இதழ்கள் இளைஞர் முழக்கம்

உலகின் முதல் மருத்துவப் புத்தகமும், மேலும் சிலவும் …

பேரா.மோகனா

நம்ம எல்லோருக்கும், சளி, காய்ச்சல்,தலைவலி வயிற்றுப்போக்கு இதெல்லாம் வருவது சகஜம்தானே ? இப்படி நோய் வராத மனிதர்கள் உண்டா இந்த பூமியில்.. அப்படி எந்த நோயுமே வராதவர்களை கண்டுபிடித்தால், முன்னாளில் ராஜாக்கள் காலத்தில் அறிவித்தது போல, ஓர் ஆயிரம் பொற்காசுகள் தருவதாக அறிவிக்கலாமா? அறிவிக்கலாம்தான். ஆனால் யாரும் அந்தப் பரிசினை வாங்க முடியாது. ஏனென்றால் மனிதர்கள் என்றால் ,உங்களில் யாருக்காவது எப்பவாவது வியாதியே வராமல் இருந்திருக்குமா? வாய்ப்பே இல்லை என்பதுதான் உண்மை.

உயிரும்..நோயும்..
உலகில் ஓர் உயிர் இருக்குமானால், அது ஏதாவது ஒரு கிருமி அல்லது பிரச்சனையால் பாதிக்கப்படுவது இயற்கையில் இயல்பே.. அப்படியாயின் நோயின் வயதும், உயிரினங்களின் உருவாக்க வயதும் கிட்டத்தட்ட சம கால வயதுதான்.இரண்டும் ஒன்றுக்கொன்று நேரடி தொடர்பு உடையவையாகத்தானே இருக்க வேண்டும்.. நோய் வந்த காலத்திலிருந்தே, அதனைப் பற்றி அறிந்து அதனை சரி செய்ய முயற்சி செய்த உயிரினம், அதிக அறிவுள்ள ஜீவி அல்லது உயிரினம் , பரிணாமத்தின் உச்சியில் அமர்ந்துள்ள மனித ஜீவன் மட்டுமே.நோய் வந்த பின், அதனை சரி செய்ய, அதனைப் போக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும்/ சரி செய்யப்பட்டும் இருக்கலாம். இந்த உண்மைகள் எல்லாம் ஒரு புறம் இருந்தாலும் கூட,மனிதனுடைய பரிணாம வயதையும் நோய் பற்றி, அதனை சரி செய்யும் முறையான மருத்துவம் பற்றியும் , அதன் மருந்தைப் பற்றியும் அதன் ஆதிகாலம் பற்றி நாம் குறைவாகவே அறிந்திருகிறோம். ஆனால் அதன் சரித்திரம் என்பது/முதல் அடி/ எட்டு என்பது வரலாற்றுக்கு முற்பட்ட பழங்காலத்திலிருந்தே, அடியெடுத்து வைக்கத் துவங்கியாகிவிட்டது. அதுதான் முழு உண்மை.

மருத்துவம் என்றால்..என்ன?
மருத்துவம் என்பது அறிவியலும், ரணம் ஆற்றும் ஒரு கலையும் ஆகும். இதில் ஏராளமான உடல்நல பாதுகாப்பு முறைகள் மனிதன் அறிந்த நாளிலிருந்தே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எதற்கு?நோய்க்கான சிகிச்சை அதனைக் கட்டுப்படுத்தும் முறை, வராமல் தடுப்பதற்கான முறை என பலவகையான முயற்சிகள் செய்து, கஜ குட்டிக் கரணம் போட்டு, பல சிங்கிடி குங்கிடி முறைக ளையெல்லாம் கையாண்டு, இன்று ஒரு வழியாய் பல வகை மருத்துவ சிகிச்சை முறைகளைக் கைக்கொண்டு வளர்ந்துள்ளோம். அது மட்டுமா அதன் வழியில் பல வகை மாற்று சிகிச்சை முறைகளையும் கூட பின்பற்றுகிறோம். பல வகை மருத்துவ முறைகள் இருக்கின்றன.

