இலக்கியம்

எங்க வச்ச புத்தியை…..

மெத்தை வீட்டுக் கடையிலே
கத்திரிக்கா வாங்கும்போதும்
சொத்தை கித்தை வந்துரும்னு
குத்த வச்சு பாப்பியே

கண்ணாலம் பண்ணும் போது
கலைவாணி போல இருந்தும்
பொண்ண பத்தி ஊரெல்லாம்
அழுங்காம கேட்டியே

குத்தகைக்கு விட்டா தோப்பு
நூறு கட்டு தேறுமின்னு
பெத்த மகன் சொன்ன போதும்
ஊரு பூராம் கேட்டியே

பரிகாரம் பண்ணலைன்னா
பங்கம் வர போகுதுன்னு
குறிகாரன் சொன்ன போது
எங்க வச்ச புத்தியை

Related Posts