இதழ்கள் இளைஞர் முழக்கம்

ஆணவக் கொலைகளும் தமிழக அரசியலும் – பேரா.லட்சுமணன்

 

 

தமிழக சமூக அரசியல் வரலாற்றில், முன்பு எப்பொழுதும் இல்லாததைவிட சமீப காலத்தில் தொடரும் ஆணவக் கொலைகள் தமிழக மற்றும் இந்திய மக்களிடம் ஒரு அதிர்ச்சி, பயம் மற்றும் ஆச்சரியம் அடைய செய்துள்ளது. ஏனென்றால் தமிழக அரசியல் மற்ற மாநிலங்களுக்கும் ஏன் இந்திய அளவிலும் கூட முற்போக்கு கருத்து, செயல் அரசியல் முன்னுதாரணமாக கருதப்பட்டன. ஆனால் இதுபோன்ற தொடரும் ஆணவக்கொலைகளினால் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி சிறப்பு நிர்வாகத்திறன் முற்போக்கு சிந்தனைகள் ஒடுக்கப்பட்ட மற்றும் பெண்களுடைய விடுதலையை முன்னிறுத்திய அரசியல் இன்று உலகளவில் மிகப்பெரிய கேள்விக்குறியாக்கப்பட்டது. இச்சூழலை ஒரு அரசியல் மாணவன் என்ற முறையில் என்னுள் எழும் கேள்விகளை முன்வைத்து இங்கு விளக்க விரும்புகிறேன்.

அதாவது, சமூகநீதி, சமத்துவம், பெண்விடுதலை என நூறாண்டுகளுக்கு மேலான அரசியல் வரலாற்று பின்னணிக்கொண்ட தமிழகத்தில் இன்று அதிகரித்துவரும் ஆணவக் கொலைகளும், ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான வன்முறைகளுக்கும் காரணங்கள் என்ன? இந்திய அளவில் பல்வேறு வளர்ச்சி குறியீடுகளில் இரண்டாவது மாநிலமாக விளங்கக்கூடிய நிலையில் சமூக உள்ளூணர்வு சார்ந்து உறவு முறைகளில் நிகழ்கின்ற முரண்களுக்கான காரணம் என்ன? உயர் கல்வி, பெண் கல்வி, பெண்கள் வளர்ச்சி மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது சற்று கூடுதலாக இருப்பினும் ஆணவக் கொலைகள் என்ற மாபெரும் அவமானம் நிகழ்வது ஏன்? இதுபோன்று பல்வேறு வினாக்களை எதிர்கொள்ளும் பொழுது, அதற்கான விடை தேடும் முயற்சி தான் இக்கட்டுரை.

முதலில் ஆணவக் கொலைகளை புரிந்துக் கொள்வதற்கு முன் நம் சமூக சாதிய படிநிலை கட்டமைப்பையும், ஆணாதிக்க பெண்ணடிமை முறையும், தீண்டாமை கொடுரத்தையும் சுருக்கமாக புரிந்துக் கொள்வது அவசியம். ஜாதியை சார்ந்த ஆய்வுகள் (தரவுகள்) மிக அதிக அளவில் அல்லது போதுமான அளவில் இருப்பினும் ஜாதியின் தோற்றம், வளர்ச்சி சார்ந்த பரிமாணங்கள் குறித்து ஆய்வுகளும், தரவுகளும் மிக மிகக் குறைவு.

ஜாதி அமைப்பின் வளர்ச்சி குறித்து டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர் “ஊயளவநள in iனேயை”, “கூhநசந அநஉhயnளைஅ தநநேளளை யனே னநஎநடடிஅநவே” என்ற ஆய்வுக் கட்டுரையில் ஜாதி என்பது முழுமையாக விள்க்கப்படாத ரிந்துக்கொள்ளபடாத ஒரு மாயையாக நிலவுகிறது என்று தொடங்கி பல்வேறு ஆதாரங்களுடன் ஜாதியின் தொடக்கத்தை அடிநாதமாக குறிப்பிடுவது அகமண முறையே ஜாதி உருவாக்கத்தின், ஜாதி வளர்ச்சியின், ஜாதி ஆணவத்தின் தூணாக உள்ளது. மேலும், அவர் சாதி என்பது வெறும் மனநிலை சார்ந்தது அல்லாமல் அது ஒரு பொருளாதார தொழிலாளர் வர்க்க பிரிவினை கொண்ட கொடுரமான சமூக அமைப்பாகும். மேலும், சாதி என்ற ஒரு நாணயத்தின் இருபக்கங்களாக விளங்குவது தீண்டாமையும், பெண்ணடிமை முறையும்.

சாதியின் தோற்றத்தின் முக்கிய காரணங்களாக அவர் விளக்கிக் கூறியது என்னவென்றால் இன்று பெரும்பாலான சமூகக் குழுக்கள் கடைபிடித்து வரும் மரபுகள்,  உடன்கட்டை ஏறுதல், குழந்தை திருமணம், விதவை முறை, இம்மூன்று மரபுகளும் எவ்வாறு இந்திய சமூகங்களுக்குள் நடைமுறை ஆனது அதற்கான பின்புலங்கள் என்ன? என மிக விரிவாக விளக்கியுள்ளார். மேலும் இந்த படிநிலை சாதிய கட்டமைப்பு பெண்ணடிமை எவ்வாறு விடுதலை அடைவது அதற்கான செயல்வடிவங்கள் தொகுத்தளித்து மற்றொரு கட்டுரையில் “சாதி ஒழிப்பு” இல் தெளிவுபடுத்தியுள்ளார். இவ்வாறு ஆய்வு கட்டுரைகளிலும் படித்து புரிந்து கொண்டாலொழிய இன்றைக்கு தொடருகின்ற ஆணவக் கொலைகளை நம்மால் முழுமையாக புரிந்துக் கொள்ள இயலாது. ஏனெனில் படிநிலை சாதி முறை ஆணவங்களை அழித்தொழிக்க பெண்விடுதலையும், புறமணம் (அ) சாதி மறுப்பு திருமணமே மாபெரும் ஆயுதமாக முன்வைக்கின்றார். இதே கூற்றிலிருந்து சமூக விடுதலைக்கான போராளிகள் பலரும் சாதி மறுப்பு திருமணத்தை ஊக்குவித்தனர்.

