பிற

இன்றைய நாளில்!

சோவியத் குடியரசின் இலட்சினை

1922, டிசம்பர் 20

14 குடியரசுகள் சேர்ந்து‍ சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் (Union of Soviet Socialistic Republics (USSR)) உருவாக்கப்பட்ட நாள்.

1942, டிசம்பர் 20

இரண்டாம் உலகப் போரின் போது, 1942 மே மாதத்தில் ஜப்பான் பர்மாவை பிடித்தது.  இதைத் தொடர்ந்து‍ ஜப்பான் பர்மா-இந்திய எல்லை வழியாக இந்தியாவை பிடிக்க முயன்றது. அதன் முதல் கட்டமாக கல்கத்தாவை 1942 டிசம்பர் 20 இல் தாக்கியது‍.

பெர்லின் சுவர்

1963, டிசம்பர் 20

பெர்லின் சுவர் முதன் முறையாக மேற்கு‍ பெர்லின் மக்களுக்காகத் திறந்து‍விடப்பட்ட நாள்.

1967, டிசம்பர் 20

4,74,300 அமெரிக்க ராணுவ வீரர்கள் வியட்நாம் போருக்காக அமெரிக்காவிலிருந்து‍ வந்து‍ இறங்கிய நாள்.

மக்காவு

1999, டிசம்பர் 20

சீன மக்கள் குடியரசிடம் போர்த்துக்கல் மக்காவு நாட்டை ஒப்படைத்தது‍. மக்காவு சிறப்பு நிர்வாகப் பிரிவு (Macau Special Administrative Region), பொதுவாக மாக்காவு (Macau அல்லது Macao), என்பது மக்கள் சீனக் குடியரசின் இரண்டு சிறப்பு நிர்வாகப் பகுதிகளில் ஒன்றாகும். மற்றையது ஹாங்காங் ஆகும். ஹாங்காங்கும் 1984 டிசம்பர் 19 இல் தான் பிரிட்டீசார் சீன மக்கள் குடியரசிடம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒப்படைத்தனர். ஒப்பந்தத்தின் படி‍ ஜூலை 1, 1997 முதல் ஹாங்காங் மக்கள் சீன குடியரசின் கீழ் சிறப்பு நிர்வாகப் பிரிவாக செயல்படத் துவங்கியது.

Related Posts