நம்பிக்கையின் .பின்னணியில்.வரலாறு..
சரித்திர காலத்துக்கு முந்திய காலத்திலிருந்தே,ஆங்காங்கே நதிக்கரைகளில் வாழ்ந்த மனித சமூகங்கள்.பலவகையான நம்பிக்கைகளை மருத்துவத்தின் மீது கொண்டிருந்தன. மனிதனின் பிறப்பு, இறப்பு, நல்லது, கெட்டது, வியாதி, கல்யாணம், காட்சி என ஒவ்வொரு செயலுக்கும் கூட பலவகை நம்பிக்கைகளைக் கொண்டிருந்தன. இன்று மனிதனின் ஆதிகாலம் நிகழ்வுகளைப் பார்த்தால், வரலாறு முழுமைக்கும் ஒரு வித்தியாசமான அணுகுமுறையையே கொண்டிருந்தனர். உடலுக்கு நோய் என்பது, எதாவது ஒரு .சூன்யக்காரி,பிசாசு,கடவுளுக்கு எதிரான கொள்கை, போன்றவற்றால் ஆள் ஏவுதல் மூலமாகவே நடைபெறும் என்பதை மிக ஆழமாக நம்பினர். அல்லது ஆண்டவனை அதற்காக துணைக்கு அழைத்தனர்.

கல கல..பலப் பல மருத்துவ முறைகள்..
துவக்க கால மருத்துவப் பதிவுகள்,பழங்கால எகிப்திய மருத்துவம், பாபிலொனிய மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம்(இதுதான் இந்தியாவின் பழம் பெருமை பேசும் மருத்துவம்), சீன மருத்துவம், பழங்கால கிரேக்க மற்றும் ரோமன் நாட்டு மருத்துவம் என ஒவ்வொரு ஊருக்கும் தகுந்தபடி மருத்துவ முறை லேசாக மாறுபடுகிறது. ஏனெனில் , அவர்களின் பழக்க வழக்கம்,கலாச்சாரம், சுற்றுச் சூழல், புவியமைப்பு,கல்வி, சுகாதாரம் என பல கூறுகளை உள்ளடக்கியதாவே நோய் பற்றிய கருத்தும், அதனை குணமாக்கும் சிகிச்சை முறையும் கூட இருக்கின்றன.

வரலாற்றை புறந்தள்ளும் மருத்துவம்..
வரலாற்றுக்கு முந்தைய கால மருந்துகள்,பெரும்பாலும், தாவரங்கள், விலங்குகளின் உறுப்புகள், தாது உப்புகள் என்பவற்றை உள்ளடக்கியதாகவே இருந்திருக்கின்றன. அதுவும் கூட, பெரும்பான்மையான இடங்களில், இந்தப் பொருட்களையெல்லாம் யாரு கொடுப்பார்கள் தெரியுமா? கோயிலை நிர்வகிக்கும் ஒரு சாமியார், பாதிரியார்கள், மந்திரவாதிகள், மருத்துவ மனிதர்கள்,ஓதுவார்கள் என பட்டாளமே இருக்கிறது. மருந்து கொடுக்கிறேன் பேர்வழி என்று மக்களை மிரட்டுவதற்கு. அதுமட்டுமா? அந்தக் காலத்தில், வரலாற்றுக்கு முந்தைய சமூகத்தினர்,இயற்கையாகவோ, அன்றி இயற்கையை விஞ்சிய செயல்களே நோயைத் தருகின்றன என்றும், அதன்பின்னரே குணமாக்க முடியும் என்றும் நம்பி நோயைக் குணப்படுத்த முடியும் என்றும், நோய்க்கான தாவர அதன் காரண காரியங்களைத் தேடிக்கொண்டு இருக்கின்றனர். சரித்திரக்கு முந்தைய கால நாகரிகங்கங்களில் வெறும் தாவர பொருட்களே நோய்க்கான மருந்தாகவும் இருக்கின்றன.

