இலக்கியம்

இன்னொருமுறை!

பிரிட்டிஷ் ருசித்து
கைவிட்ட ஓர் பொருளை
உலக வல்லாதிக்க அமெரிக்கா
நுகர முனைகிறது!

கார்ப்பரேட்டும், வால்மார்ட்டும்
பன்னாட்டு வியாபாரக் கூடமும்
நவீன காலத்து
கிழக்கிந்திய கம்பெனியே!

அணுப் பத்திரத்தில்
மண் பாத்தியமும்
மறைமுகமாய் மாட்டிக் கொண்டாகிவிட்டது
நம் மதி மாற்றானுக்காய் விற்றாகிவிட்டது!

கடல் நடுவே ஒருவன் அடிக்கிறான்
நில எல்லையில் வேறொருவன் மிரட்டுகிறான்
உட்புகுந்து இன்னொருவன் கடை விரிக்கிறான்
இம்மண்ணாளுபவர்கள் விரிப்பதோ சிவப்புக் கம்பளம்!

சாதியாலும், மதத்தாலும் சண்டையிட்டு நாமிங்கு
செளகரியமாய் சாத்தான் சடை பின்னிவிடுகிறான்!

நிற்க! எம்மண்ணோரே!
நினைவிலேந்தி உலவிப் பார்
ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தேழுவிற்கு
முன்பாக!

Related Posts