இலக்கியம்

உலகப் புகழ் பெற்ற மூக்கு – வைக்கம் முகம்மது பஷீர்

கடந்த சில நாட்களாக பல இன்னல்களுக்கு பிறகு இன்றைக்கு வாசித்து முடித்த புத்தகம் கூடவே இன்றைக்கு தான் பஷீரின் நினைவு தினமும்.. அவரை இன்றைக்கு நினைவுபடுத்தி பார்ப்பதில் ஆச்சரியமும் மகிழ்வும்..

சரி புத்தகம் பற்றிய எனது கருத்துகளை பகிர வேண்டும். இந்த புத்தகம் காலச்சுவடு பதிப்பகம். தமிழில் குளச்சல் மு.யூசுப் அவர்களால் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டது. தேர்ந்தெடுத்த சிறுகதைகள் அடக்கம்.

பெரும்பாலும் நான் படித்த சிறுகதைகள் நாலு ஐந்து பக்கங்கள் மிகாது. இதில் பத்து பக்கங்கள் வரை சிறுகதைகள் இருப்பினும் சற்றும் தளராமல் வாசிக்க வைத்தது. 19 அத்தியாயம் முதலும் முடிவும் முன்னுரை பின்னுரை. மீதி அனைத்தும் கதைகள். முன்னுரையில் மொழிப்பெயர்ப்பாளர் பஷீர் உடனான அவரின் சந்திப்பை எதற்காக அவரின் எழுத்துக்களை தமிழாக்கம் செய்ய ஆர்வம் என அற்புதமாக சொல்லியிருக்கிறார்.

எனது அன்பார்ந்த கதைசொல்லி பஷீர் உடனான சந்திப்பை அவரின் புத்தகங்களின் வளத்தை தாங்கியிருக்கிறது. கலைஞன் எப்படியும் வாழ்வான் என சொல்லாமல் சொல்லும்.

 • FB_IMG_1470639151836ஜென்மதினம் கதையில் பல வறுமையின் முகவரிகள் நம்மை பார்த்து வழி கேட்பதை போன்ற உணர்வு. வலியே இல்லாமல் கொலை செய்கிறார் கதை சொல்லி.
 • ஐசுக்குட்டி வீண் ஆசைக்கும் காசுக்குமான போராட்டம் இந்த கதையில் தெரிகிறது.
 • அம்மா கதையில் உலகில் வாழும் அனைத்து அம்மக்களையும் நிறுத்துகிறார் பஷீர்.
 • புனித ரோமம் ஆன்மீகம் சார் பயணமாக கருதிக் கொண்டே கடைசியாக முடித்திருந்த விதத்தில் தன்னை தனியே காட்டுகிறார் கதைசொல்லி.
 • மூடர்களின் சொர்க்கம் அச்சோ என்ன ஆளப்பா இவர். மோகத்தை வருமையோடு இணைத்து வழங்கிய இந்த கதை பயங்கரமாக பாதிக்கும் மனதை.
 • பூவன்பழம் முரட்டுக் காதல் முதிர்ந்த போதும் காதல் என இக்கதை வருடும்.
 • நீலவெளிச்சம் இதில் ஹாரர் கதை சொல்லி இருக்கிறார்.
 • உலகப்புகழ் பெற்ற மூக்கு ஆகச் சிறந்த அரசியல் கதைக்கு சவுக்கடி.
 • தங்கம் ஒரு அழகுக் காதலும் அரவணைப்பும் பரவும்.
 • ஒரு பகவத்கீதையும் முலைகளும் மதத்தை தாண்டிய வாசிப்பையும் மனித்தை மதிக்கும் கதை சொல்லியைப் பற்றியும் பேசுகிறது.
 • எட்டுக்காலி மம்மூஞ்ஞு தடாலடி சிரிப்பை தூவும்.
 • சிரிக்கும் மரப்பாச்சி துவண்ட குலம் எழுவதையும் முதலாளித்துவ சிந்தனைகளை எதிர்க்கிறது.
 • பூமியின் வாரிசுதாரர்கள் உண்மையில் இப்புவியை காதலிப்பவர்கள் தவிர்க்கவே முடியாத கதை இது. எத்தனை உயிர்கள் பட்டியல் பல வகைகள் நாம் அறிந்து இருக்கவே மாட்டோம். அத்தனை அற்புதமான கதை இது.
 • சிங்கடி மூக்கன் சிரிக்கவும் சிந்திக்கவும். மதங்களும் தெய்வீகமும் மூடநம்பிக்கையும் அலசப்படும்.
 • ஆனை முடி அழகியல் கதை.
 • பர்ர்ர்ர் குபீர் சிரிப்பும் அன்பும்.

பின்னுரை பஷீர் எனும் தனிமரம். இந்த பின்னுரை பஷீரை காதலிக்க போதுமானதாக இருந்தது. காரணம் தேவையே இல்லை. எத்தனை வித ரசவாதங்களை அடக்கிய கதை சொல்லி. அவர் தோப்பாகியிருக்கிறார்.

ஆழமாய் பாய்கின்றன அவரின் கதைகள். வாசிக்க வாசிக்க என்னுடைய மனசு ரொம்பவும் தெளிவுபடுத்தி இருக்கு. இப்படியான கிளாசிக் கதைகளுக்கு சொந்தக்காரர் மட்டுமல்ல பஷீர். தீவிரவாதி பத்திரிக்கையாளர் சுதந்திர போராட்ட வீரர் சாமியார். சூஃபி காதலர், சமையல்காரர், கப்பல் பணியாளர், கதையின் சுல்தாம் உலக சஞ்சாரி மனம் பிறழ்ந்த போதும் பிரகாசித்த மானுடம் முழுவதுமே எதார்த்தவாதியாக நிஜத்திலும் கதையிலும் வாழ்ந்த இனியும் வாழப் போகும் பஷீருக்கு என் பேரன்பு.

வாசித்து பாருங்கள். பஷீரின் கதைகளுள் நீங்கள் தொலையக்கூடும் என்னைப்போல்.

Related Posts