இதழ்கள் இளைஞர் முழக்கம்

உடைப்பட வேண்டிய சாதிய ஆதிக்கம் – தீபா

இந்தியாவில் ஜாதியம் பற்றி எப்போதும் இல்லாத வகையில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்டு வருகிறது. ஜாதிய ஒடுக்குமுறையின் காரணமாக மரணம் அடைத்த ரோஹித்வெமுலா கொலை தீப்போல் இந்தியா முழுவதும் போரட்டங்களை ஏற்படுத்தியுள்ளது. கல்வி நிலையங்களில் ஜாதிய ஒடுக்குமுறை நடக்கிறது என்று நிருபிக்க ஒரு மரணம் தேவை என்ற கேவலமான, தோல்கள்தடித்த அடிப்படை மனித உணர்வு இல்லாத சமூகத்தில் இருக்கிறோம். இதியாவில் இதுமிகவும் முக்கியமான நிகழ்வு. இதை நாம் மறுதலிக்க முடியாது. ஏன் என்ற பல மரணங்களை நாம் மௌனமாக கடந்து தான் சென்றிருக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 25 மாணவர்கள் உயர் கல்வி நிலையங்களில் “மரணத்தை தவிர வேறு வழியில்லை”என்ற நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டனர். 25 மாணவர்களில் 23 பேர் ஒடுக்கப்பட்ட தலித் சமூகத்தை சார்தவர்கள். இந்த தகவல் வெறும் நான்கு உயர்கல்வி நிலையங்களில் நடந்தவை மட்டுமே. இந்தியா முழுவதும் ஜாதிய கொடுமைகளின் அடிப்படையில் மரணம் அடைந்த மாணவர்களின் எண்ணிகையை நாம் கட்டாயம் ஆராய்ந்தே தீரவேண்டும். பலபயங்கரமான தகவல்கள் புதைக்கபட்டுள்ளது.

சுகதேவ்தோரத் இவர் இந்தியாவில் உள்ள முக்கியமான கல்வியாளர்.  ஜாதியம் பற்றி பல ஆராய்சிகளை செய்து வருகிறார். இவர் சித்த ஆராய்ச்சி ஒன்றில் “மேல்”(ஆதிக்க) சாதி பெயர்கள் கொண்ட கல்வி தகுதி படிவங்களையும், “கீழ்”(ஒடுக்கபட்ட) ஜாதி பெயர்கள் கொண்ட கல்வி தகுதி படிவங்களையும் மற்றும் சிறுபான்மை பெயர்கள் கொண்ட கல்விதகுதி படிவங்களையும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அனுப்பினார். அதிகபடியான “மேல் சாதி”பெயர் கொண்ட கல்வி தகுதி படிவங்களுக்கு வேலைக்கான நேர்காணலிற்கு அழைப்பு வந்தது. இதில் இருந்து ஜாதியம் எப்படி நவீன தளங்களிலும் ஊடுருவி உள்ளது என்பதை வெளிக்கொண்டுவந்தார்.

உயர்கல்வி நிலையங்களில் மரணங்கள் குறித்து இவர் கூறியது என்னவென்றால் மாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் முக்கிய காரணம் ஜாதியரீதியில் பாகுபாடு; அவர்களை பொதுதளங்களில் இருந்து விலக்கிவைத்தல்; மற்றும் அவமான படுத்துதல் (னளைஉசiஅiயேவiடிn, நஒஉடரளiடிn யனே hரஅடையைவiடிn). இதற்கு மாணவர்களின் ஜாதியே முக்கிய காரணமாக இருக்கிறது. இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இப்படிப்பட்ட மரணங்கள் நம் நாட்டில் உள்ள மேல்தட்டு கல்விநிறுவனங்களில் நடைபெறுகிறது.

மாணவர்கள் இப்படிப்பட்ட மேல்தட்டு கல்விநிலையங்களில் சேர்க்கை முடிந்தவுடன், அவர்களின் ஜாதிவெளியில் தெரிந்துவிடுகிறது. அபொழுதிலிருந்தே ஆதிக்க ஜாதி மாணவர்கள் மூலமும், ஆதிக்க ஜாதி ஆசிரியர்கள் மூலமும் பலவகையான பாகுபாடுகளுக்கு உள்ளக்கபடுகின்றனர். இப்படிப்பட்ட மேல்தட்டு கல்விநிலையங்களில் அதிகப்படியான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆதிக்கஜாதியை சார்தவர்களாகவே உள்ளனர். எவ்வளவுதான் படித்தாலும் ஜாதிய உணர்வுபோவதில்லை. தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சார்ந்த மாணவர்களை ஒதுக்கிவைக்கும் நடவடிக்கைகள் பல நிகழ்த்தப்படுகின்றன. அவர்களின் சுயமரியாதையை குலைக்கும் வகையில் வகையில் இது நடத்தபடுகிறது.

