டி கொடுத்து ஏமாற்றின. இதைக் கண்டுகொள்ளாமல் டெஸ்லா தனது சிறந்த கண்டுபிடிப்பான AC கரண்ட் என அழைக்கப்படும் ஆல்டர்னேடிவ் கரண்டைக் கண்டுபிடித்தார். இது ஏற்கனவே DC கரண்ட் எனும் டைரக்ட் கரண்டை கண்டுபிடித்த எடிசனுக்கு பெரிய தலைவலியைத் தந்தது.அவர் DC கரண்டில் நிறைய முதலீடு செய்திருந்தார். AC கரண்ட் , DC கரண்டை விட விலை மலிவாகவும் எளிதில் பயன்படுத்தக் கூடியதாகவும் இருந்தது. உலகமே AC கரண்டிற்கு மாறிக் கொண்டிருந்தது. நீரில் இருந்து மின்சாரத்தை பெருமளவு தயாரிக்க முடியும் என்று நயாகரா அருவியில் இருந்து மின்சாரம் தயாரித்துக் காட்டினார் .இதை எல்லாம் எடிசனால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. எடிசன் தனது அதிகாரத்தையும் பணத்தையும் வைத்து டெஸ்லாவை விரட்டினார்.. (கடைசியில் டெஸ்லா இறந்த பிறகு எடிசன் AC கரண்டிற்கு மாறினார் என்பது உபரித் தகவல்).

எடிசன் தான் கண்டுபிடித்த பல்பை இன்னும் செம்மையாக்க பல லட்சம் டாலர்களை செலவு செய்துகொண்டிருந்த பொழுது,.டெஸ்லா நியான் பல்புகளைக் கண்டுபிடித்தார்.எடிசனின் பல்புகள் டெஸ்லா பல்பின் ஐந்து சதவீத சக்தியைக் கூடத் தரவில்லை.நியான் பல்புகளைக் கண்டு பிடிக்கும் முன் டெஸ்லா ஃப்லோரஸண்ட் பல்புகளைக் கண்டுபிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இது எடிசனின் பல்பு வியாபரத்தை மேலும் பாதித்தது.

டெஸ்லா எப்போதும் அமைதியையே விரும்பினார் . ஏனோ அது கடைசி வரை அவருக்கு கிட்டவேயில்லை.அவரது மனிதநேயத்திற்கு ஒரு சான்று. அவர் மின்னூட்ட துகள் கற்றைகளைக் கண்டுபிடித்த பொழுது உலகிலேயே அதிபயங்கரமான ஆயுதமாக அது இருந்தது.அவர் அதை அமைதிக்கான கற்றைகள் என்றே பெயரிட்டார். உள்நுழையும் எதிரி நாடுகளுக்கெதிராகத் தான் பயன்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.பல கம்பெனிகள் அதை அவரிடம் இருந்து வாங்க போட்டி போட்டனர். அவர்களின் சூழ்சிகளை உணர்ந்த அவர் அதை விற்கவே இல்லை. பணக்காரனாய் இருப்பதை விட மனிதனாய் இருப்பது முக்கியம் என்று அவர் கருதினார்.

ரேடியோவைக் கண்டுபிடித்தவர் மார்க்கோனி என்று படித்திருப்போம். ஆனால் மார்க்கோனி ரேடியோவைக் கண்டுபிடிப்பதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்னரே டெஸ்லா ரேடியோவைப் பற்றி ஒரு உரையை நிகழ்த்தியிருந்தார்.ரேடியோவிற்கான முதல் பேட்டன்ட் உரிமையையும் அவர் 1893ல் பதிந்திருந்தார். ஆனால் 1904 ஆம் வருடம் அரசியல் செல்வாக்கு பெற்றவரும்,எடிசனின் பிரியத்திற்கு உரியவருமான மார்க்கோனி தான் ரேடியோவைக் கண்டுபிடித்தார் என்று அமெரிக்கா அறிவித்தது. அதற்காக அவர் நோபல் பரிசும் பெற்றார்.

இத்தனை இடையூறுகளுக்கு மத்தியிலும் டெஸ்லா 411 கண்டுபிடிப்புகளுக்கு பேட்டர்ன் உரிமையை வாங்கியிருந்தார். காந்தத் தூண்டலைக் கண்டுபிடித்தவர் டெஸ்லா அவர் பெயரிலேயே நாம் அதை அளவிடுகிறோம். X கதிர்கள், வேக்கம் டியூப்கள், இப்போது பயன்படுத்தப்படும் இண்டக்ஷன் மோட்டார்கள், எதிரிகளின் ஊடுருவலைத் தடுக்கும் ரேடார்கள் எல்லாம் டெஸ்லாவின் கொடையே. டெஸ்லாவுக்கு பொருளுதவி செய்துகொண்டிருந்தே ஒரே நண்பரான ஜே.பி.மார்கனும் இறக்க டெஸ்லா கையறு நிலைக்குத் தள்ளப்பட்டார்.எடிசன் என்கிற பணக்கார வியாபார விஞ்ஞானியிடம் சிக்கி அங்கீகாரத்திற்காக அலைந்து கடைசியில் மனம் உடைந்து ஹோட்டல் அறையில் அனாதையாக தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்பவர்கள் இறந்த பிணத்தை எரியூட்டும் வேலையே செய்கிறார்கள்.கடைசி வரை தனது கனவுகளுக்காக போராடிய டெஸ்லாவும் மனதால் இறந்த பின் தனது உடலை மாய்த்துக் கொண்டார்.

ஒரு மேடையில் தாமஸ் ஆல்வா எடிசன் சொன்னதை இங்கே நினைவு கூராமல் இருக்க முடியவில்லை. “வியாபாரத்திலும், தொழிற்துறையிலும் திருடாதவர்கள் யாரும் இல்லை, நான் திருடியிருக்கிறேன். மற்றெல்லோரையும் விட எனக்கு எப்படித் திருடுவது என்று தெரியும்?”

Related Posts