சமூகம்

இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்?????

இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை என்னால் உணரமுடியாது என்பது நித்ரசனமான உண்மை…
–அமீர்.

உங்கள மாதிரி சமூகத்தை மேம்போக்கா பாத்துட்டு நாலுவார்த்த புரட்சிகரமா பேசிட்டு போறவங்களுக்கு சாதிய பத்தி தெரியாம இருக்க இஸ்லாமிய குடும்பத்துல பொறக்கணும்னு அவசியம் இல்ல. ஒரு சைவ, வைணவ குடும்பத்துல பொறந்தாலே போதும். ஏன்னா இந்தியாவப் பொறுத்தவரை சாதி தான் முதல், அப்புறம்தான் மதம். So ஒருத்தரோட மதம் மட்டும் சாதி குறித்த சரியான பார்வையை கொடுத்துவிடாது.

உங்களுக்கு தெரியலையா? இல்ல உங்க மதத்தை இந்த மேடைல புனிதபடுத்த நினைக்கிறீங்களானு எனக்கு தெரியல. இருந்தாலும் இந்த எடத்துல பதிய வைக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம், கடமையும் கூட…

இஸ்லாமிய சமூகத்தை நன்கு அறிந்தவர்களுக்கு இம்மாதிரி கருத்துக்கள் ஆச்சரியத்தையே வரவழைக்கும். இஸ்லாத்தில் அடிமைகள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும் என்று நபிகள் கூறியுள்ளார். ஆனால் அதே நேரத்தில் அடிமைமுறையை ஒழிப்பது பற்றி எதுவும் கூறியதாக எனக்கு தெரியவில்லை. இன்று அடிமைமுறை இஸ்லாத்தில் இல்லையென்பதாலேயே, சாதி இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. இது பண்ணையார், பண்ணையடிமை இல்லை ஆகவே இந்தியாவில் சாதியில்லை என்பது போலாகும்.

சாதி ஒரு மனிதனுக்கு சக மனிதன் அடிமை என்பதைதான் பிறப்பின் அடிப்படையில் தீர்மானிக்கிறது. ஆக அடிமைமுறையை ஒழிப்பது பற்றி பேசறதே, என்னைப்பொறுத்தவரையில் இந்த முறையை நியாயப்படுத்துவதற்கு நிகரானதே…

அப்படின்னா இஸ்லாம்ல சாதி இருக்குனு சொல்லவரியானு கேக்குறீங்களா?

ஆமா. இஸ்லாம் மதத்திலும், பார்ப்பனியம் ஊடுறுவியேதான் ஊள்ளது.

இங்கும்,

1. அஷ்ரப் – க்கள்
2. அஜ்லஃப் – க்கள்
3. அர்சல் – கள்

என மூன்று பிரிவுகளாக இஸ்லாத்தில் சாதியம் உள்ளது.

இதில்,

1. அஷ்ரப்கள்

உயர்சாதி முஸ்லிம்களாகவும், (Syed, Sheikhs, Pathans, Moghul, Mallik, Mirza)

2. அஜ்லஃப்கள்

தாழ்ந்த சாதி முஸ்லிம்களகவும்,(Cultivating Sheikhs, and others who were originally Hindus but who do not belong to any functional group, and have not gained admittance to the Ashraf Community, e.g. Pirali and Thakrai, Darzi, Jolaha, Fakir, and Rangrez, Barhi, Bhalhiara, Chik, Churihar, Dai, Dhawa, Dhunia, Gaddi, Kalal, Kasai, Kula Kunjara, Laheri, Mahifarosh, Mallah, Naliya, Nikari, Abdal, Bako, Bediya, Bhal, Chamba, Dafali, Dhobi, Hajjam, Mucho, Nagarchi, Nal,Panwaria, Madaria, Tunlia)

3. அர்சல்கள்

கீழ்மைப்படுத்தப்பட்ட சாதியாகவும் (Bhanar, Halalkhor, Hijra, Kasbi, Lalbegi, Maugta, Mehtar)

பெயரோடு நின்றுவிடவில்லை இந்த சாதிய அடுக்குமுறை, இந்துமதத்தில் நிலவுவது போலவே இவர்களுக்குள்ளும் தொழில் அடிப்படையில் சாதியப் பிளவு உள்ளது. இந்த பிரிவினை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வெளிப்படையாகவே இருந்துவருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை தாக்கம் குறைவாக இருப்பதை உணரலாமே தவிர இங்கு சாதியில்லை என்பது மக்களை ஏமாளிகளாக மாற்ற முன்வைக்கும் கோஷம்தான்.

இதுபோன்ற பிளவுகள் இஸ்லாத்தில் மட்டும் இல்லை, இந்தியாவிற்க்கு அறிமுகமான, இந்தியாவிலேயே தோன்றிய எல்லா மதங்களுக்குள்ளும் பார்ப்பனிய சிந்தனை ஊடுறுவியுள்ளதை, சமூகத்தை ஆழ்ந்துபடித்த (அம்பேத்கரை படித்த) யாராலும் மறுக்கமுடியாது.

ஆக, இஸ்லாத்தில் இருப்பதால் எனக்கு சாதி தெரியாது, சாதியின் தாக்கம் புரியாது என்று சொல்லுவது, ஆதிக்கசாதியில் இருந்துகொண்டு “இப்பல்லாம் யார் சார், சாதி பாக்குறானு” சொல்வது போலத்தான்.

இந்திய சமூகம் சாதிய சமூகம் என்பதை ஏற்போம்; சாதிய ஒழிப்பை முன்னிலைப்படுத்தி சமூகமாற்றத்திற்க்கு போராடுவோம்…

இவர்களை போன்ற போலி கோஷங்களை முன்வைப்பவர்களின் முகமுடியை அவிழ்ப்போம்…

(இஸ்லாத்தில் தலித்துகள் குறித்து மேலும் தெரிந்துகொள்ள எச் ஜி ரசூலின் படைப்பில் பாரதி புத்தகாலயம் வெளியிடடுள்ள “தலித் முஸ்லீம்” நூலை வாசிக்கவும்)

https://www.commonfolks.in/books/d/dalit-muslim

கலீல் ஜாஹீர்.

Related Posts