செந்தில் (28), என்ற ஆராய்ச்சி மாணவர் ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முனைவர் பட்டபடிப்பிற்காக சென்றார். 2008 டில் இவரின் அறையில் பிணமாக கிடந்தார். இவரின் மரண செய்தி ஒருவாரம் கழித்துதான் பெற்றோருக்கு தெரிந்தது. இன்னமும் இவரின் பிரேதபரிசோதனை அறிக்கை இவர்களுக்கு கிடைக்கவில்லை. இவர் பயின்ற இளங்கலை (ருழு) மற்றும் முதுகலை (ஞழு) படிப்பில் முதன்மையான மாணவர். இவர் தலித் என்ற ஒரேகாரணத்திற்காக முனைவர் படிப்பிற்கான மேற்பார்வையாளரை நியமிக்கவில்லை. இவரை பலமுறை தரையில் அமரவைதுள்ளனர். அவர் சமர்ப்பித்த பல அறிக்கைகளை மதிப்பீடுகூட செய்யவில்லை. இவருடைய குடும்பம் “பண்ணியாண்டி”சமூகத்தை சார்தவர்கள். பன்றிவளர்ப்பு சார்ந்த வேலைகளை செய்ய ஜாதியகட்டமைப்பால் நிர்பந்திக்கபட்ட சமூகம். இவர்தான் இவரின் குடும்பத்திலேயே உயர்கல்விவரை படித்தவர். முதல்தலைமுறை. “நீ எல்லாம் பண்ணிமேய்க்கதான் லாய்க்கு”, “நீ எல்லாம் படிச்சு என்ன பண்ணபோற”, “உனக்கு எல்லா படிப்பு வராது”, போன்ற தரக்குறைவான வார்த்தைகளை திரும்பத்திரும்ப கூறி மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டார். எதிர்கால இயற்பியல் அறிஞரை இந்த சமூகம் இழந்துள்ளது.

இதுபோல தொடர்ந்து ஜாதிய கொடுமைகளுக்கு உள்ளாகப்படுகிறார்கள் பல மாணவர்கள். ஜாதிய கொடுமைகளை தகர்த்தெறிய முக்கியமான ஆயுதம் கல்வி. கல்வி என்பது ஒடுக்கப்பட்ட சமூகம் தாங்கள் தங்கள் அறியாமையில் இருந்து வெளியே வர உதவும். ஜாதிய வன்மங்களை தகர்த்தெறியும் இடங்களாகவும் கல்வி நிலையங்கள் மாறும். உயர்கல்வி நிலையங்களை கேட்டகவா வேண்டும்? அறிவியலும் சமூக அறிவியலும், ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு, நூற்றாண்டுகளாக அடிமைப்பட்ட சமூகத்திற்கு மிகப்பெரிய உந்து சத்தியாக மாறுகிறது. இதனாலேயே நூற்றாண்டுகளாக இருந்த ஜாதிய ஏற்றத்தாழ்வு உடைவதை ஆதிக்க மனப்பான்மை உடையவர்களுக்கு ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

காலம் காலமாக கட்டமைக்கப்பட்ட ஜாதிய ஏற்றத்தாழ்வு மாறாமல் இருக்க பலவகையில் ஆதிக்க ஜாதியினர் முயற்சிப்பதை கட்டாயம் எதிர்க்க வேண்டும்.

இதை தான் ரோ`ஹித் செய்தார். ரோ`ஹித் அம்பேத்கர் மாணவர் அமைப்பின் முக்கிய தலைவர். இவர் மார்க்ஷியவாதியும் கூட. அம்பேத்காரையும் மார்க்சியத்தையும் அறிந்ததாலேயே சமூக அடக்குமுறைகளை எதிர்த்தார். தனக்கும், தன்னைப்போல இருக்கும் தலித் மாணவர்களுக்கும் நடக்கும் மனித உரிமை மீறல்களை ஏற்று கொள்ள தயாராக இல்லை. ஆனாலும் தொடர்ந்து அவமானமும், தாகுதலுக்கும் ஆளானர். 5 மாணவர்களை இடைநீக்கம் செய்த ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகம், இம்மாணவர்கள் தங்கும் விடுதி, நிர்வாக கட்டிடம், பொது இடங்களான உணவகம், விளையாட்டு அரங்கம், நூலகம் மற்றும் சக மாணவர்களிடம் பேச கூட அனுமதி இல்லை என்றும் கூறியது. 10 நாட்களுக்கும் மேல் இம்மாணவர்கள் திறந்த வெளியில் இருந்துள்ளனர், உறங்கி உள்ளனர். எப்படி இருந்திருக்கும் இவர்களின் மனநிலை?

மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் 5 முறை பல்கலைக்கழக துணைவேந்தருக்கு இம்மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடரந்து கடிதம் எழுதி வற்புறுத்தி வந்தது. ஏன் என்றால் இந்த மாணவர்கள் க்ஷதுஞ – சுளுளு அமைக்க நினைக்கும் ஜாதிய கட்டமைப்பை தக்க வைக்கும் இந்து மதவாத இந்தியாவிற்கு எதிரானவர்கள் (க்ஷதுஞ – சுளுளு பொறுத்தவரையில் இவர்கள் தேச துரோகிகள்). ரோகித்தை மரண எல்லைக்கு தள்ளியது மட்டும் இல்லாமல், அவரின் மரணத்திற்கு பிறகும் பல பொய்யான தகவல்களை பரப்ப முயற்சிக்கும் க்ஷதுஞ – சுளுளு சின் மனநிலை எப்படிப்பட்டதாக இருக்கும்? அடிப்படையான மனித உணர்வற்றவர்கள்.

இப்படிப்பட்ட ஆதிக்கவாதிகளை சமூக சமத்துவத்தை நோக்கி பயணிக்கும் இளைஞர்கள் தனிமை படுத்த வேண்டும். இதைதான் ஆயிரகணக்கான மாணவர்கள் நாடு முழுவதும் செய்துகொண்டு இருக்கிறார்கள். ரோ`ஹித் போன்ற நூற்றுகணக்கான மாணவர்களின் மரணத்திற்கு இந்த சமுகம் பதில் சொல்லியே ஆகவேண்டும். சாதிய சமூகம் பதில் சொல்லியே ஆகா வேண்டும். ஜாதிய வெறியர்களின் அடக்குமுறையை எதிர்த்து களத்தில் நின்று போராடும் மாணவர்களோடு இணைத்து நிற்போம்.

– தீபா

Related Posts