தமிழகச் சூழலில் சாதி அடையாளம் சார்ந்த அரசியலில் பொருளாதார ரீதியாக சில சமூகங்களுக்கு (சாதிகளுக்கு) பயன் அளித்து இருப்பினும் சாதியை கடந்து, சாதியை மறுத்து, சாதியை விலக்கி முற்போக்கு நவீன சமூகம் ஒன்று உருவாகவில்லை என்பது தொடரும் ஆணவக் கொலைகள் உணர்த்துகின்ற பாடம். அதற்குக் காரணம் இங்கிருந்த சமூக சீர்திருத்த அரசியல் என்பது வெளிப்படையான பிராமண எதிர்ப்பு அரசியலும் மறைமுகமான தலித் விரோத அரசியலும் என்பதே நிதர்சனம். ஏனெனில் பிரமாண எதிர்ப்பு அரசியலுக்கும், சாதி எதிர்ப்பு அரசியலுக்கும் மாபெரும் வேறுபாட்டை புரிந்துக் கொள்ள வேண்டும் அல்லது புரிந்துக் கொள்ள தவறிவிட்டோம் என்பதாகும். கடந்த நூறு ஆண்டுகால தமிழக அரசியல் வரலாறு என்பது சமூக பொருளாதாரத்தில் சில மாற்றங்கள் செய்திருப்பினும் அடிப்படை சமூக கட்டமைப்பை மறுசீரமைப்பு செய்வதை முனெடுக்காமல்விட்டதே காரணம். மேலும் நான் மேலே குறிப்பிட்டதுபோல தமிழக சமூக சீர்த்திருத்த அரசியல் என்பது வெளிப்படையான பிராமண எதிர்ப்பு அரசியலும், மறைமுகமான தலித் விரோத அரசியல் என்பதை நிரூபிக்க நம்மால் பல உதாரணங்களை கொடுக்க முடியும், இருப்பினும் தமிழக ஆட்சி அதிகாரத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் கள்ள மௌனம், சமூக சீர்திருத்த அறிவு ஜீவிகளின் குருட்டுத் தனமான பிடிவாதம், ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களின் சாதிய ஆதிக்க மேலாண்மை என்று விரிவுபடுத்த முடியும். ஆனால் சுமார் நூற்றுக்கும் மேலான ஆணவக் கொலைகள் (வெறி) அரங்கேறி இருப்பினும். இதுவரை சட்டரீதியாக ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை என்பது யதார்த்த உண்மை. இதில் வேடிக்கை என்னவென்றால் படித்து வெளி உலகம் தெரிந்து திருமண வயது அடைந்த ஒரு பெண் அல்லது ஆண் தன் வாழ்க்கையும் தன் வாழ்க்கை துணையும் தேர்ந்தெடுத்துக் கொள்ள உரிமை இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உரிமை கொடுத்திருந்த போதிலும் சுயமாக முடிவெடுக்கும் ஒரு பெண்ணையும், ஆணையும் நாடக் காதல், கூலிங்கிலாஸ், ஜீன்ஸ் பேன்ட் என்று கூறி ஒரு சாதி வெறி கூட்டம் அமைப்பு ரீதியாக செயல்பட அனுமதித்து இருப்பதுதான் புரட்சிகர தமிழக அரசியல் ஆகும். ஆகவே, மீண்டும் அம்பேத்கருடைய (ழiனேர உடினந bடைட) இந்து வரைவு மசோதா அதன் பல்வேறு கூறுகளையும் முழுமையாக சட்டமியற்றி அமுலாக போராட வேண்டும். ஏனென்றால் அம்பேத்கர் அவர்கள் அந்த மசோதாவில் குறிப்பிடுவது என்னவென்றால் திருமணத்திற்கான சுதந்திரம் (சiபாவ வடி அயசசயைபந) விவாகாரத்திற்கான சுதந்திரம் (சiபாவ வடி னiஎநசளந) பரம்பரை சொத்தில் உரிமை குழந்தை தத்தெடுத்தலில் உரிமை இறுதியாக பாலியல் உரிமை என்ற அம்சங்களை கொண்டதாகும். எனவே சட்டரீதியான மனம் ஒத்த வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் உரிமை முழுமையாக செயல்படுத்த வேண்டும். இதற்கு மேலாக சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தி கலாச்சார மரபு ஆட்சிகளை கடுமையான தண்டனைகளுக்குட்படுத்த வேண்டும். ஆணவக் கொலைகள் செய்கின்ற சாதி வெறியர்கள் ஒடுக்கப்பட்ட பெண்கள் மீது பாலியல் வன்மங்களை நிகழ்த்தவில்லையா?

–              9884527359

 

Related Posts