எகிப்து…
வரலாற்றுப் , பதிவுகளைப் புரட்டிப் பார்த்தால்,நம் கண்ணில் முதல் முதலில் மருத்துவராய் தென்படுவது, எதிப்திய இம்ஹோடோப் என்ற பெயருடைய ஒருவர்தான். இவர்தான் கி.மு. 2667-2600 களில் முதல் மருத்துவராய் இருந்திருக்கிறார் என பதிவுகள் சொல்கின்றன.(ஐஅhடிவநயீ, னுடிஉவடிச, ஹசஉhவைநஉவ, ழiபா ஞசநைளவ, ளுஉசiநெ யனே ஏணைநைச வடி முiபே னுதடிளநச) எதிப்தில் இம்ஹோடோப் என்பதற்கு, “யார் ஒருவர் அமைதிக்காக வருகிறாரோ”(“வாந டிநே றாடி உடிஅநள in யீநயஉந, ளை றiவா யீநயஉந”) என்ற பொருளாம்.மேலும் அவர் பல வகையான திறமைகள் பெற்றிருப்பவரும் கூட. இவர் எகிப்திய அரசர் பாராவுக்கு கீழ் பணிபுரிந்தார். இவரே, சூரியக் கடவுளின் நகரான ஹெலியோபோலிஸ் (ழநடiடியீடிடளை.) சூரியக் கடவுள் ” ரா” வுடைய மிக முக்கியமான மத குருவாகவும் இருந்தார். அது மட்டுமா? இவரே, வரலாற்றின் துவக்க காலமான அந்தக் காலத்தின் பொறியியலாளராகவும் மருத்துவராகவும் கூட இருந்தார். அதே கால கட்டத்தில் ஹெசி ரா மற்றும் மெரிட்-பதாஹ் (ழநளல-சுய யனே ஆநசவை-ஞவயா, )என வேறு இரண்டு மருத்துவர்களும் வாழ்ந்தனராம்.

பல்துறை வித்தகர்..இம்ஹோடோப்..
இம்ஹோடோப்தான் எகிப்தியப் பேரசரர் பாரோவின் சிலையைச் செதுக்கியவர்களுள் ஒருவர். இவர் இறப்பிற்குப் பின்னும் வாழ்வார் என்றும் நம்பப்பட்டது. மருத்துவத்தில் மிகப் பெரிய ஆளான இவர், மருத்துவத் துறையில் முக்கியமான புத்தகம் ஒன்றும் எழுதியதாக தெரிய வருகிறது. இதில் மாய மந்திரம் ஏதுமின்றி, மருத்துவ சிகிச்சைகள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன . இதன் பதிவுகள் உள்ளன.

உலகின் முதல்மருத்துவப் புத்தகம்..
இம்ஹோடோப்புக்குப் பின்னர் ஒரு புத்தகம் பாப்பிரஸ் சுருளில் எழுதப்பட்டுள்ளது. இது தான் உலகின் முதல்மருத்துவப் புத்தகம். இதன் பெயர் எட்வின் ஸ்மித் பாப்பிரஸ் என்பதாகும்.இதில் கவனிக்கப் பட்ட உடல் உள்ளுறுப்புகள் , உடல் நோய்கள், அதற்கான சிகிச்சைகள் என பல விஷயங்கள் விவரிக்கின்றன.

இந்த பாப்பிரஸ் சுருள் கி.மு, 1700 களில் எழுதப் பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. ஆனால் அதற்கு ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அதன் பதிவுகள் இருந்தது தெரிய வருகிறது. ஆயினும் இந்த பாப்பிரஸ் சுருள் இப்போது அமெரிக்காவின், நியூயார்க் நகரில், புரூக்ளின் குழந்தைகள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அதிலுள்ள தகவல்கள் என்ன தெரியுமா? கேட்டால் அசந்து போய் மயக்கம் போட்டு விடுவீர்கள்.. 2700 ஆண்டுகளுக்கு முன் இவ்வளவு தகவல்கள் மருத்துவத்தில் இருந்தனவா என்று…

அவையாவன:
27 தலைக் காயம் பற்றியது
6 கழுத்து தொண்டைக் காயங்கள்
2 கழுத்து காலர் எலும்பு பற்றியது.
8 கைக்காயங்கள்
1 புற்று கட்டி மற்றும் மார்பகக்கட்டி
தோள்பட்டை காயம் ‘
1 தண்டுவடக் காயம்.

Related Posts