அரசியல்

இதற்குப் பெயர் வரி பயங்கரவாதமா?

பிரதமரும் நிதியமைச்சரும் “வரி பயங்கரவாதம்” என்ற சொற்றொடரைப் பயன்படுத்துகின்றனர். அதற்கான வரையறை என்ன என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இதன் பொருள் என்ன?

நம் நாட்டில் வரி -மொத்த உள்நாட்டு உற்பத்தி (Tax-GDP ratio) விகிதம் கிட்டத்தட்ட 10 சதவீதம் மட்டுமே. இங்கிலாந்தில் இது 26.9 சதவீதம். நார்வேயில் இது 27.3 சதவீதம். டென்மார்க்கில் 34.1 சதவீதம். பெல்ஜியத்தில் 25.7 சதவீதம். ஒரு சதவீதத்தை நாம் உயர்த்தி னோம் என்றாலும் நமது கஜானாவிற்கு 1.25 லட்சம் கோடி ரூபாய்க் கும் அதிகமாக வருமானம் வரும். நாம் நம்முடைய வரி -மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தை இங்கிலாந்துக்கு இணையாக மாற்றி அமைத்தோமானால் நம் கஜானாவிற்கு சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் கூடுதலாக வரி வருவாய் கிட்டும். நார்வேக்கு இணை யாக மாற்றியமைத்தோமானால் கூடுதலாக 30 லட்சம் கோடிரூபாய் கிடைக்கும். இது வரி பயங்கரவாதமா?

பட்ஜெட் ஆவணங்களில் காணப்படும் மற்றோர் உண்மை. வரி தொடர்பாக ரிடர்ன்ஸ் (tax returns) தாக்கல் செய்துள்ள 6 லட்சத்து 18 ஆயிரத்து 806 கம்பெனிகளில் 2 லட்சத்து 84 ஆயிரத்து 69 கம்பெனி கள் ஒரு காசுகூட வரியாக செலுத்தவில்லை. சொத்துவரியை எடுத்துக் கொள்ளுங்கள். நம் நாட்டில் இது மொத்த வரி வருவாயில் 0.40 சதவீதம் மட்டுமே. பிரிக்ஸ் நாடுகளின் சராசரி 4.85 சதவீதம்.    ஜி-20 நாடுகளின் சராசரி 7.6 சதவீதம். இது வரி பயங்கரவாதமா? உண்மையில் வரி பயங்கரவாதம் என்ற பெயரில் இவர்கள் கார்ப்ப ரேட்டுகளுக்கு உதவத்தான் இச்சொற்றொடரைப் பயன்படுத்து கிறார்கள்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, நிதி அமைச்சராக இருந்தபோது பின்தேதியிட்டு (retrospective) வரி வசூலிக்கும் முறையைக் கொண்டு வந்தார். அதற்கான சட்டத்தை நாடாளு மன்றத்தின் இரு அவைகளும் நிறைவேற்றின. ஆனால் பின்னர்  ப.சிதம்பரம் மீண்டும் நிதி அமைச் சராக வந்தபோது பார்த்தசாரதி ஷோம் என்பவர் தலைமையில் ஒரு நபர் குழு ஒன்றை அமைத்து நாடாளுமன்றத்தின் இரு அவை களும் இயற்றிய சட்டத்தை ரத்து செய்துவிட்டார். பின்தேதியிட்டு  வரி வசூலிக்கும் சட்டத்தை இங்கிலாந்து பின்பற்றுகிறது. 2008- ஆம் ஆண்டு கொண்டு வந்த இச் சட்டத்தை 1987 ஆம் ஆண்டி லிருந்தே நடைமுறைப் படுத்து கிறது. நாம் ஏன் அப்படிச்  செய்யக் கூடாது? கார்ப்பரேட்டு களுக்கு 5 லட்சத்து 72 ஆயிரத்து 923 கோடி ரூபாய் வரியை ரத்து செய்திருக்கிறீர்கள். இது அரசின் நிதிப்பற்றாக்குறை தொகையை விட அதிகமாகும்.

இவ்வாறு இவர்களுக்கு கடந்த 9 ஆண்டுகளில் அளித்த வரிச்சலுகை என்பது 36.5 லட்சம் கோடி ரூபாய்.  1991க்குப் பின் ஆட்சியில் அமர்ந்த அனைத்து அரசாங்கங்களும் அந்நிய நேரடி முதலீட்டுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் ஆதரவாகத்தான் செயல்பட்டு வருகின்றன. கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ள போதிலும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு அவர்களது பங்களிப்பு என்பது மிக மிக குறைவுதான்.

பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று பி. ராஜீவ் எம்.பி. ஆற்றிய உரையிலிருந்து…

Related Posts